பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

கவிதை: பாடா அஞ்சலி

கவிதை
பிரீமியம் ஸ்டோரி
News
கவிதை

வ.ஐ.ச.ஜெயபாலன்

திர்கிற காட்டில் 

எந்த இலைக்கு நான் அஞ்சலி பாடுவேன்? 

சுனாமி எச்சரிக்கை கேட்டு

மலைக்காடுகளால் இறங்கி

கடற்கரைக்குத் தப்பிச் சென்றவர்களின் 

கவிஞன் நான்.

பிணக்காடான இந்த மணல்வெளியில் 

எந்தப் புதைகுழியில் எனது மலர்களைத் தூவ... 

யாருக்கு எனது அஞ்சலிகளைப் பாட...

கவிதை: பாடா அஞ்சலி

வென்றவரும் தோற்றவரும் புதைகிற உலகோ

ஒரு முதுகாடாய் உதிர்க்கிறது. 

எந்தப் புதைகுழியில் என் மலர்களைச் சூட

எந்த இலையில் என் அஞ்சலிகளை எழுத... 

ந்த உலகிலும் பெரிய இடுகாடெது?

பல்லாயிரம் சாம்ராச்சியங்களைப் புதைத்து

புதிய கொடிகள் நாட்டப்படுகிற 

பெரிய அடக்கத் தலம் அது.

நடுகற்களின் கீழ்

அடிபட்ட பாம்புகளாய் 

கிழிந்த எங்களூர்ச் சிறுமிகளின் 

இறுதிச் சாபங்கள் அலைகிறதே.

எந்த சாபத்துக்கு நான் கல்வெட்டுப் பாடுவேன்.

கலும் வலசைப் பறவைகளின்

புலம்பல்கள் தேயும் மண்ணில்

மொட்டை மரங்கள் பாடுகின்றன

``வரலாறு காடுகளைப் பூக்கச் செய்யும்.”