Published:Updated:

சந்தை ஏற்ற இறக்கம்... ஈக்விட்டி ஃபண்ட் முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

சுனில் சுப்ரமணியம்
பிரீமியம் ஸ்டோரி
சுனில் சுப்ரமணியம்

சிறப்புப் பேட்டி

சந்தை ஏற்ற இறக்கம்... ஈக்விட்டி ஃபண்ட் முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

சிறப்புப் பேட்டி

Published:Updated:
சுனில் சுப்ரமணியம்
பிரீமியம் ஸ்டோரி
சுனில் சுப்ரமணியம்

பல மாத இறக்கத்துக்குப் பின் தற்போது பங்குச் சந்தை சிறிது ஏற்றம் கண்டிருக் கிறது. இந்த ஏற்றம் இனி தொடருமா அல்லது மீண்டும் இறக்கம் காணுமா என்கிற கேள்வி எழுந்துள்ள நிலையில், பல்வேறு கேள்விகளுடன் சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரியுமான சுனில் சுப்ரமணியத்தை சந்தித்தோம். நிதிச் சேவைத் துறையில் 35 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரான சுனில் சுப்ரமணியம் நம் கேள்விகள் அனைத்துக்கும் பதிலளித்தார். இதோ அவர் நமக்களித்த சிறப்புப் பேட்டி...

சுனில் சுப்ரமணியம்
சுனில் சுப்ரமணியம்

இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு (Forex Reserves) கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைவாக உள்ளது. இதேபோல், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் மிகவும் வீழ்ச்சி கண்டு ரூ.80 அளவில் உள்ளது. இவை இந்தியப் பொருளாதாரம் மற்றும் பங்குச் சந்தையில் என்ன மாதிரி பாதிப்பை ஏற்படுத்தும்?

“ரிசர்வ் வங்கியானது இந்திய நாணயத்தின் ஏற்ற இறக்கத்தைக் கட்டுப்படுத்த கையிருப்பில் உள்ள அந்நிய செலாவணியைப் பயன் படுத்தியுள்ளது. நமக்குத் தேவையான இறக்குமதியை சமாளிக்க போதுமான அளவுக்கு இன்னும் அந்நிய செலாவணியானது கையிருப்பில் உள்ளது. அதனால் அது குறித்து நாம் கவலைப்பட ஒன்றுமில்லை.

இந்திய ரூபாய் மதிப்பு குறைவதால்தான் அமெரிக்க டாலர் வலுப்படுகிறது. இதற்கு இந்தியப் பொருளா தாரம் பலவீனமடைகிறது என்று அர்த்தம் அல்ல. பொருளாதாரத்தின் மீதான தாக்கம் என்பது வர்த்தகப் பற்றாக்குறை மற்றும் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும். இதனால், பணவீக்கம் உயரும். மேலும், உள்கட்டமைப்பு பணிகளுக்கு செலவிடும் மத்திய அரசின் திறனும் பாதிப்படையலாம். பங்குச் சந்தையில் அந்நிய நிதி நிறுவனங்களின் முதலீடு குறைவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.’’

கச்சா எண்ணெய் 100 டாலர் அளவுக்கு இறங்கி இருப்பதால் எந்தத் துறை பெரிதும் லாபம் அடையும்?

“பெட்ரோல், டீசல், எல்.பி.ஜி விலை குறைய வாய்ப்பு உண்டு. இதனால், வாகனங்கள் வாங்குவது அதிகரிக்கும். வாகனத் துறை அதிகமாக லாபம் அடையும்.”

இந்தியா மற்றும் அமெரிக்காவில் பணவீக்க விகிதம் முறையே 7, 9 சதவிகிதமாக உள்ளது. இவற்றின் பாதிப்பு என்னவாக இருக்கும்?

“அமெரிக்கப் பணவீக்க விகிதத்தையும் இந்தியப் பணவீக்க விகிதத்தையும் ஒப்பிட முடியாது. அமெரிக்க பணவீக்கம் 9% என்பது அந்த நாட்டின் நீண்ட கால சராசரியைவிட அதிகம். மேலும், அமெரிக்காவின் தற்போதைய ஜி.டி.பி வளர்ச்சி முந்தைய வளர்ச்சியை விட நான்கு மடங்கு அதிகமாக உள்ளது. அதேசமயம், இந்தியாவின் பணவீக்கம் 7% என்பது நமது நீண்ட கால சராசரிக்கு சமம். மேலும், நமது தற்போதைய ஜி.டி.பி வளர்ச்சி விகிதத்துக்கு சமமாக உள்ளது. எனவே, அமெரிக்க பணவீக்க விகிதமும் இந்திய பணவீக்க விகிதமும் ‘சுண்ணாம்பு மற்றும் பாலாடைக் கட்டி’ (‘Chalk and Cheese’) போல வேறுபட்டவை; அவற்றை ஒன்றுடன் ஒன்றை ஒப்பிட முடியாது.”

சந்தை ஏற்ற இறக்கம்... ஈக்விட்டி ஃபண்ட் முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

பணவீக்கம் அதிகரிப்பு மற்றும் பொருளாதார மந்தநிலை ஆகியவற்றில் இருந்து நமது முதலீடுகளைப் பாதுகாப்பது எப்படி?

“பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் நீண்ட காலத்தில் பணவீக்கத்தால் பயனடைவே செய்கின்றன. இது எப்படி என்று சொல்கிறேன். பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் அவற்றின் தயாரிப்புகள் மற்றும் பொருள்களின் விலையை உயர்த்தியுள்ளன. இந்த விலை உயர்வால் விலைவாசி உயர்கிறது. அதாவது, பணவீக்க விகிதம் அதிகரிக்கிறது. அதேநேரத்தில், அந்த நிறுவனங்களின் லாபமும் அதிகரிக்கிறது. அப்போது அந்த நிறுவனப் பங்குகளின் விலை அதிகரிக்கிறது. எனவே, பங்குச் சந்தை முதலீடு என்பது பணவீக்கத்துக்கு எதிரான சிறந்த ஹெட்ஜாக அதாவது, பணவீக்கத்தைவிட சிறந்த வருமானம் பெறும் வழியாக இருக்கிறது.

வளர்ச்சிக் கண்ணோட்டத்தில் மந்தநிலை (Recession) மோசமானது என்றாலும், நம் நாடு இப்போது எந்த மந்தநிலையையும் எதிர்கொள்ள வில்லை என்பதை நினைவில் கொள்வது அவசியம். மேலும், அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகளில் நீடித்த மந்தநிலை காரணமாக கரன்சிகளைக் கூடுதலாக அச்சடித்தால் (Quantitative Easing - QE) அது இந்தியா போன்ற வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள பங்குச் சந்தைகளில் குவியவே வழிவகுக்கும்.”

தற்போதைய நிலையில், எந்தெந்தத் துறைகள் முதலீடு களுக்கு கவர்ச்சிகரமானவையாக இருக்கின்றன?

“முக்கியமாக மூன்று துறைகளைக் குறிப்பிடலாம். 1. வங்கி, வங்கிசாரா நிதிச் சேவை நிறுவனங்கள் (NBFC) மற்றும் நிதிச் சேவைகள்.

2. நுகர்வோர் விருப்புரிமை (Consumer Discretionary).

3. மூலதனப் பொருள்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகள் சார்ந்த நிறுவனப் பங்குகள் தற்போது முதலீட்டுக்குக் கவர்ச்சிகரமானவையாக உள்ளன.”

அடுத்த மூன்று முதல் ஐந்தாண்டுகளில் எந்தெந்த தீம்களின் (Themes) அடிப்படையில் பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம்?

“முக்கியமாக மூன்று கருத்துகளைக் குறிப்பிடலாம். 1 சேவைகள் 2. நிதிச் சேவைகள் 3. நுகர்வு.’’

இப்போது, ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் முதலீட் டாளர்கள் அவசியம் செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன?

‘‘ஏற்கெனவே செய்துவரும் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (Systematic Investment Plan - SIP) முறையிலான முதலீட்டை விடாமல் தொடரவும். மேலும், கூடுதல் தொகை கைவசம் இருந்தால், அதை அடிஷனல் பர்ச்சேஸாக முதலீடு செய்யவும். புதிதாக முதலீட்டை மேற் கொள்பவர்கள் ஈக்விட்டி ஃபண்டுகளில் இப்போது தாராளமாக பணத்தை போட லாம். ஆனால், முதலீட்டுக் காலம் குறைந்தபட்சம் ஓராண் டுக்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும். முதலீட்டுக் காலம் குறைந்தபட்சம் மூன்றாண்டுகள், ஐந்தாண்டுகள் என்கிறபட்சத்தில் நல்ல வருமானம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. முதலீட்டுக் காலம் ஓராண்டுக்குக் குறைவாக இருந்தால், ஈக்விட்டி ஃபண்டு களில் முதலீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது.”

தற்போதைய பங்குச் சந்தையின் ஏற்ற இறக்க நிலையில் பங்குச் சந்தை சார்ந்த சிறு முதலீட்டாளர்களுக்கு உங்களின் ஆலோசனை என்ன?

“ஏற்கெனவே சொன்னது போல், எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வரவும். ஏற்கெனவே செய்து வரும் எஸ்.ஐ.பி முதலீட்டைத் தொடரவும்.

புதிதாக முதலீட்டை ஆரம் பிப்பவர்கள், நிறுவனப் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் ஈக்விட்டி ஹைபிரிட் (Equity Hybrid) ஃபண்டுகளில் முதலீடு செய்யவும்.

அக்ரசிவ் ஹைபிரிட் ஃபண்ட், பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட், ஈக்விட்டி சேவிங்ஸ் ஸ்கீம் ஃபண்ட் ஆகியவற்றில் முதலீடு செய்யலாம்” என்று பேசி முடித்தார் சுனில் சுப்ரமணியம்.

இதுவரை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யாதவர்கள் இனியாவது முதலீடு செய்யத் தொடங்கலாமே!