Published:Updated:

சூப்பர் ஐடியா கொடுத்த குட்டித்தவளை... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories - 37

Frog ( Photo: Pixabay )

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.

சூப்பர் ஐடியா கொடுத்த குட்டித்தவளை... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories - 37

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.

Published:Updated:
Frog ( Photo: Pixabay )

இந்தக் கதையை குழந்தைக்கு ஆடியோ வடிவிலும் சொல்ல நினைக்கிறீங்களா? அதற்கான Podcast லிங்க் இதோ...

ஒரு ஊர்ல குளம் ஒண்ணு இருந்துச்சு. பொதுவா குளங்கள்ல தாமரைப்பூக்களும் அல்லிப்பூக்களும் இருக்குமில்லையா... ஆனா, இந்தக் குளத்துல வேண்டாத செடிகள் நிறைய வளர்ந்திருந்துச்சு. கூடவே அந்த ஊர்க்காரங்க போட்ட குப்பைகள் வேற. அதனால, அந்தக் குளம் ரொம்ப அழுக்கா, பாவமா இருந்துச்சு. இந்தக் குளத்துல நிறைய தவளைகள் வாழ்ந்துட்டு வந்துச்சுங்க. குளத்தோட தண்ணி ரொம்ப அழுக்கா இருந்ததால, அதுல வசிச்ச தவளைகளும் ரொம்ப அழுக்கா இருந்துச்சுங்க. ஒருநாள் இந்த அழுக்குக் குளத்துல வசிச்சிட்டிருந்த தவளைகளைப் பார்க்க, பக்கத்தூரு குளத்துல வசிக்கிற சில தவளைகள் வந்ததுச்சுங்க. அந்தத் தவளைகளோட ஸ்கின் ரொம்ப பளபளன்னு இருந்துச்சு. அந்தப் பளபளப்பை ஏக்கமா பார்த்துட்டே, அதுங்களை வரவேற்றுச்சுங்க அழுக்குக் குளத்துத் தவளைகள்.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay

பக்கத்து ஊரு தவளைகளுக்கு இந்த ஊரு அழுக்குக் குளத்துல இறங்கிறதுக்கு பிடிக்கவே இல்ல. அதை வெளிப்படையா சொன்னா, அழுக்கா இருக்கிற தவளைகள் வருத்தப்படுமேன்னு தயங்குச்சுங்க. அதனால, `நாமெல்லாரும் காத்தோட்டமா குளத்துக்கு வெளியிலேயே உட்காரலாமே'ன்னு சொல்லுச்சுங்க. பக்கத்து ஊர் தவளைகளோட என்ன நினைக்குதுங்கன்னு அழுக்குத் தவளைகளுக்குப் புரிஞ்சுட்டதால, வருத்தத்தோட `சரி'ன்னு தலையாட்டுச்சுங்க. எல்லா தவளைகளும் ஊர் கதை, உலகக்கதை எல்லாத்தையும் ஜாலியா பேசிட்டே இருந்துச்சுங்க. பேச்சு அப்படியே திசைமாறி இந்த ஊரு குளம் ஏன் இவ்ளோ அழுக்கா இருக்கு அப்படிங்கிற பேச்சுல வந்து நின்னுச்சு.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அழுக்குக் குளத்துல வசிக்கிற தவளைகள், `நாங்க என்ன செய்றது. இந்தக் குளத்துல மனுஷங்க குப்பையைக் கொண்டு வந்து கொட்டுறாங்க. போதாக்குறைக்கு, வேண்டாத செடிகள் வேற முளைச்சுக் கிடக்கு' அப்படின்னு வருத்தப்பட்டுச்சுங்க. அதுக்கு பக்கத்து ஊரு தவளைகள், மனுஷங்க மேலேயும் வேண்டாத செடிகள் மேலயும் குற்றம் சொல்றதை விட்டுட்டு, நீங்க வசிக்கிற குளத்தைச் சுத்தமாக்க என்ன செய்யணும்னு யோசிங்க' அப்படின்னு சொல்லுச்சுங்க. `அது தெரியாமத்தானே நாங்க இந்த அழுக்குக் குளத்துல கிடந்து அவஸ்தைப்படுறோம். இல்லன்னா, நாங்களும் உங்களை மாதிரியே சுத்தமான குளத்துல வாழ்ந்து ச்சும்மா பளபளன்னு இருக்க மாட்டோமா'ன்னு லைட்டா கோவமா பேசுச்சுங்க அழுக்குக் குளத்துத் தவளைகள்.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay

அப்போ, பக்கத்து ஊரு தவளைகள் கூட்டத்துல இருந்த குட்டித்தவளை ஒண்ணு `நா ஒரு ஐடியா சொல்லட்டுமா'ன்னு கேட்டுச்சு. உடனே எல்லா தவளைகளும் `சொல்லு தங்கம்'னு அதை உற்சாகப்படுத்துச்சுங்க. அந்தக் குட்டித் தவளை பேச ஆரம்பிச்சுது. `மொதல்ல இந்தக் குளத்தை சுத்தம் பண்ணணும். அப்புறம், அந்த வேண்டாத செடிகள்கிட்ட `உங்களால இந்தக் குளம் கெட்டுப் போகுது. ப்ளீஸ் நீங்க வெளியே வந்துடுங்க'ன்னு கேட்கலாம். எங்க ஊர் குளத்துல நிறைய தாமரைப்பூக்கள் இருக்கு. அதுல நிறைய பூக்களை வேரோட எடுத்துட்டு வந்து இந்தக் குளத்துல போட்டுடலாம். குளம் அழகா இருந்தா மனுஷங்க யாருக்கும் குப்பை கொட்ட மனசு வராதுல்ல' அப்படின்னுச்சு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குட்டித் தவளையோட ஐடியா எல்லா தவளைகளுக்கும் ரொம்ப பிடிச்சுப்போச்சு. உடனே எல்லா தவளைகளும் ஒண்ணா சேர்ந்து கஷ்டப்பட்டு குளத்தைச் சுத்தம் பண்ண ஆரம்பிச்சிதுங்க. தவளைகளோட கஷ்டத்தைப் பார்த்த குளத்துல இருந்த வேண்டாத செடிகள், `நாங்க எல்லாம் இந்தக் குளத்தைவிட்டு வெளியே வந்துடுறோம். உங்களுக்கு எங்களாலான சின்ன உதவி'ன்னு சிரிச்சுகிட்டே சொல்லுச்சுங்க. அழுக்குத் தவளைங்க இப்போ பயங்கர ஹேப்பியாகிடுச்சுங்க.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay

அடுத்த வேலையா பக்கத்து ஊரு குளத்துக்குப் போய், அதுல இருந்த தாமரைப் பூக்கள்கிட்ட `எங்க ஊர் குளத்தை நாங்க சுத்தம் பண்ணிட்டோம். உங்கள்ல கொஞ்சம் பேரு எங்க ஊர் குளத்துல வந்து வாழ்ந்தீங்கன்னா, மக்கள் யாரும் குப்பை போட மாட்டாங்க'ன்னு ரிக்வெஸ்ட் பண்ணுச்சுங்க. தாமரைப்பூக்களும் அதை ஏத்துக்கிட்டு தவளைகளோட கிளம்புச்சுங்க. அழுக்கு குளம் இப்போ தவளைகள் தண்ணியில முகம் பார்த்துக்கிற அளவுக்கு சுத்தமான குளமாயிடுச்சு. கூடவே அழகழகான தாமரைப் பூக்கள் வேற பூத்துக் குலுங்க ஆரம்பிச்சது. அந்த ஊர் மக்களுக்கு இப்போ குளத்துல குப்பையைக் கொட்ட மனசே வரலை. இப்போ அழுக்குக் குளம் சுத்தமான குளமாகிடுச்சு. அழுக்குத் தவளைகள் பளபளப்பான தவளைகளாயிடுச்சுங்க.

- நாளை சந்திக்கலாம்.

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism