Published:Updated:

வாத்துக்கு வந்த ஆபத்தும் காப்பாற்றிய நண்பர்களும்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories 13

BedTimeStories ( Photo: Pixabay )

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.

வாத்துக்கு வந்த ஆபத்தும் காப்பாற்றிய நண்பர்களும்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories 13

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.

Published:Updated:
BedTimeStories ( Photo: Pixabay )

ஓர் ஊர்ல அனிமல்ஸ் மேல அன்பா இருக்கிற ஆன்ட்டி ஒருத்தங்க வாழ்ந்துட்டு வந்தாங்க. தெருவுல அடிப்பட்டுக் கிடக்கிற வளர்ப்புப் பிராணிகள், பறவைகளையெல்லாம் வீட்டுக்குக் கொண்டு வந்து, அதுங்களுக்கு ட்ரீட்மென்ட் கொடுப்பாங்க. அதுங்க குணமானவுடனே வளர்ப்புப் பிராணிகளைப் பராமரிக்கிற இல்லத்துல ஒப்படைச்சிடுவாங்க. இதுல ஒரு நாயும் ஒரு பூனையும் அந்த ஆன்ட்டியை விட்டுப் பிரியவே மாட்டேன்னு அடம்பிடிச்சதால, அதுங்களை மட்டும் தன்னோட வீட்லேயே வெச்சு வளர்த்துட்டு வந்தாங்க.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay

ஒருநாள் ராத்திரி அந்த ஆன்ட்டி தன்னோட வேலைகளை எல்லாம் முடிச்சிட்டு கார்ல வீட்டுக்கு வந்துட்டு இருந்தப்போ, சோன்னு மழை பெய்ய ஆரம்பிச்சிடுச்சு. சீக்கிரமா வீட்டுக்குப் போய் சேரணும்னு அந்த ஆன்ட்டி காரை வேகமா ஓட்ட ஆரம்பிக்க, அப்போ திடீர்னு நடுரோட்ல ஒரு சின்ன உருவம் ஓடி வந்து நின்னுச்சு. காரை அந்த சின்ன உருவத்து மேல இடிச்சிடுவோமோன்னு பயந்துபோய் அவங்க சடன் பிரேக் போட்டு காரை நிறுத்தினாங்க. அந்தச் சின்ன உருவம் ஓர் அழகான வாத்து. அதோட நண்பர்களெல்லாம் வேற இடத்துக்குப் போயிட, இது மட்டும் வழி தப்பி இந்த ஊருக்குள்ள வந்திடுச்சு. மழையில நனைஞ்சு குளிர்ல நடுங்கிட்டு இருந்த அந்த வாத்தைப் பார்த்ததும் `அய்யோ பாவமே’ன்னு வருத்தப்பட்டாங்க அந்த ஆன்ட்டி. உடனே காரை விட்டு இறங்கி, அந்த வாத்தைத் தூக்கிட்டு வீட்டுக்கு வந்துட்டாங்க.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வாத்தோட வீட்டுக்கு வந்த ஆன்ட்டியை நாயும் பூனையும் சந்தோஷமா வெல்கம் பண்ணாங்க. நாய் ஓடிப்போய் ஒரு டவல் கொண்டு வந்து வாத்தோட தலையைத் துவட்டி விட்டுச்சு. பூனை சூப் செஞ்சு கொண்டு வந்து கொடுத்துச்சு. வாத்துக்கு இதெல்லாம் புதுசா இருந்துச்சு. இதுவரைக்கும் நாய், பூனையெல்லாம் தன்னை விரட்டுறதைதான் வாத்து பார்த்திருக்கு. ஆனா, முதல் தடவையா ஒரு நாயும் பூனையும் தன் மேல அன்பா இருக்கிறதைப் பார்த்ததும் வாத்து செம ஹேப்பியாயிடுச்சு. தன்னோட புது நண்பர்களோட அன்னிக்கு ராத்திரி சேர்ந்து டின்னர் சாப்பிட்டுட்டு நிம்மதியா தூங்குச்சு. மறுநாள் காலையில எழுந்த வாத்து, தன் புது ஃபிரெண்ட்ஸை பிரிய மனசில்லாம வளர்ப்புப் பிராணிகள் இல்லத்துக்கு போக மறுத்துடுச்சு. அன்னியில இருந்து நாய், பூனை, வாத்து மூணும் இணைபிரியாத ஃபிரெண்ட்ஸா இருந்துச்சுங்க.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay

ஒருநாள், வீட்டுக்குள்ளேயே இருந்து போரடிச்சுப் போன வாத்து, தெருவுல இறங்கி நடக்க ஆரம்பிச்சது. முன்ன மாதிரி அதுக்கு நாய், பூனை மேல எல்லாம் அதுக்கு பயமில்ல. தன்னோட ஃபிரெண்ட்ஸ் மாதிரியே தெருவுல இருக்கிற மத்த நாய், பூனையும் தன்னை விரட்ட மாட்டாங்கன்னு அது நம்பிடுச்சு. அதனால, ஒரு பாட்டை ஹம் பண்ணிக்கிட்டே அது ஹாயா நடந்துக்கிட்டு இருந்துச்சு. திடீர்னு தூரத்துல இருந்து லொள் லொள்னு நாயோட குரைக்கிற சத்தம். பயந்துபோன வாத்து சத்தம் வந்த திசையைப் பார்த்துச்சு. அங்க ஒரு நாய் வாத்தை நோக்கி வந்துக்கிட்டு இருந்துச்சு. நடக்கிறதை நிறுத்திட்ட வாத்து, மெதுவா தன்னோட கால்களைத் தூக்கி பின்னாடி வைக்க ஆரம்பிச்சது. அதே நேரம் ஃபிர்னு இன்னொரு சத்தம். அந்த சத்தம் வந்தப் பக்கமா தலையைத் திருப்பிப் பார்த்துச்சு. அங்க ஒரு பூனை நின்னுக்கிட்டு இருந்துச்சு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வாத்துக்கு இந்த நாயையும் பூனையையும் எப்படி ஏமாத்திட்டு தப்பிக்கிறதுன்னு தெரியலை. எந்தப் பக்கம் ஓடணும்னும் தெரியலை. ஆனா, தன்னோட பயத்தை வெளிக்காட்டிக்கிட்டா இந்த நாயும் பூனையும் ரொம்ப வேகமா தன்னைத் தாக்கிடும்கிறது மட்டும் வாத்துக்கு நல்லா புரிஞ்சுப் போச்சு. அதனால, தன்னோட தலையை நிமிர்த்தி தன்னை முறைச்சுப் பார்த்துக்கிட்டிருந்த நாயையும் பூனையையும் தைரியமா பார்த்துச்சு வாத்து. வாத்தோட தைரியத்தைப் பார்த்த நாயும் பூனையும் தங்களோட சத்தத்தைக் குறைச்சுக்க ஆரம்பிச்சதுங்க. கரெக்டா அந்த நேரம் பார்த்து வாத்து, புத்திச்சாலித்தனமா `ஹெல்ப் ஹெல்ப்’னு கத்த ஆரம்பிச்சது. வாத்தோட குரலைக் கேட்ட அதோட ஃபிரெண்ட்ஸ் நாயும் பூனையும் ஓடோடி வந்துச்சுங்க.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay

வாத்து ஆபத்துல இருக்கிறதைப் புரிஞ்சுக்கிட்ட நாயும் பூனையும், வாத்தை அட்டாக் பண்ண ரெடியா இருந்த நாயையையும் பூனையையும் விரட்டி விட்டுச்சுங்க. வாத்து அப்பாடான்னு நிம்மதி பெருமூச்சு விட்டுச்சு. நல்ல நண்பர்கள் கூட இருந்தா எப்பேர்ப்பட்ட ஆபத்துல இருந்தும் தப்பிச்சுடலாம்கிறதை அன்னிக்கு வாத்து நல்லா புரிஞ்சுக்கிச்சு. ஒரு நாயும் பூனையும் வாத்துக்கு நல்ல ஃபிரெண்ட்ஸா இருக்கிறதைப் பார்த்த மத்த நாய், பூனைகளும்கூட அதுக்கப்புறம் அந்த வாத்தோட நல்ல ஃபிரெண்ட்ஸாகிடுச்சுங்க.

- நாளை சந்திப்போம்

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism