நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

கொஞ்சம்தான் ரிஸ்க்... வருமானமோ பெஸ்ட்!

முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
News
முதலீடு

புதிய முதலீட்டாளர்களுக்குக் கைகொடுக்கும் பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டுகள்! - C O V E R S T O R Y

கொரோனா தொற்றுநோய், உலகத்தையே மாற்றி விட்டது. மனிதர்கள் சிந்திப்பதும், அரசாங் கங்கள் சிந்திப்பதும் தனிமனிதர்களின் செயல்பாடுகளும் பொறுப்புகளும் பெரிய அளவில் மாறியிருக்கிறது. முன்பெல்லாம் ஒரு நாட்டின் எதிரி, மற்றொரு நாடாக இருந்தது. அதன்பிறகு, பயங்கரவாத தாக்குதலுக்கு பல நாடுகளும் அஞ்சி, அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தன. இவற்றையெல்லாம்விட அதிபயங்கரமானது கொரோனா நோய்த்தொற்றுதான் என்பது தற்போது நிரூபணமாகி இருக்கிறது.

முதலீடு தொடர்பான விஷயங் களிலும் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது கொரோனா. முதலீட்டாளர்கள் பலரும் இந்தக் காலத்தில்தான் முதலீடு என்பது எந்த அளவுக்கு அவசியம் என்பதை உணர்ந் தார்கள். பல லட்சம் ஊழியர்களின் வேலை திடீரென பறிபோனது. இன்னும் பல லட்சம் பேர்களுக்கு சம்பாத்தியம் கணிசமாகக் குறைந்தது. இதுபோன்ற சமயத்தில் ஆபத்பாந்தவனாக அவர்களுக்கு உதவியது அவர்களின் சேமிப்பு மற்றும் முதலீடுதான். சேமிப்பு மற்றும் முதலீட்டின் அவசியத்தை அப்போதுதான் பலரும் உணர்ந்தார்கள். வழக்கமான வங்கிச் சேமிப்பு என்பதைத் தாண்டி, பங்குச் சந்தை முதலீடு, மியூச் சுவல் ஃபண்ட் முதலீடு என்று பலரும் யோசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். கடந்த ஆண்டின் 10 மாதங்களில் சுமார் ஒரு கோடி புதிய டீமேட் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

சொக்கலிங்கம் பழனியப்பன்,   டைரக்டர், 
ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www.
prakala.com)
சொக்கலிங்கம் பழனியப்பன்,   டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www. prakala.com)

இந்தப் புதிய முதலீட்டாளர்களுக்கு சந்தை இறங்கினாலும் பயம், ஏறினாலும் பயம். கொரோனா காலத்தில் சந்தை இறங்கிக்கொண்டே இருக்கிறதே எனப் பயந்து, சந்தையை விட்டு ஒதுங்கியவர்கள் பல நூறு பேர். சந்தை இன்னும் இறங்குமா, எங்கு போய் நிற்கும் இந்த இறக்கம் என ஓயாமல் கேட்டவர்களும் உண்டு. ஆனால், சந்தை நன்றாக ஏறியதைப் பார்த்து, முதலீட்டைத் திரும்ப எடுக்காமலே இருந்திருக்கலாமே என்று இப்போது நினைக்கிறார்கள். அவர் மீண்டும் எந்த ஃபண்டுகளில் முதலீடு செய்தால், லாபம் பார்க்க முடியும் என்று கேட்கத் தொடங்கி யிருக்கிறார்கள்.

இது மாதிரி கேட்கிறவர்களுக்கும் தற்சமயத்தில் புதிதாக சந்தையில் நுழைய நினைப்பவர்களுக்கும், ஏற்கெனவே இருக்கும் ஈக்விட்டி ஃபண்ட் முதலீட்டில் ரிஸ்க்கைக் குறைக்க நினைப்பவர்களுக்கும் ஒரு சரியான முதலீடு வேண்டும் என்றால், அதுதான் பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டுகள் (Balanced Advantage Funds). இவை டைனமிக் அஸெட் அலொகேஷன் ஃபண்டுகள் (Dynamic Asset Allocation Funds) எனவும் அழைக்கப்படுகின்றன.

இந்த வகை ஃபண்டுகள் ஈக்விட்டி ஃபண்டுகளில் ஒரு கேட்டகிரி ஆகும். இந்த ஃபண்டு களில் உள்ள சிறப்பு என்னவென்று பார்த்தால், சந்தை உச்சத்தில் இருக்கும்போது தங்களது ஈக்விட்டி ஒதுக்கீட்டைக் குறைத் துக்கொள்கின்றன. அதே சமயத்தில், சந்தை பாதாளத்தில் இருக்கும்போது தங்களது ஈக்விட்டி ஒதுக்கீட்டை அதிகப் படுத்திக்கொள்கின்றன.

உதாரணத்துக்கு, கடந்த 2020 மார்ச் / ஏப்ரல் மாதங்களில் இந்த வகை ஃபண்டுகள் தங்களது போர்ட்ஃபோலியோவில் கிட்டத் தட்ட சுமார் 80% வரை பங்கு சார்ந்த முதலீட்டை வைத் திருந்தன. தற்போது இவற்றின் ஈக்விட்டி போர்ஷன் சுமார் 30 சதவிகிதமாக உள்ளது.

பொதுவாக, இந்த வகை ஃபண்டுகள் சந்தையின் நிலையைப் பொறுத்து, 20 – 90 சதவிகிதத்தை ஈக்விட்டியில் வைத்துக்கொள்ளும். பல ஃபண்டுகள் 30 – 80% பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய் கின்றன. எஞ்சியதை பாண்டுகள் மற்றும் ஆர்பிட்ரேஜ் வாய்ப்பு களில் வைத்துக்கொள்கின்றன.

குறைவான ரிஸ்க்கில், வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டுகளைவிட சற்று அதிகமான வருமானத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த ஃபண்டுகள் பொருத்தமானதாக இருக்கும்.

முதலீடு
முதலீடு

இந்த ஃபண்ட் திட்டங்கள் மூலம் நல்லதொரு வருமானத்தை எதிர்பார்ப்பவர்கள் முதலீட்டுக் காலத்தைக் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளாக வைத்துக் கொள்வது சிறந்தது. எஸ்.ஐ.பி மற்றும் மொத்த முதலீடு செய்வதற்கும் இந்த ஃபண்டுகள் உகந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த வகை ஃபண்டுகளில் கவனிக்க வேண்டிய அருமை யான விஷயம் என்ன வென்றால், ஈக்விட்டியிலிருந்து கடன் சார்ந்த முதலீட்டுக்கு மாற்றும்போது அதை நாமாகச் செய்தால் வரி கட்ட வேண்டியிருக்கும். அதேபோல், கடன் சார்ந்த முதலீடுகளிலிருந்து ஈக்விட்டிக்கு மாற்றும்போதும், வரி கட்ட வேண்டிவரும். அதையே இந்த ஃபண்ட் நிறுவனங்கள் செய்யும்போது வரி ஏதும் கிடையாது என்பது குறிப்பிடத் தக்கது.

மேலும், ஈக்விட்டி ஃபண்டு களுடன் ஒப்பிடும்போது, குறைவான ஏற்ற இறக்கம் இருப்பதால், இந்த வகை ஃபண்டுகள் எஸ்.டபிள்யூ.பிக்கு (SWP - Systematic Withdrawal Plan) மிகவும் பொருத்தமாக இருக்கும்.

இத்துடன் மிக முக்கியமான விஷயம், குறைந்த அளவிலான வருமான வரி (tax efficient). ஆகவே, ஓய்வுக்காலத்தில் இரண்டாம் வருமானத்தை ஏற்படுத்த விரும்புபவர் களுக்கும் இந்த ஃபண்ட் கனகச்சிதமாகப் பொருந்தும்.

இந்த கேட்டகிரியில் நன்றாகச் செயல் பட்டு வரும் ஃபண்டுகளின் விவரங்களைக் கீழே கொடுத்துள்ளோம்.

கொஞ்சம்தான் ரிஸ்க்... வருமானமோ பெஸ்ட்!

ஐசிஐசிஐ புரூ பேலன்ஸ்டு அட்வாண்டேஜ் ஃபண்ட்

இந்த கேட்டகிரியில் இந்த ஃபண்ட் தான் முன்னணியில் உள்ளது. தற்போது இந்த ஃபண்ட் ரூ.28,000 கோடிக்கும் அதிகமான சொத்துகளை நிர்வகித்து வருகிறது.

இந்த ஃபண்ட் எந்த அளவுகோலை வைத்து தனது சொத்து ஒதுக்கீட்டை மாற்றுகிறது என்று நீங்கள் கேட்கலாம். சந்தைக் குறியீட்டின் பி/பிவி (P/BV - Price/ Book Value) என்ற அளவுகோலை வைத்துதான் தனது போர்ட்ஃபோலி யோவில் எந்த அளவு ஈக்விட்டி இருக்க வேண்டும், எந்த அளவு பாண்டுகள் இருக்கு வேண்டும், எந்த அளவு ஆர்பிட்ரேஜ் இருக்க வேண்டும் என்பதை நிர்ணயம் செய்கிறது.

இந்த ஃபண்டில் நிர்வகிக்கப்படும் தொகை அதிகமாக இருப்பதால், ஐந்து ஃபண்ட் மேனேஜர்களைக்கொண்டு இந்த ஃபண்ட் நிர்வகிக்கப்படுகிறது. இந்த கேட்டகிரியில் நீண்டகால அனுபவம் கொண்ட ஃபண்டும் இதுதான்.

எடெல்வைஸ் பேலன்ஸ்டு அட்வான் டேஜ் ஃபண்ட்

இந்த ஃபண்ட் தனது அஸெட் அலொகேஷனுக்கு தனித்துவம் வாய்ந்த ஒரு முதலீட்டு முறையைப் பின்பற்றுகிறது. இந்த முதலீட்டு முறையை இ.இ.ஹெச்.ஐ (EEHI - Edelweiss Equity Health Index) மாடல் என இந்த நிறுவனம் அழைக்கிறது. இந்த முதலீட்டு முறையின்மூலம் சந்தையினுடைய ஏற்றத்தை அல்லது இறக்கத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறது.

உதாரணமாக, சந்தை ஏறும்போது தனது ஈக்விட்டி ஒதுக்கீட்டை இந்த ஃபண்ட் அதிகரித்துக்கொள்ளும். அதேபோல, இறங்கும்போது, தனது ஈக்விட்டி ஒதுக்கீட்டைக் குறைத்துக் கொள்ளும். இந்த மாடல், இந்த கேட்டகிரியில் உள்ள பிற ஃபண்டு களைவிட சற்று மாறுபட்டது.

இந்த மாடலை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருவதால், இந்த ஃபண்டின் வருமானம் காளைச் சந்தையில், பிற ஃபண்டுகளுடன் ஒப்பிடும்போது அதிகமாக உள்ளது. அதேபோல, கரடிச் சந்தையில் நஷ்டத்தையும் நன்றாகக் கட்டுப் படுத்துகிறது. இந்தக் கேட்டகிரிக்குள் சற்று ரிஸ்க்குடன் கூடிய அதிக வருமானத்தை எதிர்பார்ப்பவர் களுக்கு இந்த ஃபண்ட் மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.

யூனியன் பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட்

இந்த ஃபண்ட் தனது அஸெட் அலோகேஷனுக்கு யூ.எம்.பி.ஐ (UMPI - Union Market Pulse Indicator) என்ற மாடலைப் பயன்படுத்துகிறது. இந்த மாடலின்படி, சந்தை ஏறும்போது ஈக்விட்டி அலொகேஷனை இந்த ஃபண்ட் குறைத்துக்கொள்ளும். சந்தை இறங்கும்போது அதற்கு நேர் எதிராகச் செயல்படும். இந்த மாடலில் பி/பிவி (P/BV), டிவிடென்ட் யீல்டு, இவி/ எபிட்டா (EV/EBITDA – Enterprise Value/ Earnings Before Interest, Depreciation, Tax and Amortisation) மற்றும் 10 வருட இந்திய அரசாங்க பாண்டின் யீல்டு போன்ற நான்கு அளவுகோள்களை வைத்து ஈக்விட்டி ஒதுக்கீட்டை முடிவு செய்கிறது. இந்த கேட்டகிரியில் இந்த ஃபண்ட் தொடர்ச்சியாக நல்ல வருமானத்தைக் கொடுத்து வருகிறது.

டி.எஸ்.பி டைனமிக் அஸெட் அலொகேஷன் ஃபண்ட்

இந்த ஃபண்ட் 20 – 90% அளவுக்கு தனது ஈக்விட்டி அலொகேஷனை, பங்குச் சந்தை நிலையைப் பொறுத்து வைத்துக்கொள்ளும். ஃபண்ட மென்டல் மற்றும் டெக்னிக்கல் காரணிகளை வைத்து ஈக்விட்டி ஒதுக்கீட்டை முடிவு செய்கிறது. சந்தை கவர்ச்சிகரமாக உள்ளதா என்பதை பி/இ (P/E – Price/ Earnings) மற்றும் பி/பிவி ஆகிய இரண்டையும் வைத்து முடிவு செய்கிறது.அதேபோல் டெக்னிக்கல் டிரெண்டை வைத்து, கூடுதலாக ஈக்விட்டி ஒதுக்கீடு செய்யலாமா, வேண்டாமா என்பதை முடிவு செய்கிறது. இந்த கேட்டகிரியில் கன்ஸர்வேட்டிவ்வாகச் செயல்பட்டு வரும் ஃபண்ட் இதுவாகும்.

ஆதித்ய பிர்லா சன் லைஃப் பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட்

இந்த ஃபண்ட் தனது ஈக்விட்டி அலொகேஷனை முடிவு செய்ய பி/இ அளவுகோலைப் பயன்படுத்துகிறது. இந்த ஃபண்ட் 30 – 80 சதவிகிதத்தை ஈக்விட்டியில் வைத்துக் கொள்கிறது. பங்கு சார்ந்த முதலீட்டில் மல்ட்டிகேப் அப்ரோச்சைப் பயன்படுத்துகிறது. கடன் சார்ந்த முதலீட்டில் அக்ரூவல் ஸ்ட்ராடஜியைப் கடைப்பிடிக்கிறது. அதேபோல, நிகர ஈக்விட்டி ஏற்ற இறக்கத்தைச் சமாளிக்க டெரிவேட்டிவ்வைப் பயன்படுத்துகிறது.

பிட்ஸ்

ப்பானைச் சேர்ந்த சுஸூகி மோட்டார் நிறுவனத்தின் தலைவராக கடந்த 43 ஆண்டுகளாக பதவி வகித்த ஒசாமு சுஸூகி வரும் ஜூன் மாதத்தில் ஓய்வு பெறவிருக் கிறார். சுஸூகி நிறுவனம் இந்தியாவுக்கு வரக் காரணமாக இருந்தவர் இவர்தான்!