Election bannerElection banner
Published:Updated:

பயந்த மான் குட்டியும் `முஸ்தஃபா' நாய்க்குட்டியும்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories 8

BedTimeStories
BedTimeStories ( Photo: Pixabay )

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினந்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.

ஓர் அழகான காடு. அந்தக் காட்டுல அன்பான மான் குடும்பம் ஒண்ணு ஹேப்பியா வாழ்ந்து வந்துச்சாம். அந்தக் குடும்பத்துல ரொம்ப அழகான மான் குட்டி ஒண்ணும் இருந்துச்சு. அந்த மான் குட்டி கொஞ்ச நாளாதான் தனியா புல் சாப்பிட பழக ஆரம்பிச்சிருந்துச்சு. அதனால எப்படா தன்னோட இருப்பிடத்துல இருந்து புல்வெளிக்குப் போகலாம்னு ஆசையா காத்துக்கிட்டிருக்கும்.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay

ஒருநாள், புல்லு மேய்ஞ்சுட்டு இருந்த மான் குட்டி புல் மேயுற ஆர்வத்துல தன்னோட அம்மா, அப்பாவை விட்டுட்டு ரொம்ப தூரம் வந்திடுச்சு. அதோட அம்மாவும் அப்பாவும் மான் குட்டியை அழுதுட்டே தேட ஆரம்பிச்சாங்க. கொஞ்ச நேரத்துல சூரியன் மேற்கு பக்கம் அஸ்தமனம் ஆக ஆரம்பிக்க, காடு இருட்டாக ஆரம்பிச்சது. மான் குடும்பத்தோட சொந்தக்காரங்க எல்லாம் மான் குட்டியோட அம்மாவையும் அப்பாவையும் சமாதானப்படுத்தி தங்களோட இடத்துக்கு கூட்டிட்டுப் போனாங்க.

காணாமப்போன மான் குட்டி என்ன பண்ணுச்சு தெரியுமா? காட்டுக்குள்ள வழி தவறி நடந்துக்கிட்டிருந்த மான் குட்டி, காடு இருட்டாக ஆரம்பிச்சதும் பயப்பட ஆரம்பிச்சது. காட்டுக்கு பக்கத்துல இருக்கிற கிராமத்தோட வெளிச்சத்தைப் பார்த்த மான் குட்டி, அதை நோக்கி நடக்க ஆரம்பிச்சது. கிராமத்துக்குள்ள நுழைஞ்ச மான் குட்டிக்கு காடு மாதிரி மறைவா எந்த இடமும் கிடைக்கல. என்ன பண்றதுன்னு தெரியாம அது பயந்துக்கிட்டு ரோட்டுல நின்னுக்கிட்டு இருந்துச்சு. அப்போ லொள் லொள்னு ஒரு குரல் கேட்டுச்சு. மான் குட்டி பதறிப்போய் திரும்பிப்பார்க்க பக்கத்துல ஒரு நாய்க்குட்டி நின்னுக்கிட்டிருந்துச்சு.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay

உன்னை மாதிரி ஒருத்தரை நான் கிராமத்துல பார்த்ததே இல்ல. நீ யாருன்னு நாய்க்குட்டி மான் குட்டியைப் பார்த்துக் கேட்க, அதுக்கு மான் குட்டி, நான் பக்கத்துல இருக்கிற காட்டுல இருந்து வழி தப்பி இங்கே வந்துட்டேன். இங்க எனக்கு மறைஞ்சுக்க ஏதாவது இடம் கிடைக்குமான்னு கேட்டுச்சு. உடனே நாய்க்குட்டி என் கூட வா. என்னை வளர்க்கிறவர் எனக்காக ஒரு குட்டி வீடு கட்டிக் கொடுத்திருக்கார். அதுல இன்னிக்கு நைட்டு நீ தங்கிட்டு நாளைக்கு காட்டுக்குப் போலாம்னு சொல்லுச்சு.

மான் குட்டியும் அதுக்கு ஓகே சொல்லுச்சு. அன்னிக்கு ராத்திரி தன் புது நண்பனோட டாக் ஹவுஸ்ல தூங்குச்சு மான் குட்டி. மறுநாள் அதிகாலையில மான் குட்டியை எழுப்பின நாய்க்குட்டி, நீ இதுக்கு மேல ஊருக்குள்ள இருந்தா உன்னை வேட்டை நாய்கள் கண்டுபிடிச்சுடும். அது உன் உயிருக்கே கூட ஆபத்தாகிடும். வா உன்னை உன் காட்டோட வாசல்ல விட்டுடறேன்னு சொல்லுச்சு.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay

மான் குட்டியும் அதுக்கு சம்மதம் சொல்ல, ரெண்டும் காட்டை நோக்கி நடக்க ஆரம்பிச்சுதுங்க. போற வழியில மான் குட்டியோட பசியைப் போக்குறதுக்காக கை நிறைய தக்காளிப்பழங்களைப் பறிச்சுக் கொடுத்துச்சு நாய்க்குட்டி. அப்படியே குழாயடியில தேங்கிக் கிடந்த தண்ணீரையும் குடிக்கச் சொல்லுச்சு. தக்காளி சாப்பிட்டு தண்ணியும் குடிச்சு பசி நீங்கின மான் குட்டி தன்னோட நாய்க்குட்டி நண்பனை நன்றியோட பார்த்துச்சு. கொஞ்ச தூரத்துல காட்டோட எல்லை வர, அங்க மான் குட்டியோட அம்மாவும் அப்பாவும் கவலையோட நின்னுக்கிட்டிருந்தாங்க. மகிழ்ச்சியா துள்ளி குதிச்சு காட்டுக்குள்ள ஓடுன மான் குட்டிக்கு பை பை சொல்லிட்டு வீட்டுக்கு வந்துடுச்சு நாய்க்குட்டி. அதுல இருந்து மான் குட்டியும் நாய்க்குட்டியும் அடிக்கடி காட்டு எல்லையில சந்திச்சு பேசி நட்பா இருந்துச்சுங்களாம்.

- நாளை சந்திப்போம் 

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினந்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு