Published:Updated:

`சிட்டுக்குருவி கட்டிய செங்கல் வீடு!' - ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories - 3

Sparrow ( Image by PublicDomainPictures from Pixabay )

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினந்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.

`சிட்டுக்குருவி கட்டிய செங்கல் வீடு!' - ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories - 3

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினந்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.

Published:Updated:
Sparrow ( Image by PublicDomainPictures from Pixabay )

ஓர் ஊர்ல ஒரு காக்காவும் ஒரு சிட்டுக்குருவியும் நல்ல ஃபிரெண்ட்ஸா இருந்துச்சுங்களாம். ரெண்டுத்துக்கும் தங்களுக்குன்னு ஒரு வீடு கட்டிக்கணும்னு ரொம்ப நாள் ஆசையாம். அதுக்காக, காக்கா என்ன பண்ணுச்சு தெரியுமா? அக்கம் பக்கம் இருக்கிற வீடுகள்ல இருக்கிற வைக்கோலை தன் அலகால கொத்தி திருடிக்கிட்டு வந்துடுச்சாம். ஆனா, சிட்டுக்குருவி அடுத்தவங்க பொருளைத் திருடக்கூடாதுன்னு `குட்'டா இருந்துச்சாம். கொஞ்ச நாள்ல காக்காகிட்ட நிறைய வைக்கோல் சேர்ந்திடுச்சு. உடனே காக்கா, தன்கிட்ட இருக்கிற வைக்கோலை வெச்சு கூடு ஒண்ணைக் கட்டிக்கிச்சாம்.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay

தனக்குன்னு ஒரு வீடு கட்டிக்கிட்ட காக்காவை, சிட்டுக்குருவி ஏக்கத்தோட பார்த்துச்சாம். தனக்கு ஒரு கூடு இல்லையேங்கிற வருத்தத்தோட பறந்துபோயிட்டு இருந்துச்சாம். அப்போ, செங்கல் அறுக்கிற ஓர் அங்கிள் வீட்டைப் பார்த்துச்சாம். அப்படியே சர்ருன்னு கீழே இறங்கி அந்த அங்கிள் பக்கத்துல போய் நின்னுச்சாம் சிட்டுக்குருவி. அந்த அங்கிள் சிட்டுக்குருவியைப் பார்த்தாராம். அதோட கண்கள் ஏக்கத்தோட தான் வெச்சிருக்கிற செங்கல்களைப் பார்க்கிறதை அந்த அங்கிள் கவனிச்சுட்டார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உடனே அவர் சிட்டுக்குருவியைப் பார்த்து `நீ ஏன் கவலையா இருக்கே. உனக்கு நான் ஏதாவது ஹெல்ப் பண்ணணுமா’ன்னு கேட்டார். உடனே சிட்டுக்குருவி, `எனக்கு வீடு கட்ட கொஞ்சம் செங்கல் வேணும். கொடுத்து உதவ முடியுமா’ன்னு கேட்டுச்சு. `ஓ... தாராளமா தர்றேன். நீ அதுக்குப் பதிலா செங்கல் செய்ற மண்ணை கொஞ்சம் மிதிச்சு தர்றியா’ன்னு கேட்டார். சிட்டுக்குருவியும் தன்னோட சின்னக் கால்களால மண்ணை நல்லா மிதிச்சுக் கொடுத்துச்சாம். ஹேப்பியான அந்த அங்கிள், சிட்டுக்குருவிக்காக குட்டிக்குட்டியா அம்பது செங்கல் ரெடி பண்ணிக் கொடுத்தாராம். தன்னோட குட்டி அலகால ஒவ்வொரு செங்கல்லா தூக்கிட்டுப்போய் தனக்கு ஒரு வீடு கட்டிக்கிச்சாம் சிட்டுக்குருவி.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay

கொஞ்ச நாள்ல புயல் ஒண்ணு வர, காக்கா திருடிக் கட்டின வைக்கோல் வீடு பறந்து போயிடுச்சாம். சிட்டுக்குருவி உழைச்சுக் கட்டின செங்கல் வீடு பத்திரமா இருந்துச்சாம். உழைப்பும் அறிவும் இல்லாத காக்காவாக நாம இருக்கக் கூடாது. உழைப்பும் அதே நேரம் அறிவோடவும் சிட்டுக்குருவி மாதிரி இருந்தா நீங்க ஆசைப்பட்டதெல்லாம் உங்களுக்குக் கிடைக்கும் குட்டீஸ்.

நாளை சந்திக்கலாம்!

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினந்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism