Election bannerElection banner
Published:Updated:

ஒட்டகத்திற்கே பயம் காட்டிய கழுகு... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories - 49

Camel
Camel ( Photo: Pixabay )

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.

இந்தக் கதையைக் குழந்தைக்கு ஆடியோ வடிவிலும் சொல்ல நினைக்கிறீங்களா? அதற்கான Podcast லிங்க் இதோ...

ஒரு நாட்டுல பெரிய பாலைவனம் ஒண்ணு இருந்துச்சு. அந்த பாலைவனத்துல நிறைய ஒட்டகங்கள் வாழ்ந்துட்டு வந்துச்சுங்க. அதுல `மிக்கி'ன்னு ஓர் ஒட்டகம் ரொம்ப கர்வம் பிடிச்சுது. அதோட கர்வத்துக்கு காரணம் என்னன்னா அது மத்த ஒட்டகங்களைவிட ரொம்ப உயரமா, பலமா இருக்கும். உயரமான ஒட்டகங்களே மிக்கியைவிட குள்ளமா தெரியுறப்போ, பாலைவனத்துல வாழுற மத்த விலங்குகள்பத்தி கேட்கணுமா என்ன? நம்மள்ல ஒரு ஒட்டகம் பார்க்கிறதுக்கு சூப்பரா இருக்கிறான்னு மிக்கியை மத்த ஒட்டகங்கள் அடிக்கடி பாராட்டும்க. இந்தப் பாராட்டுகளை கேட்டு கேட்டு மிக்கிக்கு கர்வம் உச்சந்தலை வரைக்கும் ஏறிப்போச்சு. அதனால, `இந்தப் பாலைவனத்துல என்னை மாதிரி யாரு கம்பீரமா, பலசாலியா இருக்கா'ன்னு சக ஒட்டகங்கள்கிட்டேயே அடிக்கடி அலட்டலா கேட்க ஆரம்பிச்சிது மிக்கி. காலப்போக்குல மிக்கியோட குணம் தெரிஞ்சுட்டதால, மத்த ஒட்டகங்கள் இது பேசுறதை காதுல வாங்காத மாதிரி போக ஆரம்பிச்சிதுங்க. ஒட்டகங்கள் கண்டுக்காததால பாலைவனத்துல வாழுற நரிகள், ஓநாய்கள் மாதிரி உருவத்துல சின்னதா இருக்கிற விலங்குகள்கிட்ட போய் `நீங்கல்லாம் ஏன் இவ்ளோ குள்ளமா இருக்கீங்க? ஏதாவது ஹெல்த் ட்ரிங்க்கை குடிச்சாவது உயரமா வளரப் பாருங்க'ன்னு கேலி பேசும். இப்படியே நாளுக்கு நாள் மிக்கியோட அட்டகாசம் அதிகமாகிட்டே போச்சு.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay

ஒருநாள் பாலைவனத்து சுனைல தண்ணிக் குடிச்சிட்டு இருந்துச்சு மிக்கி. அப்போ அந்த இடத்துக்கு ஒரு பெரிய கழுகு ஒண்ணு வந்துச்சு. அதால ஒரு மாட்டைக்கூட தூக்கிட்டு பறக்க முடியும். அந்த அளவுக்கு பெரிய கழுகு அது. நம்ம மிக்கிக்குதான், தான் மட்டுமே பெரிய பலசாலின்னு நினைப்பு இருக்கில்லையா? அதனால, தன்னை அந்த ராட்சச கழுகு கவனிக்கணும்னு `ம்க்கும்'னு கனைச்சு அந்த ராட்சச கழுகோட கவனத்தை தன் பக்கமா ஈர்க்கப் பார்த்துச்சு. ஆனா, அந்தக் கழுகு மிக்கியைக் கண்டுக்கவே இல்ல. மிக்கி மறுபடியும் கனைச்சுப் பார்த்துச்சு. இந்த முறையும் கழுகு கண்டுக்கலை. ஏன்னா, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் அது வயிறு முட்ட ஒரு மாட்டை சாப்பிட்டு விட்டு வந்திருந்துச்சி. கழுகு உண்ட மயக்கத்துல இருந்ததால அதோட கண்ணுல மிக்கி படவே இல்ல.

தன்னை மாதிரி கம்பீரமான ஒட்டகத்தை கழுகு கண்டுக்காம இருந்ததை பெரிய அவமானமா எடுத்துக்கிச்சு மிக்கி. `ம்ஹூம்' அப்படின்னு திரும்பிப் போயிடுச்சு. மறுநாள். அதே சுனையில தண்ணிக் குடிக்க வந்திருச்சு மிக்கி ஒட்டகம். அது குனிஞ்சு தண்ணிக் குடிச்சிட்டு இருந்த நேரத்துல, அதே பெரிய கழுகு இன்னிக்கும் வந்துச்சு. இன்னிக்கு அது நல்ல பசியில இருந்ததால அது கண்ணுக்கு மிக்கி நல்லாவே பட்டுச்சு. உடனே சத்தமில்லாம மிக்கியோட மேல் பக்கமா வந்து அதைத் தூக்குறதுக்கு ட்ரை பண்ணுச்சு. மிக்கி நிஜமாவே வாட்டசாட்டமான ஒட்டகம்கிறதால, கழுகால அதை அவ்வளவு சுலபமா தூக்க முடியல. `என்ன நம்ம முதுகுல ஏதோ குத்துறா மாதிரி இருக்கே'ன்னு கழுத்தை வளைச்சுப் பார்த்துச்சு மிக்கி. `ஓ...மை காட். எவ்ளோ பெரிய கழுகு'ன்னு ஒரு நிமிஷம் பயந்துடுச்சு மிக்கி.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay
ஏமாற்றிய காய்கறிகள்... காப்பாற்றிய வேப்பமரம்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories - 46

`ஆஹா.. அதைத் தூக்க நாம ட்ரை பண்ணதை ஒட்டகம் கண்டுபிடிச்சிடுச்சோ' அப்படின்னு யோசிச்சிட்டே ஒட்டகத்துக்கு முன்னாடி வந்து உட்கார்ந்துச்சு கழுகு. கழுகை நேருக்கு நேரா பார்த்ததும் மிக்கிக்கு `அட, இது நாம நேத்து பார்த்த பெரிய கழுகுதான் இது'ங்கிறது புரிஞ்சுப்போச்சு. உடனே, 'என்ன கழுகாரே நேத்து இதே இடத்துல உங்களை நான் பார்த்தேன். ஆனா, நீங்கதான் என்னைக் கண்டுக்கவே இல்ல' அப்படின்னு சொல்லுச்சு. ஒட்டகத்தோட பேச்சுல இருந்து கழுகுக்கு, `நான் இதைத் தூக்க முயற்சி செஞ்சது தெரியலை' அப்படிங்கிறது புரிஞ்சுப்போச்சு.

`ஸாரி ஒட்டகம். நேத்து உன்னை நான் கவனிக்கல' அப்படின்னு சொல்லுச்சு கழுகு. அதுக்கு ஒட்டகம், `கழுகாரே, நீங்க இன்னிக்குத்தான் என்கிட்ட மொத தடவையா பேசுறீங்க. அதுக்குள்ள `நீ'ன்னு மரியாதையில்லாம பேசுறீங்க'ன்னு மிக்கி ஒட்டகம் சொல்ல, மறுபடியும் ஸாரி சொல்லுச்சு கழுகு. `பரவாயில்லை விடுங்க கழுகாரே, இந்த பாலைவனத்துலேயே நாந்தான் வாட்டசாட்டமான ஒட்டகம். அது தெரியுமா உங்களுக்கு' அப்படின்னு தன்னோட கர்வமான பேச்சை ஆரம்பிச்சிது. கழுகுக்கு ஒட்டகத்தோட பலவீனம் என்னன்னு புரிஞ்சுப்போச்சு. `நீங்க வாட்டசாட்டமான ஒட்டகம்தான். ஆனா, பார்க்கிறதுக்கு கொஞ்சம் குண்டா தெரியுறீங்க'ன்னு நைசா சொல்லுச்சு. `ஓ.. அப்படியா, அப்படின்னா நான் நாளையில இருந்தே டயட் இருக்க ஆரம்பிச்சிடுறேன்'னு சொன்ன மிக்கி ஒட்டகம், சொன்ன மாதிரியே மறுநாள்ல இருந்து டயட் இருந்து வெயிட் குறைச்சுது.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay
குயில்களுக்கு கூடு கட்டிக்கொடுத்த காக்கைகள்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories - 48

வெயிட் குறைஞ்சதும் தான் வழக்கமா போகிற சுனைக்கு வந்துச்சு ஒட்டகம். அங்கே ஏற்கெனவே வந்து வெயிட் பண்ணிட்டு இருந்துச்சு அந்தப் பெரிய கழுகு. ஒட்டகம் வந்ததும் அதுக்கு மேல பறந்து வந்து அதை ஒரே தூக்கா தூக்கிட்டுப் பறக்க ஆரம்பிச்சுது கழுகு. ஒட்டகம் பயத்துல சத்தம் போட்டு அழ ஆரம்பிச்சிது. அந்த சத்தத்தைக் கேட்டு அந்த பாலைவனத்துல இருக்கிற எல்லா மிருகங்களும் நிமிர்ந்து பார்த்துச்சுங்க. ஒரு பெரிய கழுகு மிக்கி ஒட்டகத்தைத் தூக்கிட்டு மெள்ள மெள்ளா உயர பறக்க ஆரம்பிச்சிது அதுங்களோட கண்கள்ல பட்டுச்சு. அவ்ளோதான் ஒட்டகங்கள், நரிகள், ஓநாய்கள்னு அத்தனையும் ஒண்ணு மேல ஒண்ணு ஏறி நின்னு மிக்கி ஒட்டகத்தோட ரெண்டு காலையும் பிடிச்சிக்கிச்சுங்க. அவ்ளோதான் கழுகால வெயிட் தாங்க முடியாம மிக்கியை விட்டுடுச்சு. மிக்கி ஒட்டகம் உள்பட எல்லா விலங்குகளும் அப்படியே தரையில விழுந்துச்சுங்க. விழுந்த வேகத்துல மிக்கியை எல்லா விலங்குகளும் மூடி மறைச்சுக்கிச்சுங்க. தன்னை பாதுகாக்கிறதுக்கு தன் நண்பர்கள் உயிரையே பணயமா வைக்கிறது புரிஞ்சதும் மிக்கி ஒட்டகத்துக்கு சந்தோஷத்துல அழுகையே வந்திடுச்சு. அன்னியில இருந்து மிக்கி ஒட்டகம் தன்னோட கர்வத்தை விட்டுட்டு எல்லார்கூடவும் நட்பா இருந்துச்சாம்.

- நாளை சந்திக்கலாம்.

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு