Published:Updated:

`ப்ளீஸ் எங்க ஊரில் மணல் குவாரி அமைக்காதீங்க!’ - அரசுக்குக் கோரிக்கை வைக்கும் குழந்தைகள்

`ப்ளீஸ் எங்க ஊரில் மணல் குவாரி அமைக்காதீங்க!’ - அரசுக்குக் கோரிக்கை வைக்கும் குழந்தைகள்
News
`ப்ளீஸ் எங்க ஊரில் மணல் குவாரி அமைக்காதீங்க!’ - அரசுக்குக் கோரிக்கை வைக்கும் குழந்தைகள்

`ப்ளீஸ் எங்க ஊரில் மணல் குவாரி அமைக்காதீங்க!’ - அரசுக்குக் கோரிக்கை வைக்கும் குழந்தைகள்

திருவையாறு அருகே மணல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு. கிராம மக்கள் நடத்தும் தொடர் போராட்டத்தில் பெரியவர்களுடன் அந்த ஊர் குழந்தைகள் பள்ளி மாணவர்களும் கரம் கோத்துக் கலந்துகொண்டு ஆச்சர்யப்படுத்தி வருகின்றனர். ஊரைக் காப்பதற்காக `ப்ளீஸ் எங்க ஊரில் மணல் குவாரி அமைக்காதீங்க’ என அரசுக்குக் கோரிக்கை வைத்துக் கெஞ்சுகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது விளாங்குடி. கொள்ளிடம் ஆற்றையொட்டியே அமைந்துள்ள இந்த ஊர் மக்களுக்கு விவசாயம்தான் முக்கியத் தொழில். இங்கு பல ஆண்டுகளாகவே அரசு மணல் குவாரி அமைப்பதற்கு முயற்சி செய்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இங்கு மணல் குவாரி அமைக்க திட்டமிட்டு அதற்கான ஆணையும் பிறப்பித்ததோடு மணல் எடுப்பதற்கான ஏற்பாட்டையும் அரசு செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விளாங்குடி மக்கள் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மூலம் மணல் குவாரி அமைப்பதற்கு தற்காலிகத் தடையும் பெற்றுள்ளனர். ஆனாலும்

அரசு இங்கு மணல் குவாரி அமைக்க பல வழிகளில் முயற்சிகளை செய்து வருவதாகக் கூறும் ஊர் பொது மக்கள், `இங்கிருந்து ஒரு பிடி மண் கூட எடுக்க விட மாட்டோம்’ என்று கூறி போராடி வருகின்றனர். அவர்களுடன் குழந்தைகள் மற்றும் மாணவர்களும் சேர்ந்து போராட்டக் களத்தில் இறங்கியிருக்கின்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

 கடந்த ஆகஸ்ட் மாதம்  நடைபெற்ற மனிதச் சங்கிலி போராட்டம் தொடங்கி அனைத்திலும் அந்த ஊரைச் சேர்ந்த பள்ளிக் குழந்தைகள் அனைவரும் ஆர்வமுடன் கலந்துகொண்டதோடு மணல் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விண்ணைப் பிளக்கும் அளவுக்கு கோஷமிட்டு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினர் என்கிறார்கள் அந்த ஊரைச் சேர்ந்தவர்கள். இதுகுறித்து ராம்குமார் என்ற மாணவரிடம் பேசினோம். `பல ஆண்டுகளாகவே எங்க ஊர் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியவங்க பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எங்களுக்கு இந்தக் கொள்ளிடம் ஆறு தாய்மடி போன்றது. ஆற்று மணலில்தான் நாங்க எப்போதும் விளையாடுவோம். பரந்து விரிந்து மணலோடு காட்சியளிக்கும் கொள்ளிடம் ஆற்றைப் பார்ப்பதற்கே அவ்வளவு பிரமிப்பாக இருக்கும். கொள்ளிடம் ஆற்றில் பல இடங்களில் மணல் எடுக்கப்பட்டு இன்று வெறும் எலும்புக் கூடுபோலத்தான் காட்சியளிக்கிறது. இதுபோன்ற நிலை எந்த ஊருக்கும் வரக்கூடாது. ஏற்கெனவே 20 அடியில் கிடைத்த நிலத்தடி நீர்  60 அடி ஆழத்திற்கு சென்று விட்டது. விவசாயமும் முன்பு போல் இல்லை எனப் பலர் புலம்புகின்றனர்.

ஆற்றையொட்டியே காடு, வீடு, விவசாய நிலம் என அனைத்தும் இருக்கிறது. இங்கு மணல் எடுக்க ஆரம்பித்தால் எங்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும். கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலம் தஞ்சாவூர் நகருக்கே இங்கிருந்துதான் குடிநீர் செல்கிறது. மணல் எடுத்தால் அதற்குப் பெரும் ஆபத்து ஏற்படும். இதுகுறித்து எங்க ஊரைச் சேர்ந்தவங்க அடிக்கடி கூட்டம் போட்டுப் பேசும்போது நாங்களும் கேட்போம். அதிலிருந்தே எங்களுக்கும் நம்ம ஊரைக் காக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. எங்க ஊரை அழிவிலிருந்து காக்க நடைபெறும் போராட்டங்களில் நாங்களும் பெரியவர்களோடு சேர்ந்து கலந்துக்கிட்டு வருகிறோம். அந்தச் சமயங்களில், `கடுகுபோல இருந்துகிட்டு படிக்கிற வயசுல ஏண்டா இங்க வந்து நிக்கறீங்க?’ எனப் பல அதிகாரிகள் கேட்டிருக்கின்றனர். அதற்கு, `எங்க உயிர் நாடியை நாங்கதான் காக்கணும் சார்’ என்போம். கடந்த வாரத்தில் இங்கு அதிகாரிகள் ஆய்வுக்கு வந்தனர். அப்போது அவர்கள் காலில் விழுந்து கொஞ்சினார்கள் எங்க ஊர் பெரியவர்கள். எங்க மனதின் வலியை உணர்ந்து வாழ்வாதாரத்தைக் காப்பதற்கும் `ப்ளீஸ் எங்க ஊரில் மணல் குவாரி அமைக்காதீங்க’ என விளாங்குடி மாணவர்கள் அரசுக்குக் கோரிக்கை வைத்தனர்’ என்றார்.