ஓர் ஊர்ல ஒரு பெரிய குளம் இருந்துச்சு. அதுல நிறைய தவளைகள் ஜாலியா வாழ்ந்துட்டு வந்துச்சு. தினமும் பொழுது விடிஞ்சவுடனே அந்தக் குளத்துக்கு நிறைய கொக்குகள் வந்து, கண்ணுல சிக்குற தவளைகளையெல்லாம் லபக் லபக்குன்னு கொத்திச் சாப்பிட்டுடும். அதனால, கொக்குகள் வர்ற நேரத்துல அம்மா தவளைகள் தங்களோட தவளைக்குஞ்சுகளை குளத்துக்குள்ள இருக்கிற கல்லுகளுக்குக் கீழே மறைச்சு வெச்சுடும். கல்லுக்கடியில மறையத் தெரியாத தவளைக்குஞ்சுகள்தான் கொக்குக்கிட்ட மாட்டிக்கும்.

இந்தக் குளத்துல அம்மா பேச்சை கேட்காத மூணு தவளைக்குஞ்சுகள் இருந்துச்சு. முதல் தவளைக்குஞ்சுப் பேரு bad, இரண்டாவது தவளைக்குஞ்சுப் பேரு very bad, மூன்றாவது தவளைக்குஞ்சுப் பேரு very very bad. இதுங்களோட நாட்டி குணத்தைப் பார்த்து குளத்துல இருக்கிற மத்த தவளைங்க வெச்ச பேரு இதெல்லாம். கரெக்டா கொக்குங்க வர்ற நேரம் பார்த்து மூணும் சத்தமா கத்த ஆரம்பிக்கும். இதுங்களோட அம்மா பயந்துபோய் மூணுத்தோட வாயையும் பொத்தும். சம் டைம்ஸ், கொக்குங்க வர்ற நேரம் பார்த்து ஒரு கல்லு மேல இருந்து இன்னொரு கல்லுக்குத் தாவி கொக்குகளை வெறுப்பேத்தும்.
தவளைக்குஞ்சுகளோட நல்ல நேரம், அதுங்க மூணும் கொக்குகளுக்கு உணவாகாம தப்பிச்சிட்டே இருந்துச்சுங்க. ஆனா, இந்த லக் எப்பவும் இருக்காதே. அதனால, அம்மா தவளை தன்னோட மூணு தவளைக் குஞ்சுகளையும் கூப்பிட்டு, நீங்க சின்னப்பிள்ளைங்க அப்படிங்கிறதால ஆபத்து தெரியாம விளையாடிட்டு இருக்கீங்க. விளையாட்டு வினையாகிடும். கொக்கோட கூர்மையான அலகுல மாட்டிக்கிட்டீங்கன்னா உங்களால தப்பிக்கவே முடியாது. ப்ளீஸ் அம்மா சொல்பேச்சை கேளுங்கன்னு அட்வைஸ் பண்ணுச்சு. ஆனா, அந்த மூணு தவளைக்குஞ்சுகளும் திருந்தவே இல்ல.

மறுநாள் பொழுது விடிஞ்சது. வழக்கம்போல குளத்துக்கு கொக்குகளும் வந்துச்சு. அம்மா தவளை நைட்டெல்லாம் பிள்ளைங்க பத்தின கவலையினால சரியா தூங்காததால காலையில நல்லா தூங்கிடுச்சு. இதுதான் நேரம்னு மூணு தவளைக்குஞ்சுகளும் குளத்தோட மேல் பகுதிக்கு வந்துச்சுங்க. ஜில்லுனு காத்து, அம்மா பக்கத்துல இல்லாததுன்னு மூணும் ரொம்ப ஜாலியா கல்லுக்குக் கல் தாவி விளையாடிட்டு இருந்துச்சுங்க.
திடீர்னு bad தவளைக்குஞ்சு வீல்னு கத்துச்சு. என்னமோ ஏதோன்னு மத்த ரெண்டு தவளைக்குஞ்சுகளும் திரும்பிப்பார்க்க, bad-ன் ஒரு கால் ஒரு கொக்கோட வாய்ல இருந்துச்சு. bad பயத்துல மத்த மூணு காலால கொக்கு மூக்கு மேல ஒரு கிக் விட கொக்கு வலி தாங்காம வாயைத் திறந்திடுச்சு. அதோட வாய்க்குள்ள மாட்டிக்கிட்டிருந்த bad-ம் தப்பிச்சிடுச்சு. அதே நேரம் very bad தலையைக் கொத்த இன்னொரு கொக்கு பக்கத்துல வர்ற, லாஸ்ட் செகண்ட்ல அப்படியே பின்னாடி டைவ் அடிச்சு தப்பிச்சது. very very bad நிலைமை இதைவிட மோசமா இருந்துச்சு. ஒரு கொக்கோட அலகுக்குள்ள நல்லா மாட்டிக்கிட்டு கதறிட்டு இருந்துச்சு அது. bad-ம் very bad-ம் very very bad-ஐ பிடிச்சு வெச்சிருந்த கொக்கோட ஒத்தக்கால் மேல வேகமா ஜம்ப் பண்ண வலிதாங்க முடியாத கொக்கு `ஆ'ன்னு கத்த very very bad எஸ்கேப் ஆயிடுச்சு.

மூணு தவளைக்குஞ்சுகளுக்கும் இப்பதான் அதுங்களோட அம்மா சொன்ன அட்வைஸோட வேல்யூ என்னன்னு தெரிஞ்சுதாம். பயத்துல உடம்பு நடுங்கிக்கிட்டே ஏரிக்கு அடியில இருக்கிற தங்களோட வீட்டுக்குள்ள போய் அமைதியா உட்கார்ந்துக்கிச்சாம் மூணும். அம்மா தவளை தூக்கம் கலைஞ்சு கண்ணைத் திறந்து பார்க்க, மூணு தவளைக்குஞ்சும் சமர்த்தா உட்கார்ந்துக்கிட்டு இருக்கிறதைப் பார்த்து பயங்கரமா ஆச்சர்யப்பட்டுச்சாம். அதுக்கப்புறம் அந்த மூணு தவளைக்குஞ்சுகளும் அவங்கம்மா சொல்பேச்சை எப்பவும் தட்டாம கேட்டுச்சுங்களாம்.
- நாளை சந்திக்கலாம்!
தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினந்தோறும் விகடன்.காமில் இரவு 7 மணிக்கு வெளியாகின்றன #BedTimeStories.