சினிமா
Published:Updated:

தாழ் திறவாய்! - கதவு 22 - பானைக்கடை

தாழ் திறவாய்
பிரீமியம் ஸ்டோரி
News
தாழ் திறவாய்

கபிலன், ஓவியம்: திண்டுக்கல் தமிழ்ப்பித்தன்

மண்தாமரை பூத்தது
குயவனின் சேற்றில்
சலிக்கப்பட்ட
ஆத்துமணல் கலந்த
களிமண்ணில்
கொஞ்சம் வியர்வை தெளித்து
சக்கரம் நடுவே
குத்தவைத்து
பதினாலுமுறை சுத்தியதில்
ஆறுபானை செய்யலாம்
என்றார்
கொசப்பேட்டை தொழிலாளி

நூலால் அறுத்து
பின்புற ஓட்டையைத்
தட்டித்தட்டி
பூரணம் செய்வர்

தாழ் திறவாய்! - கதவு 22 - பானைக்கடை
labsas

காய வைத்த பானையை
யானைச் சாணம்
வைக்கோல் கலந்து
சூளையில் வேக வைத்ததில்
உடைந்ததுபோக உருப்படியானவற்றை
சுமந்துகொண்டு
மயானத்தை விட்டு வெளியேறும்
மனிதனாய்
விற்பனைக்கு வீதி வருவர்

உழைப்பாளியின் உண்டியலைத்
தட்டிப்பார்த்து
அநியாயத்துக்கு விலை கேட்பர் கொடுப்பதை
கோவணத்தில் முடிபோடும்
அம்மண ஆன்மா
காவிச்சாயம் பூசப்பட்ட பானையை
செங்கல் அடுப்பில் எரித்து
பொங்கல் கொண்டாடுவது
தமிழர் திருநாள்.