Published:Updated:

சர்க்கஸ் விலங்குகளுக்கு விடுதலை அளித்த கொசு... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories - 33

Circus ( Image by mohamed Hassan from Pixabay )

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.

சர்க்கஸ் விலங்குகளுக்கு விடுதலை அளித்த கொசு... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories - 33

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.

Published:Updated:
Circus ( Image by mohamed Hassan from Pixabay )

இந்தக் கதையை குழந்தைக்கு ஆடியோ வடிவிலும் சொல்ல நினைக்கிறீங்களா? அதற்கான Podcast லிங்க் இதோ...

ஒரு கிராமத்துல சர்க்கஸ் கூடாரம் ஒண்ணு இருந்துச்சு. அது ரொம்ப சின்ன சர்க்கஸ் டீம்கிறதால அந்தக் கூடாரத்துல ஒரு கரடி, ஒரு குரங்கு, ஒரு புலி, 20 பறவைகள் மட்டும்தான் இருந்துச்சுங்க. ஒருநாள் அந்த சர்க்கஸ் கூடாரத்தோட ஓனர் புதுசா ஒரு நரிக்குட்டியைப் பிடிச்சிட்டு வந்து ஒரு கூண்டுல போட்டார். பாவம், அந்த நரிக்குட்டி. `அம்மா அம்மா'ன்னு அழுதுட்டே இருந்துச்சு. அதைப் பார்த்த மத்த விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் அதுங்களோட அம்மா ஞாபகம் வந்திடுச்சு. நம்மளையும் இந்த சர்க்கஸ் ஓனர் இப்படித்தானே நம்ம அம்மாகிட்ட இருந்து பிரிச்சிக் கடத்திட்டு வந்தார்னு யோசிச்சுதுங்க. அதுங்களுக்கெல்லாம் நரிக்குட்டிக்கு ஆறுதல் சொல்லி `அழாதே'ன்னு கண்ணைத் துடைச்சு விடணும்னு ஆசையா இருந்துச்சு. ஆனா, கூண்டை தாண்டி எப்படி வெளியே வர்றதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருந்துச்சுங்க.

Circus
Circus

நரிக்குட்டி அந்த சர்க்கஸ் கூடாரத்துக்கு வந்து, ரெண்டு நாள் ஆயிடுச்சு. ரெண்டு நாளும், அது சர்க்கஸ் ஓனர் கொடுக்கிற எந்த உணவையும் சாப்பிடாம அழுதுகிட்டே இருந்துச்சு. இதுக்கு மேல நாம சும்மா இருந்தா, நரிக்குட்டியை சாப்பிட வைக்க சர்க்கஸ் ஓனர் பிரம்பால அடிக்க ஆரம்பிச்சிடுவார்னு பயப்பட ஆரம்பிச்சிதுங்க மத்த விலங்குகளும் பறவைகளும். என்ன பண்றதுன்னு யோசிச்ச அதுங்க, தங்கள்ல ஒருத்தர் கூண்டை விட்டு வெளியே போய் நரிக்குட்டியை சமாதானம் செஞ்சு அதைச் சாப்பிட வைக்கணும்னு முடிவு பண்ணுச்சுங்க. ஆனா, யாரால கூண்டைவிட்டு வெளியே வர முடியும்னு யோசிச்சதும் எல்லாம் சோர்ந்து போச்சுங்க.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கொஞ்ச நேரம் ஆச்சு. தன்னோட சின்ன தலையைத் தட்டி எதையோ யோசிச்சுட்டு இருந்த குரங்கு, ஐடியான்னு கத்துச்சு. மத்த விலங்குகளும் பறவைகளும் `என்ன என்ன' அப்படின்னு குரங்கைப் பார்த்து கேட்டுச்சுங்க. குரங்கு, கரடியைப் பார்த்து `கரடியண்ணா உங்களால கூண்டோட கம்பியை வளைக்க முடியுமான்னு கேட்டுச்சு. அதுக்கு கரடி, `என் கூண்டோட கம்பியை என்னால வளைக்க முடியும்னா அதை நான் எப்பவோ செஞ்சிருப்பேனே'ன்னு சொல்லுச்சு. `அய்யோ கரடியண்ணா'ன்னு தலையில அடிச்சிக்கிட்ட குரங்கு, உங்க கூண்டை உங்களால வளைக்க முடியாதுன்னு எனக்குத் தெரியும். ஆனா, என் கூண்டோட கம்பி மெல்லிசா தானே இருக்கு. அதை வளைச்சி நான் வெளியே வர ஹெல்ப் பண்ணுங்கன்னு சொல்லுச்சு. உடனே கரடி, தன்னோட கைகளைக் கூண்டுக்கு வெளியே நீட்டி, குரங்கு இருந்த கூண்டோட கம்பியை வளைச்சு வழி ஏற்படுத்திக் கொடுத்துச்சு. வெளியே வந்த குரங்கு, நரிகிட்டே போய் `குட்டி நரியே, நீ சாப்பிடாம இருந்தா இந்த சர்க்கஸ் ஓனர் உன்னை பிரம்பால அடிப்பாரு. நீ மயக்கம் போட்டு விழுந்திடுவே. அதனால, ப்ளீஸ் நீ சாப்பிடு'ன்னு கெஞ்சலா கேட்டுச்சு. அதுக்கு நரிக்குட்டி, `நான் சாப்பிட மாட்டேன்னா சாப்பிட மாட்டேன். எனக்கு என் அம்மாவைப் பார்க்கணும். இல்லன்னா நான் சாப்பிடாமலே இருந்து செத்துப் போறேன்'னு சொல்லிட்டு, விக்கி விக்கி அழ ஆரம்பிச்சது.

Circus
Circus

நடந்ததையெல்லாம் பார்த்துக்கிட்டிருந்த புலி, `நான் சொல்றதைக் கேட்டா நரிக்குட்டி மட்டுமில்ல நாம அத்தனை பேருமே இங்கிருந்து தப்பிச்சிடலாம்னு சொல்லுச்சு. எப்படின்னு கேட்டுச்சு கரடி. பூட்டை உடைச்சிதான்னு பதில் சொல்லுச்சு புலி. `அது நம்பளால முடியும்னா எப்பவோ தப்பிச்சிருப்போமே'ன்னு சொல்லுச்சு குரங்கு. `ஆமால்ல'ன்னு சொல்லிட்டு அமைதியாயிடுச்சு புலி. எல்லாத்தையும் பார்த்துக்கிட்டிருந்த நரிக்குட்டி, `என்ன ஆமால்ல. நீங்க கூண்டு கம்பியையும் வளைக்க வேணாம். பூட்டையும் உடைக்க வேணாம். சர்க்கஸ் ஓனர் நம்ம கூண்டுகளோட சாவியை எங்க வெச்சிருக்கார்னு தெரிஞ்சா இன்னிக்கு ராத்திரியே நாம எல்லாரும் தப்பிச்சிடலாம்'னு படபடன்னு சொல்லுச்சு.

`ஆனா, சாவி எங்க இருக்குன்னு தெரியலையே'ன்னு கரடி, புலி, குரங்கு மூணும் ஒரே குரல்ல சொல்லுச்சுங்க. `உங்களுக்குத் தெரியாது. ஆனா, எனக்குத் தெரியுமே'ன்னு ஒரு குரல் மேல இருந்து கேட்டதும், எல்லாம் தலையை அண்ணாந்து பார்த்துச்சுங்க. அங்க ஒரு கொசு நின்னுக்கிட்டிருந்துச்சு. `அய்யய்யோ எங்க ரத்தத்தைக் குடிக்க வந்தியா'ன்னு எல்லாம் மிருகங்களும் அலறுச்சுங்க. `உங்க ரத்தத்தைக் குடிச்ச நன்றிக்காக உங்க கூண்டுகளோட சாவிக்கொத்தை இன்னிக்கு ராத்திரியே நான் கொண்டு வந்து தர்றேன்'னு சொன்ன கொசு, சொன்ன மாதிரியே சாவிக்கொத்தைக் கொண்டு வந்து கொடுத்துச்சு. சாவிக்கொத்தை வெச்சு மத்த விலங்குகளோட கூண்டுகளையும் பறவைகளோட கூண்டுகளையும் திறந்துவிட்டுச்சு குரங்கு.

Fox
Fox

`அப்பாடா, இனி சுதந்திரமா இருக்கலாம்'னு நினைச்சுக்கிட்டு எல்லாம் கிளம்புற நேரத்துல, `இவ்ளோ நாள் நம்மள வெச்சுதானே இந்த சர்க்கஸ் ஓனர் பிசினஸ் பண்ணிட்டிருந்தாரு. நாம எல்லாம் இங்கிருந்து போயிட்டா அவரு வாழறதுக்கு என்ன பண்ணுவாரு'ன்னு கேட்டுச்சு கரடி. கரடியோட கேள்விக்கு இதுவரைக்கும் பேசாம இருந்த பறவைகள் பேச ஆரம்பிச்சது. `இந்த மனுஷன் தோட்டம் போட்டு வாழறதுக்கு உதவியா, நாங்க நிறைய பழங்களோட விதைகளையும், காய்களோட விதைகளையும் அவரோட வீட்டுல வைக்கலாம்னு பிளான் பண்ணியிருக்கோம். அதனால, அவரைப்பத்தி கவலைப்படாம நாம எல்லாரும் உடனே கிளம்புவோம்'னு சொல்லுச்சுங்க. ரொம்ப நல்லதுன்னு நினைச்சிக்கிட்டு எல்லா மிருகங்களும் பறவைகளும் தங்களோட வாழ்விடத்தைத் தேடி புறப்பட்டுச்சுங்க. இனி அதுங்களோட உலகத்துல கூண்டும் கிடையாது, பூட்டும் கிடையாது. சுதந்திரம் மட்டும்தான்!

- நாளை சந்திக்கலாம்.

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.