Published:Updated:

செலவு ஃபார்முலா மாற்றினால் போதும் நிறைய பணம் மிச்சமாகும்! - நிதித் திட்டமிடலின் அடிப்படை

நிதி திட்டம்
பிரீமியம் ஸ்டோரி
நிதி திட்டம்

நாட்டின் பட்ஜெட் மீது பலரும் காட்டும் அக்கறையும் ஆர்வமும் வீட்டு பட்ஜெட்டில் காட்டுவதில்லை என்பது வேடிக்கை!

செலவு ஃபார்முலா மாற்றினால் போதும் நிறைய பணம் மிச்சமாகும்! - நிதித் திட்டமிடலின் அடிப்படை

நாட்டின் பட்ஜெட் மீது பலரும் காட்டும் அக்கறையும் ஆர்வமும் வீட்டு பட்ஜெட்டில் காட்டுவதில்லை என்பது வேடிக்கை!

Published:Updated:
நிதி திட்டம்
பிரீமியம் ஸ்டோரி
நிதி திட்டம்
ம்மில் பலரும் பொருளாதார நெருக்கடியைச் சந்திப்பதற்கு முக்கியமான காரணம், பட்ஜெட் போடாமலே செலவுகளைச் செய்வதுதான். ஆனால், இனியும் அப்படிக் காலத்தை ஓட்ட முடியாது என்பதை கொரோனா நமக்கு நன்றாகவே கற்றுத் தந்திருக்கிறது. குடும்பத்தில் பட்ஜெட் போடுவது எப்படி என்பது தொடர்பான சரியான வழிகாட்டுதல்களை வழங்க நாணயம் விகடன் மற்றும் அவள் விகடன் இணைந்து `குடும்ப பட்ஜெட் போடுவது எப்படி?’ என்ற நிகழ்ச்சியை ஆன்லைனில் நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் நிதி ஆலோசகர் லலிதா ஜெயபாலன் பேசினார். குடும்ப நிதித் திட்டமிடல் தொடர்பாக அவர் பேசியதன் சுருக்கம் இனி...

குடும்ப பட்ஜெட்தான் முதல் படி..!

``சிறப்பான பொருளாதாரத்துக்கு குடும்ப பட்ஜெட்தான் முதல்படி. நாட்டின் பட்ஜெட்மீது பலருக்கும் அக்கறையும் ஆர்வமும் இருக்கிறது. ஆனால், வீட்டின் பட்ஜெட் மீது அக்கறை காட்டுபவர்கள் மிகவும் குறைவானவர்களே இருக்கிறார்கள். மேலும், குடும்ப பட்ஜெட் என்பது குடும்பத் தலைவனோ, தலைவியோ செய்யும் விஷயமாக இருக்கிறது. இப்படி இல்லாமல், குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே கலந்துபேசி பட்ஜெட் போடுவதே சிறந்தது.

செலவு ஃபார்முலா மாற்றினால் போதும் நிறைய பணம் மிச்சமாகும்! - நிதித் திட்டமிடலின் அடிப்படை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குடும்ப பட்ஜெட் போடுபவர்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். படித்து முடித்து வேலைக்குச் செல்லும் இளம்வயதினர், இதில் முதல் வகை. அவர்கள் மிகவும் சுதந்திரமானவர்கள். குறைவான செலவுகள் மட்டுமே அவர்களுக்கு இருக்கும். இதேபோல, குறைவான செலவுகள் செய்யும் மற்றொரு வகையினர், ஓய்வு பெற்றவர்கள். இந்த இரண்டு வகையினர்களுக்கும் செலவுகள் ஏறக்குறைய ஒரே மாதிரியாகவே இருக்கும். ஆனால், சிங்கிள் இன்கம் மற்றும் டபுள் இன்கம் ஃபேமிலிகளைச் சேர்ந்தவர்களே பல பிரச்னைகளில் சிக்கித் தவிக்கிறார்கள்.

முதலீட்டுக்கு குறைந்தபட்சம் 5 சதவிகிதத்தையாவது மாதச் சம்பளத்திலிருந்து ஒதுக்குங்கள். இந்த முதலீடுதான் உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எட்டு வகை செலவுகள்..!

சிங்கிள் இன்கம் மற்றும் டபுள் இன்கம் ஃபேமிலிகளின் செலவினங்களை எட்டுப் பிரிவுகளாகப் பிரிக்கலாம். வீட்டு வாடகை அல்லது வீட்டுக் கடன் இ.எம்.ஐ, வாகனம் அல்லது கேட்ஜெட்டுகளுக்கான செலவு, கல்விச் செலவு, மளிகைப் பொருள்கள் வாங்குவது, மருத்துவச் செலவு, பொழுது போக்குச் செலவு, இன்ஷூரன்ஸ் பாலிசிகளுக் கான செலவு, முதலீட்டுச் செலவு என மொத்தம் எட்டு வகையான செலவுகள் உள்ளன.

நிதி திட்டம்
நிதி திட்டம்

`என்னதான் பட்ஜெட் போட்டாலும், வர்றதும் தெரியல, போறதும் தெரியல...’ எனப் பலரும் புலம்புவார்கள். இது நிஜம்தான். எனினும், நம் செலவுகளில் சில மாற்றங்களைச் செய்தால் இத்தகைய சூழ்நிலையிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள முடியும். இதற்கு நம்மால் என்ன மாதிரியான மாற்றங்களைச் செய்ய முடியும் என ஒவ்வொருவரும் சிந்திக்கத் தொடங்க வேண்டும். சிந்தனைதான் செயல்களுக்கு வடிவம் கொடுக்கும்.

மூன்று வழிகளில் மாற்றம்..!

நம் வாழ்க்கையில் மூன்று வழிகளில் நம்மால் மாற்றங்களைக் கொண்டு வர முடியும். முதலில் `நாம் எங்கே நிற்கிறோம்’ என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, எந்தெந்த வழிகளில் நம்முடைய செலவுகள் உள்ளன என்பதைத் தெரிந்துகொள்வது மிகவும் அவசியமானது. இதற்கு பேப்பரும் பேனாவும் எடுத்து கணக்குகளை எழுதிதான் ஆக வேண்டும். செலவுகளுக்கு சதவிகிதங்களைக் கணக்கிட்டுப் பார்க்க வேண்டும். இதைச் செய்தால்தான் நம் உண்மையான, தேவையான செலவுகளை அறிந்துகொண்டு தேவையில்லாத செலவுகளைத் தவிர்க்க முடியும்.

அடுத்தபடியாக, எந்த இலக்கை நோக்கி நாம் பயணிக்கிறோம் என்பதை முடிவு செய்ய வேண்டும். வாழ்க்கைப் பயணத்தில் எளிய இலக்கு ஒன்றைப் பொருளாதார ரீதியாக முடிவு செய்ய வேண்டும். நாம் எங்கே நிற்கிறோம் என்பது தெரிந்த பிறகு, அடுத்து நாம் எங்கே செல்லப்போகிறோம் என்பதும் நமக்கு கண்டிப்பாகத் தெரிய வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாற்ற வேண்டிய ஃபார்முலா..!

இறுதியாக பட்ஜெட்டுக்கு வர வேண்டும். மேலே சொன்ன எட்டு வகைகளுக்கும் செலவுகளைப் பிரித்துக் கணக்கிடுங்கள். நாம் இவ்வளவு நாளாக `வருமானம் (Income) - செலவு (Expense) = முதலீடு (Investment)’ என்ற ஃபார்முலாவைக் கடைப்பிடித்து வந்தோம். அதாவது, வருமானத்திலிருந்து செலவெல்லாம் போக மிச்சமிருந்த பணத்தை முதலீடு செய்தோம். இப்படி இருந்தால் பணம் வருவதும் தெரியாது, போவதும் தெரியாது. இந்த ஃபார்முலாவைக் கொஞ்சம் மாற்றினால், நாம் நிறைய பணத்தைச் சேர்க்க முடியும்.

குடும்ப பட்ஜெட்
குடும்ப பட்ஜெட்

பல விதமான செலவினங்கள் இருக்கும்போது, இதை எப்படி மாற்ற முடியும் என்ற கேள்வி இருக்கும். எனவே, `வருமானம் (Income) - முதலீடு (Investment) = செலவு (Expense)’ என்று ஃபார்முலாவை மாற்றினால், சேமிப்பு மற்றும் முதலீடு செய்த தொகையை நம்மால் செலவு செய்ய முடியும். இந்தச் சின்ன மாற்றம் நம் வாழ்க்கையை சிறப்பாக மாற்றும்.

இதற்கு, சம்பளம் வந்ததும் குறிப்பிட்ட சதவிகிதம் பணத்தை எடுத்து வைத்துவிட்டு, மீதி இருக்கும் தொகையிலிருந்து செலவுகளைச் செய்யத் தொடங்குங்கள். முதலீடு என்பது மிகவும் அவசியமான ஒன்று. உங்கள் சிறு வயதில் உண்டியலில் நீங்கள் காசு சேர்த்த மாதிரி இனி முதலீடு செய்யத் தொடங்குங்கள். சின்ன மைண்ட்செட்தான் இது. ஆனால், உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் மாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்தும். மூன்று மாதங்கள் இதை முயற்சி செய்தால் அது பழக்கமாகவே மாறிவிடும்.

அடுத்ததாக, வேலை கிடைக்கும் இடத்தில் வீட்டை மாற்றிக்கொள்ளலாம், இதனால் வாடகை, நேரம் போன்ற விஷயங்களை மீதம் செய்யலாம். சம்பளத்தில் 30 சதவிகிதத்துக்கு மேல் வீட்டுக்கென வாடகை அல்லது இ.எம்.ஐ-க்கு செலவழிக்க வேண்டாம். இதை மீறும்போது மற்ற செலவினங்கள் பாதிக்கப்படும். குழந்தைகளைப் பள்ளிகளில் சேர்ப்பதில் மிகப்பெரிய குழப்பம் ஏற்படும். பெரும்பாலும் அனைத்துப் பள்ளிகளுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசம் பள்ளிக்கட்டணம் என்பதுதான். பள்ளிகளில் வசதிகளில் கூடுதல், குறைவுகள் இருக்கலாம். பெரிய பள்ளிகளில் படித்தால் மட்டும்தான் எதிர்காலம் பெரியதாக இருக்கும் என்ற எண்ணத்தைப் பெற்றோர்கள் விட வேண்டும். எனவே, கல்விக்கட்டணத்திலும் அதிக கவனத்தைச் செலுத்த வேண்டும்.

கொரோனா காலத்தில் ஷாப்பிங் செலவுகள் மிகப்பெரிய சேமிப்பாக இருக்கும். ஷாப்பிங் செய்த பொருள்களைக் கடந்த ஒருவருடத்தில் எத்தனை முறை பயன்படுத்தியிருக்கிறோம் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். அப்போதுதான் அந்தப் பொருள் தேவையா அல்லது இல்லையா என்பது புரியும். பழக்கவழக்கங்களை மாற்றுவது கடினம்தான். எனினும், அதை மாற்ற முயற்சிகளை எடுக்கலாம்.

எல்லா செலவுகளையும் முடித்த பிறகு இறுதியாக கைகளில் காசு இருக்காது. ஆனால், முதலீடு என்பது மிகப்பெரிய கனவாக பலருக்கும் மாறிவிடுகிறது. அப்படி இருக்கும் போது, மேற்சொன்ன விஷயங்களில் சிறிது மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ளும்போது முதலீடுகளைச் செய்ய முடியும்.

பணம் வைத்துதான் பணத்தை எடுக்க முடியும். ஆனால், பணத்தை அதிகரிக்க வேண்டும் என்றால், பணம் மட்டும் போதாது. காலமும் அறிவும் கூடவே தேவை.

நிதி தொடர்பான நிறைய டிப்ஸ்கள் உள்ளன. அவற்றைப் படித்து செலவு செய்யலாம். முதலீட்டுக்குக் குறைந்தபட்சம் 5% மாதச் சம்பளத்திலிருந்து ஒதுக்குங்கள். இவைதான் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி, நம் வாழ்க்கையை சிறப்பாக்கும்’’ என்றார். இதையடுத்து வாசகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார் லலிதா ஜெயபாலன்.

இந்த நிகழ்ச்சிக்கான வீடியோவைப் பார்க்க: https://www.facebook.com/NaanayamVikatan/videos/1887373431404919/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism