Election bannerElection banner
Published:Updated:

முதலையின் அட்டகாசத்தை அடக்கிய முள்ளம்பன்றி... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories -10

Jungle
Jungle ( Image by André Santana from Pixabay )

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.

ஒரு காட்டுல பெரிய ஆறு ஒண்ணு இருந்துச்சு. அந்தக் காட்டுல இருக்கிற விலங்குகள் எல்லாம் வயிறு புடைக்கச் சாப்பிட்ட பிறகு, இந்த ஆத்துலதான் தாகம் தீர தண்ணி குடிக்குங்க.

மானும் தண்ணி குடிக்கும். பக்கத்துல புலியும் தண்ணி குடிக்கும். ஆனா, தண்ணி குடிக்கிற நேரத்துல எந்த மிருகமும் மத்த மிருகத்தைத் தொல்லை பண்ணாது. வேட்டையாடவும் செய்யாது. அது காட்டோட சட்டம். இதை எல்லா மிருகங்களும் கரெக்டா ஃபாலோ செய்யும். ஆனா, அந்த ஆத்துல இருக்கிற முதலை மட்டும் காட்டோட சட்டத்தை மதிக்கவே மதிக்காது.

Representational Image
Representational Image
Image by Clker-Free-Vector-Images from Pixabay

தாகத்தோட தண்ணி குடிக்க வர்ற மானோட காலை தன் வாலால தட்டிவிட்டு மானை தண்ணிக்குள்ள விழ வைக்கும். நரியோட காலை லேசா கடிச்சிட்டு ஈன்னு சிரிக்கும். காண்டாமிருகத்துக்கு பின்னாடி நைசா போய் அதோட வாலை ஒரு கவ்வு கவ்விட்டு ஓடியே போயிடும். இப்படி தினமும் தன்னோட சேட்டையால ஆத்துல தண்ணி குடிக்க வரும் அப்பாவி மிருகங்களை படாதபாடு படுத்திட்டு வந்துச்சு அந்த முதலை. ஒருநாள் ஆத்துக்குள்ள குனிஞ்சு தண்ணி குடிச்சிட்டு இருந்த சிங்கத்தோட பிடரி முடியை பிடிச்சு இழுத்து காட்டு ராஜாவுக்கே பயம் காட்டிடுச்சு அந்த சேட்டைக்கார முதலை.

முதலையோட அட்டகாசம் அதிகமாக ஆக, மத்த மிருகங்களுக்கு ஆத்துல தண்ணி குடிக்கணும்னாலே பயம் வந்துடுச்சு. முயல் மாதிரி சின்னச் சின்ன மிருகங்கள் ஆத்துப்பக்கம் வர்றதையே விட்டுடுச்சுங்க.

crocodile
crocodile
Image by Clker-Free-Vector-Images from Pixabay
பயந்த மான் குட்டியும் `முஸ்தஃபா' நாய்க்குட்டியும்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories 8

அதே காட்டுல புத்திசாலி முள்ளம்பன்றி ஒண்ணு இருந்துச்சு. முதலையோட அட்டகாசத்துக்கு ஒரு முடிவு கட்டணும்னு அது தீர்மானம் பண்ணுச்சு. முதலைக்கு எப்படி புத்தி புகட்டலாம்னு யோசிச்ச முள்ளம்பன்றி, காட்டுலேயே வயசான ஒரு பெண் யானையை போய் சந்திச்சு தங்களோட பிரச்னையை சொல்லுச்சு. எல்லாத்தையும் கேட்டுக்கிட்ட பெண் யானை, நான் என்ன செய்யணும்னு கேட்டுச்சு. அதுக்கு முள்ளம்பன்றி, அந்த முதலை சின்னச் சின்ன மிருகங்கள்ல ஆரம்பிச்சு சிங்கம் வரைக்கும் கடிச்சு வெச்சிருக்கு. ஆனா, அதுக்கு யானைகள்னா பயம். அதனாலதான் நீங்க தண்ணி குடிக்கிற பக்கம் அது வர்றதே இல்ல. நீங்க ஒருநாள் எங்க பக்கமா தண்ணி குடிக்க வந்து அதுக்கு சரியான தண்டனை கொடுக்கணும்னு சொல்லுச்சு. அதுக்கு யானை, நான் வர்றேன். ஆனா, உடனே முதலைக்குத் தண்டனை கொடுக்க மாட்டேன். ரெண்டு முறை அதோட தவற்றை மன்னிப்பேன். மூணாவது முறைதான் தண்டனை கொடுப்பேன். ஓகேவான்னு கேட்டுச்சு. முள்ளம்பன்றியும் அதுக்கு ஓகே சொல்லுச்சு.

மறுநாள் வழக்கம்போல எல்லா மிருகங்களும் முதலைக்கு பயந்துகிட்டே ஆத்துல தண்ணி குடிச்சிட்டிருக்க, பெண் யானை தொம் தொம்னு நிலம் அதிர அந்தப் பக்கம் வந்துச்சு. தன்னோட துதிக்கையால மெதுவா ஆத்து நீரை உறிஞ்சிக்கிட்டே தண்ணிக்குள்ள இருக்கிற முதலையைக் கவனிக்க ஆரம்பிச்சது. முதலை வழக்கம்போல ஒரு மானோட காலைக் கடிக்கிறதுக்கு நைசா வந்துக்கிட்டிருந்துச்சு. யானை சிரிச்சுக்கிட்டே தண்ணியை ஓங்கியடிச்சு முதலையை விரட்டுச்சு. யானையை கவனிக்காத முதலை இந்த முறை ஒரு புலிக்குட்டியைக் கடிக்கிறதுக்கு டிரை பண்ணுச்சு. மறுபடியும் தண்ணியை ஓங்கியடிச்சு முதலையை விரட்டுச்சு யானை. முட்டாள் முதலை இப்பவும் யானையைக் கவனிக்கல.

Porcupine
Porcupine
Image by Gordon Johnson from Pixabay
சுட்டி பூனையும், அன்பான எருமையும்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்?! #BedTimeStories - 9

ஓர் ஒட்டகச்சிவிங்கியைக் கடிக்கிறதுக்காக அதை நோக்கி முதலை நகர ஆரம்பிக்க, பெண் யானை தன்னோட பெரிய காலைத்தூக்கி முதலையோட வால் மேல வெச்சுது. அவ்வளவுதான், முதலையோட வால் நசுங்கிப்போச்சு. துடிச்சுப்போன முதலை கய்யா முய்யான்னு கத்திக்கிட்டு கண்ணீர் விட்டு அழுதுச்சு. ஏதோ ஒரு மிருகம் தன்னோட வாலைக் கடிச்சி தின்னுடுச்சுன்னு அது நினைச்சிக்குச்சு. அன்னியோட ஆத்துல தண்ணி குடிக்க வர்ற எந்த மிருகத்தையும் முதலை தொல்லை பண்றதே இல்ல. தங்களுக்கு உதவி பண்ண பெண் யானைக்கு மறக்காம நன்றி சொல்லுச்சு அந்தப் புத்திசாலி முள்ளம்பன்றி.

- நாளை சந்திக்கலாம்

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு