பிளாஸ்டிக் இல்லாத உலகைக் கற்பனை செய்ய முடியாது. அதனால், ஏற்படும் சுற்றுச்சுழல் சீர்கேடு பற்றிப் புதிதாகச் சொல்ல வேண்டுமா? இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு சொல்லி, பிளாஸ்டிக் கழிவைப் பயன்படுத்திச் சாலை போடும் முறையைக் கண்டுபிடித்து, இந்திய அரசாங்கத்துக்கு இலவசமாக அர்ப்பணித்துள்ளார் ஆர்.வாசுதேவன். இவர் மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் பேராசிரியர். இவரது சேவையைப் பாராட்டி, பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.

அவருடன் சுட்டி ஸ்டார்களின் சந்திப்பு...

‘‘பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தி சாலை போடும் எண்ணம் எப்படித் தோன்றியது?’’

‘`பெட்ரோலியத்திலிருந்து கிடைக்கும் பல பொருள்களில் ஒன்றுதான், பிளாஸ்டிக். எனவே, அதைத் தாருடன் கலந்து சாலை போடலாம் என நினைத்தேன். பிளாஸ்டிக்கைக் கல்லில் கோட்டிங் செய்து, அதில் தாரை ஊற்றுவதன்மூலம் 15-18% பிளாஸ்டிக்கை உபயோகிக்கலாம் என அறிந்தேன். இந்தமுறையில், வீணான பிளாஸ்டிக் குப்பைகள் 1.6 மி.மீ. முதல் 2.5 மி.மீ. அளவுள்ள துண்டுகளாக ஆக்கப்படும். சாலை போடப் பயன்படுத்தப்படும் கற்கள் 170 டிகிரி செல்சியசுக்குச் சூடாக்கப்பட்டு, பிளாஸ்டிக் கழிவுகள் சேர்க்கப்படும். பிளாஸ்டிக் உருகி, கல்லின்மீது மெல்லிய படலமாக 30 விநாடிகளில் படிந்துவிடும். பின்பு, தார் சேர்த்துச் சாலையாகப் போடலாம்.’’

‘‘இப்படி பிளாஸ்டிக் சாலையைப் போடுவதைவிட பிளாஸ்டிக் ஒழிப்பில் ஈடுபடலாமே?’’

‘‘பிளாஸ்டிக் அன்றாட வாழ்க்கையில் உபயோகமான பொருளாக இருக்கிறது. அதிலுள்ள பிரச்னை, மக்காமல் இருப்பதுதான். ஆகவே, பிளாஸ்டிக் கழிவுகளுக்கு இதுபோன்ற மாற்றுவழி செய்வதுதான் நல்லது. இந்த பிளாஸ்டிக் சாலை மூலம், பிளாஸ்டிக் கழிவுகள் நல்ல வழியில் உபயோகப்படுகிறது. தார் பயன்பாடும் குறைகிறது.

‘‘உங்கள் கண்டுபிடிப்பில் எங்களைப்போன்ற மாணவர்கள் எவ்வாறு பங்களிக்கலாம்?’’

‘‘நான் ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று அங்குள்ள குழந்தைகளிடம், வீட்டில் இருக்கும் பிளாஸ்டிக்கைக் கொண்டுவந்து கொடுக்கச் சொன்னேன். அவ்வாறு பள்ளிகளில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக்கை, சாலை போடப் பயன்படுத்துகிறோம். மதுரையில் 35,000 பள்ளி மாணவர்கள் இதைச் செய்திருக்கிறார்கள்.’’

படம் : சி.ஜே.நந்தகுமார்