Election bannerElection banner
Published:Updated:

நிலாவுல வடை சுடுற பாட்டியும் குரங்குக் குட்டிகளும்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories

Monkey
Monkey ( Image by Anja from Pixabay )

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.

இந்தக் கதையை குழந்தைக்கு ஆடியோ வடிவிலும் சொல்ல நினைக்கிறீங்களா? அதற்கான Podcast லிங்க் இதோ...

ஒரு கிராமத்துல தென்னந்தோப்பு ஒண்ணு இருந்துச்சு. அந்தத் தோப்புல அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, குட்டிகள்னு குரங்கு ஃபேமிலி ஒண்ணு வாழ்ந்துட்டு வந்துச்சு. தென்னந்தோப்புல வாழ்ந்துட்டு வந்தாலும், வழக்கமான குரங்குகள்போல தென்னம்பூக்களைப் பிய்ச்சுப்போட்டுப் பாழாக்குறது, தென்னம் குரும்பைகளை கடிச்சுத் துப்புறதுன்னு இல்லாம பசிக்கு சில தேங்காய்களைப் பறிச்சு சாப்பிடுறதோட சமர்த்தா வாழ்ந்துட்டு வந்துச்சுங்க. தவிர, தோப்புக்குள்ள யாராவது இளநீர் திருட வந்தா சத்தம் போட்டு அவங்களை விரட்டி விட்டுடும் இந்தக் குரங்கு ஃபேமிலி. அதனால, அந்தத் தோப்புக்கு சொந்தக்காரரும் இந்தக் குரங்கு ஃபேமிலியைத் தன்னோட தோப்பை விட்டு விரட்டாம இருந்தாரு.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay
ரெஸ்டாரன்ட் நடத்திய இறால், தொல்லை கொடுத்த சுறா! - ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories - 20

அந்தக் குரங்கு ஃபேமிலியில தாத்தா, பாட்டியெல்லாம் இருக்காங்கன்னு சொன்னேன் இல்லையா? பாட்டிக் குரங்கு, குட்டிக்குரங்களுக்கு தினமும் தூங்கப் போற நேரத்துல சில கதைகள் சொல்லித் தூங்க வைக்கும். அப்படியொரு நாள் கதை சொல்றப்போ, நிலாவுல பாட்டி ஒருத்தங்க வடை சுட்டுக்கிட்டு இருக்கிறதா சொல்லுச்சு பாட்டிக் குரங்கு. இதை உண்மைன்னு நம்பிடுச்சுங்க குரங்குக்குட்டிகள். அன்னியில இருந்து பெரிய குரங்குகள் எல்லாம் தூங்கின பிறகு, தென்னமரங்களோட உச்சியில போய் உட்கார்ந்துக்கிட்டு ரெண்டு குட்டிக் குரங்குகளும் நிலாவையே பார்த்துட்டு இருக்கும். என்னிக்காவது நிலாவுல வடை சுட்டுக்கிட்டிருக்கிற பாட்டி நமக்கும் ஆளுக்கொரு வடை கொடுப்பாங்கன்னு நம்பிட்டுதான் அந்தக் குரங்குக்குட்டிகள் ரெண்டும் நிலாவையே பார்த்துட்டு இருந்துச்சுங்க.

ஒருநாள் குரங்குக்குட்டிகள் ரெண்டும் வழக்கம்போல தென்னை மரத்தோட உச்சியில உட்கார்ந்துக்கிட்டு நிலாவையே உத்துப்பார்த்துட்டு இருந்துச்சுங்க. அந்த நேரம் தனக்கான இரையைத் தேடி அந்தப் பக்கமா ஆந்தை ஒண்ணு பறந்து வந்துச்சு. அதோட கண்ணுல வானத்தைப் பார்த்துட்டிருந்த குரங்குக்குட்டிகள் பட்டுச்சு. அப்படியே கீழ இறங்கி வந்த ஆந்தை, `செல்லக்குட்டிகளா, இந்த நேரத்துல தூங்காம எதுக்கு வானத்தைப் பார்த்துட்டிருக்கீங்க’ன்னு கேட்டுச்சு. அதுக்கு குரங்குக்குட்டிகள் `நாங்க வானத்தைப் பார்க்கலை ஆந்தை அங்கிள். நிலாவுல வடை சுட்டுக்கிட்டிருக்க பாட்டி எங்களுக்கும் வடை கொடுப்பாங்கன்னு நிலாவைத்தான் பார்த்துக் கிட்டிருக்கோம்'னு சொல்லுச்சுங்க. இதைக் கேட்ட ஆந்தைக்கு சிரிப்பை அடக்க முடியலை. `செல்லங்களா, நிலாவுக்கு மனுஷங்க போயிட்டு வந்துட்டாங்க. நீங்க இன்னமும் நிலாவுல பாட்டி வடை சுட்டுட்டு இருக்காங்கன்னு நம்புறீங்களே’ன்னு சொல்லிட்டு பக பகன்னு சிரிக்க ஆரம்பிச்சிடுச்சு ஆந்தை.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay
குளிக்காத குட்டி யானை... அம்மா தந்த சர்ப்ரைஸ்! - ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories - 18

ஆந்தை சிரிச்சதைப் பார்த்ததும் குரங்குக்குட்டிகளுக்கு ரொம்ப கோபம் வந்துடுச்சு. `ஆந்தை அங்கிள், நாங்க சொன்னதைக் கேட்டு ஏன் சிரிக்கிறீங்க? என்னிக்காவது நிலாவுல வடை சுடுற பாட்டி எங்களுக்கு வடை கொடுப்பாங்க. எங்களுக்கு அந்த நம்பிக்கை இருக்கு’ அப்படின்னு ரெண்டும் சத்தமா சொல்லுச்சுங்க. அதுக்கு ஆந்தை, `உஷ்... சத்தமா பேசாதீங்க செல்லங்களா. நீங்க போடுற சத்தத்தைக் கேட்டு உங்க வீட்டுப் பெரியவங்க முழிச்சிக்கப் போறாங்க’ன்னு சொல்லிட்டு, `சரி, நிலாவுல பாட்டி வடை சுடுறாங்கன்னு உங்களுக்கு யாரு சொன்னதுன்னு கேட்டுச்சு ஆந்தை. `எங்க பாட்டிதான் சொன்னாங்க’ன்னு பதில் சொல்லுச்சுங்க குரங்குக்குட்டிகள்.

குரங்குக்குட்டிகளோட நம்பிக்கையைப் பார்த்த ஆந்தை, பாட்டி சொன்னதை எப்படியாவது உண்மையாக்கணும்னு முடிவு பண்ணுச்சு. மறுநாள் ஹோட்டல் நடத்துற ஒரு அங்கிள்கிட்ட போய், `சார், எனக்கு ரெண்டு வடை வேணும். அதுக்குப் பதிலா நீங்க என்ன வேலை சொன்னாலும் செய்யறேன்'னு சொல்லுச்சு ஆந்தை. அந்த அங்கிள் உடனே `என் ஹோட்டல்ல எலித்தொல்லை அதிகமா இருக்கு. அதுங்களையெல்லாம் நீ விரட்டி விட்டுட்டா நான் உனக்கு ரெண்டு வடை தர்றேன்'னு சொன்னார். ஆந்தையும் அதுக்கு ஒத்துக்கிச்சு. சொன்ன மாதிரியே அந்த ஹோட்டலுக்குள்ள ஆந்தை ஒரு ரவுண்ட் அடிச்சதும், அங்க இருந்த எலிகளெல்லாம் `அச்சச்சோ இந்த ஹோட்டல் ஓனர் ஆந்தை வளர்க்கிறாருப்பா. இனிமே இங்க இருந்தா நம்ம உயிருக்குப் பாதுகாப்பில்ல’ அப்படின்னு முடிவு பண்ணிட்டு தப்பிச்சோம் பிழைச்சோம்னு ஓடியே போயிடுச்சுங்க.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay
புத்திசாலி மாடுகள், ஏமாந்த புலி... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories - 16

அந்த ஹோட்டல் ஓனரும் ரொம்ப ஹேப்பியாகி, தான் சொன்னபடியே ஆந்தைக்கு ரெண்டு வடை கொடுத்தாரு. அந்த வடைகளை எடுத்துட்டு குரங்குக்குட்டிகள் இருந்த தென்னந்தோப்புக்கு பறந்து வந்துச்சு ஆந்தை. அங்க வழக்கம்போல நிலாவைப் பார்த்துட்டே உட்கார்ந்துட்டு இருந்துச்சுங்க குரங்குக்குட்டிகள் ரெண்டும். ஆந்தை சிரிச்சுக்கிட்டே தன் கால்கள்ல வெச்சுக்கிட்டிருந்த வடைகளை குரங்குக்குட்டிகளோட மடியில போட்டுட்டு பறந்துப் போயிடுச்சு. குரங்குக்குட்டிகள் ரெண்டும் `ஹைய்யா நிலாவுல இருக்கிற பாட்டி எங்களுக்கு வடை கொடுத்திட்டாங்க’ன்னு சொல்லிட்டு சந்தோஷமா வடைகளைச் சாப்பிட ஆரம்பிச்சிதுங்க.

- நாளை சந்திக்கலாம்.

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு