Election bannerElection banner
Published:Updated:

அன்பான மான்களும் அம்மா சிங்கமும்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்?! #BedTimeStories - 14

BedTimeStories
BedTimeStories ( Photo: Pixabay )

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.

ஓர் அழகான காடு. அந்தக் காட்டுல யானை, புலி, சிங்கம், மான், மயில்னு பல விதமான விலங்குகளும் பறவைகளும் வாழ்ந்துட்டு வந்துச்சுங்க. உயரமா வளர்ந்து நிக்கிற புல்வெளிக்கு நடுவுல மான் ஃபேமிலி ஒண்ணு வாழ்ந்துட்டு வந்துச்சு. அந்த மான் ஃபேமிலியில ரெண்டு குட்டி மான்களும் இருந்துச்சு. ரெண்டும் ஒண்ணாதான் புல் மேயப் போகும். அப்படியொரு நாள் புல் மேய்ஞ்சுக்கிட்டு இருந்தப்போ ரெண்டு சிங்கக்குட்டிகளை மீட் பண்ணுச்சுங்க. உடனே மான் குட்டிகளும் சிங்கக்குட்டிகளும் நல்ல நண்பர்களாகிடுச்சுங்க. பகல் முழுக்க நாலு குட்டிகளும் புல்வெளியில கண்ணாமூச்சி, ஓடிப்பிடிக்கிறதுன்னு ஜாலியா விளையாடிட்டு இருக்கும். லேசா இருட்ட ஆரம்பிச்சதும் சிங்கக்குட்டிங்க அதுங்களோட குகைக்குப் போயிடும். மான் குட்டிகளும் அதுங்களோட வீட்டுக்குப் போயிடும். இப்படியே பல நாள்கள் போச்சு. ஒருநாள் மான் குட்டிகள் ரெண்டும் தங்களோட நண்பர்களான சிங்கக்குட்டிகளை தங்களோட ஃபேமிலிக்கு அறிமுகப்படுத்துறதுக்காக வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துச்சுங்க.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay

தன்னோட மான் குட்டிகள் ரெண்டும், ரெண்டு சிங்கக்குட்டிகளோட வர்றதை தூரத்துலேயே பார்த்துடுச்சு அப்பா மான். அவ்வளவுதான், அதுக்கு ரொம்ப கோவம் வந்திடுச்சு. தன்னோட குட்டிகளைச் சாப்பிடுறதுக்காகத்தான் சிங்கக்குட்டிகள் வருதுன்னு தப்பா நினைச்சுக்கிட்ட அப்பா மான், சிங்கக்குட்டிகளை தன்னோட ஷார்ப்பான கொம்புகளால குத்தி அட்டாக் பண்றதுக்காக ஓடுச்சு.

அப்பா மான் தங்களை நோக்கி கோபமா வர்றதைப் பார்த்த சிங்கக்குட்டிகள் ரெண்டும் பயந்துபோய் மான் குட்டிகள் பின்னாடி ஒளிஞ்சிக்கிச்சுங்க. அப்பாவோட கோவத்தைப் பார்த்த மான் குட்டிகள் ரெண்டும் பயத்துல ஓ’ன்னு அழ ஆரம்பிச்சிடுச்சுங்க. இந்த சத்தத்தைக் கேட்ட அம்மா மான் அங்க ஓடோடி வந்துச்சு. நடந்ததையெல்லாம் புரிஞ்சுக்கிட்ட அம்மா மான், அப்பா மான்கிட்ட `இதுங்க ரெண்டும் குட்டி சிங்கங்கள்தானே. இதுங்களால நமக்கும் நம்ம குழந்தைகளுக்கும் எந்தப் பிரச்னையும் வராது'ன்னு சொல்லி சமாதானப்படுத்துச்சு. அப்பா மானும் அதை ஏத்துக்கிச்சு. அதுல இருந்து மான் குட்டிகள், சிங்கக்குட்டிகளோட அப்பா மானும் அம்மா மானும் சேர்ந்து விளையாட ஆரம்பிச்சிதுங்களாம்.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay
வாத்துக்கு வந்த ஆபத்தும் காப்பாற்றிய நண்பர்களும்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories 13

ஒருநாள், தன்னோட குட்டிகள் ரொம்ப நேரமா குகைக்கு வராததால அம்மா சிங்கம் தன் குட்டிகளைத் தேட ஆரம்பிச்சது. ஓர் இடத்துல தன்னோட குட்டிகளோட சிரிப்பு சத்தம் கேட்டதும், அந்தச் சத்தம் வர்ற பக்கமா அம்மா சிங்கம் நடக்க ஆரம்பிச்சது. ஓர் இடத்துல தன்னோட குட்டிகள் மான் ஃபேமிலியோட விளையாடிட்டு இருந்ததைப் பார்த்துச்சு. மான்களைப் பார்த்தவுடனே வழக்கம்போல கர்ஜனை செய்ய அம்மா சிங்கம் வாயைத் திறந்துச்சு.

கரெக்டா அந்த நேரம் பார்த்து விளையாடிட்டு இருந்த சிங்கக்குட்டி ஒண்ணு டமால்னு கீழே விழுந்திடுச்சு. விழுந்த வேகத்துல அம்மான்னு அழ ஆரம்பிச்சது சிங்கக்குட்டி. உடனே அம்மா மான் ஓடி வந்து சிங்கக்குட்டியைத் தூக்கி அதோட காலை நீவி விட்டுச்சு. அப்பா மான் வீட்டுக்குள்ள ஓடிப்போய் மருந்து கொண்டு வந்து சிங்கக்குட்டியோட கால்ல தடவி விட்டுச்சு.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay
பொய் சொன்ன கிளிக்குஞ்சு; காப்பாற்றிய பருந்து... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்?! #BedTimeStories -12

இதையெல்லாம் பார்த்துக்கிட்டிருந்த அம்மா சிங்கம், `என்னோட குழந்தைகளுக்கு நல்ல நண்பர்களும் இன்னோர் அப்பா, அம்மாவும் கிடைச்சிருக்காங்க. அதை நான் டிஸ்டர்ப் பண்ணக்கூடாது. அவங்களோட நட்பும் அன்பும் தொடரட்டும். நாம இப்போ அவங்க எதிரே போய் நின்னா எல்லாரும் பயந்திடுவாங்க. அதனால, நாம சத்தமில்லாம போயிடுவோம்’னு முடிவு பண்ணிட்டு, தன்னோட குகையை நோக்கி நடக்க ஆரம்பிச்சிடுச்சு.

- நாளை சந்திக்கலாம்

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு