Election bannerElection banner
Published:Updated:

ஜெல்லி மீன் கொடுத்த ஃபிரெண்ட் ரெக்வெஸ்ட்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories - 35

Jellyfish
Jellyfish ( Image by StockSnap from Pixabay )

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.

இந்தக் கதையை குழந்தைக்கு ஆடியோ வடிவிலும் சொல்ல நினைக்கிறீங்களா? அதற்கான Podcast லிங்க் இதோ...

ஒரு நாட்டுல பெரிய கடல் ஒண்ணு இருந்துச்சு. அந்தக் கடலுக்குள்ள பல கடல் வாழ் உயிரினங்கள் ரொம்ப ஒற்றுமையா வாழ்ந்துட்டு வந்துச்சுங்க. அதுல ஒரு நண்டு, ஒரு இறால், ஒரு கெளுத்தி மீன் மூணும் ரொம்ப ரொம்ப குளோஸ் ஃபிரெண்ட்ஸா இருந்துச்சுங்க. கடலுக்கடியில மண்ணைத் தோண்டி ஆட்டம் போடுறதுல ஆரம்பிச்சு, பவழப்பாறைகளுக்குப் பின்னாடி மறைஞ்சு நின்னு கண்ணாமூச்சி விளையாடுறது வரைக்கும் மூணும் ஒண்ணா சேர்ந்துகிட்டுதான் லூட்டி அடிக்குங்க. சில நேரம், இதுங்களைவிட சின்ன மீன்களோட கண்களைப் பொத்தி விளையாட்டு காட்டுங்க. சில நேரம், பெரிய மீன்களோட வாலைப் பிடிச்சு இழுத்து கலாட்டா செய்யுங்க. சிப்பிகளோட வாயைத் திறந்து முத்துகளைத் தூக்கிட்டு வந்து பால் விளையாடுங்க. கிளிஞ்சல்களைக் கால்கள்ல மாட்டிக்கிட்டு நீர்ச்சறுக்கு விளையாடுங்க.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay

நண்டு, இறால், கெளுத்தி மீன் மூணுமே அடிப்படையில நல்ல பிள்ளைங்க அப்படிங்கிறதால, எவ்வளவு சேட்டை செஞ்சாலும் மத்த கடல்வாழ் உயிரினங்கள் அதுங்க மேல கோபப்படாதுங்க. இந்த மூணுத்தோட சேட்டைகளைத் தினம் தினம் பார்த்து ரசிச்ச ஜெல்லி ஃபிஷ் ஒண்ணு எப்படியாவது இதுங்களோட ஃபிரெண்டாகிடணும்னு ஆசைப்பட்டுச்சு. அதனால, இதுங்க மூணும் விளையாடும்போதெல்லாம் ஏதாவது செடிகளுக்குப் பின்னாடி மறைஞ்சு நின்னுகிட்டு  வேடிக்கை பார்த்துட்டிருக்கும். ஒருநாள் வழக்கம்போல, சின்ன மீன்களோட கண்களைப் பொத்தி மூணும் விளையாடிட்டு இருந்துச்சுங்க.  இன்னிக்கு இதுங்களோட எப்படியாவது பேசிடணும்னு ஜெல்லி ஃபிஷ் கிட்ட வந்துச்சு.

இது தெரியாம, விளையாட்டு ஆர்வத்துல ஜெல்லி ஃபிஷ்ஷோட கண்ணைப் போய் பொத்திடுச்சு கெளுத்தி மீன். அதைப் பார்த்துட்டு நண்டும் இறாலும் அதே சேட்டையை செஞ்சுதுங்க. அதுங்க கண்ணைப் பொத்தி விளையாடுன ஜெல்லி ஃபிஷ் சாதாரணமானது கிடையாது. அதை யாராவது தொட்டா அவங்க உடம்பெல்லாம் அரிக்க ஆரம்பிச்சிடும். இது தெரியாம இந்த மூணும் அதோட கண்ணைப் பொத்திடுச்சுங்க. கெளுத்தி மீன் தன்னோட கண்ணைப் பொத்தினவுடனே பயந்துபோன ஜெல்லி ஃபிஷ் அங்கயிருந்து வேகமா ஓடியே போச்சு.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay
சர்க்கஸ் விலங்குகளுக்கு விடுதலை அளித்த கொசு... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories - 33

கொஞ்ச நேரத்துல இறாலோட உடம்பு பரபரன்னு அரிக்க ஆரம்பிச்சது.  சமாளிக்க முடியாம அதோட அத்தனை கால்களையும் வெச்சு உடம்பை சொறிஞ்சுக்க ஆரம்பிச்சது. அடுத்து கெளுத்தி மீன். பாவம் அதுக்கு சொறிஞ்சுக்க கால்கள்கூட இல்லாததால உடம்பை வளைச்சு வளைச்சு பவளப்பாறைகள் மேல உரச ஆரம்பிச்சது. நண்டு என்ன செஞ்சுச்சு தெரியுமா? தன்னோட கொடுக்கால தன் உடம்பு மேல இருக்கிற ஓட்டை வரட் வரட்னு சொறிய ஆரம்பிக்க, ஓட்டுல சின்னதா ஓட்டையே விழுந்திடுச்சு. இதுங்களோட நிலைமையை மத்த கடல்வாழ் உயிரினங்கள் வழியா தெரிஞ்சுகிட்ட அந்த ஜெல்லி ஃபிஷ், இதுங்க இருக்கிற இடத்துக்கு மறுபடியும் வந்துச்சு.

மூணுத்தோட நிலைமையைப் பார்த்ததும் அதுக்கு அச்சச்சோன்னு ஆயிடுச்சு. உடனே, `ஹே ஃபிரெண்ட்ஸ், கொஞ்ச நேரம் அமைதியா இருந்தீங்கன்னா, அரிப்பு தானா சரியாகிடும்'னு அதுங்களை சமாதானம் பண்ணுச்சு. அது சொன்ன மாதிரியே கொஞ்ச நேரத்துல அரிப்பு நின்னுபோக, சொறியறதை நிறுத்திட்டு மூணும் ரிலாக்ஸ் ஆச்சுங்க.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay
சூழ்ச்சி செய்த பெருச்சாளி... கலாய்த்த எலிகள்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories - 34

`அப்பாடா'ன்னு நிம்மதியான ஜெல்லி ஃபிஷ் `நீங்க மூணு பேரும் ரொம்ப சேட்டைன்னு கேள்விப்பட்டேன்'னு இயல்பா பேச ஆரம்பிச்சது. `ஸாரி, அறிமுகமில்லாத உங்ககிட்ட நாங்க அப்படி விளையாடி இருக்கக் கூடாது'ன்னு மன்னிப்பு கேட்டுச்சு கெளுத்தி மீன். `பரவாயில்லை'ன்னு பெருந்தன்மையா சொல்லுச்சு ஜெல்லி ஃபிஷ். இறாலோ, `இனிமே நீ இருக்கிற பக்கமே நாங்க வர மாட்டோம்பா'ன்னு கொஞ்சம் கோவமா சொல்லுச்சு. நண்டும், `பாரு உன்னால என் ஓட்டுல கொஞ்சம் உடைஞ்சிடுச்சு'ன்னு கண்ணை தொடச்சிக்கிச்சு. உடனே ஜெல்லி ஃபிஷ், `ஐயம் ஸாரி'ன்னு கெஞ்சலா சொல்லுச்சு. அதைக்கேட்டு மனசு உருகிப்போன கெளுத்தியும் நண்டும் இறாலும் ஒரே குரல்ல `நீ இனிமே எங்க ஃபிரெண்டா இருக்கிறதுக்கு சம்மதம் சொன்னாதான் நாங்க உன்னை மன்னிப்போம்'னு  சொல்லுச்சுங்க. `இதுக்குதானே ஆசப்பட்டோம் இத்தனை நாளா'ன்னு நினைச்ச ஜெல்லி ஃபிஷ், ஹஹ்ஹா ஹஹ்ஹான்னு சிரிச்சிட்டு, உடனே அதுங்களோட ஃபிரெண்ட் ரெக்வெஸ்ட்டை அக்செப்ட் பண்ணிக்கிச்சு.

- நாளை சந்திக்கலாம்.

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு