Published:Updated:

பாட்டி வீட்டுக்குப் போன அணில் பிள்ளை... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்?! #BedTimeStories - 21

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்தக் கதையை குழந்தைக்கு ஆடியோ வடிவிலும் சொல்ல நினைக்கிறீங்களா? அதற்கான Podcast லிங்க் இதோ...

ஒரு கிராமத்துல தென்னந்தோப்பு ஒண்ணு இருந்துச்சு. அந்தத் தோப்புல ஓர் அணில் குடும்பம் வாழ்ந்துட்டு வந்துச்சு. மழைக்காலம் வர்றதுக்கு முன்னாடி தங்களோட குடும்பத்துக்கான கொட்டைகளையும் பழங்களையும் சேகரிச்சு வெச்சுக்கிறது, அந்த அணில் குடும்பத்தோட வழக்கம். ஆனா, ஒரு தடவை அந்த அணில் குடும்பத்துக்கு சேமிச்சு வெச்சுக்கிற அளவுக்கு கொட்டைகளும் பழங்களும் கிடைக்கலை. அதனால அம்மா அணில் பக்கத்து கிராமத்துல இருக்கிற தன்னோட அம்மா அணிலுக்கு, அதோட புறா நண்பன் வழியா கடிதமொண்ணு அனுப்புச்சு. அந்தக் கடிதத்துல, `அம்மா இந்த முறை எங்களால மழைக்காலத்துக்கான உணவைச் சேகரிச்சு வைக்க முடியலை. உங்க வீட்டுக்கு என்னோட அணில் பிள்ளையை அனுப்பி வெச்சா எங்களுக்காகக் கொஞ்சம் உணவுப் பொருள்களை அனுப்பி வைக்க முடியுமா’ன்னு எழுதி இருந்துச்சு. அதைப் படிச்ச பாட்டி அணில் `சரி தர்றேன்’னு பதில் கடிதம் அனுப்புச்சு.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay
ரெஸ்டாரன்ட் நடத்திய இறால், தொல்லை கொடுத்த சுறா! - ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories - 20

உடனே அம்மா அணில், தன்னோட அணில் பிள்ளையை பக்கத்து கிராமத்துக்கு அனுப்பி வெச்சது. அணில் பிள்ளையும் `லல்லா'ன்னு பாட்டு பாடிட்டே பக்கத்து கிராமத்தை நோக்கி நடக்க ஆரம்பிச்சது. போற வழியில வயல்வெளி ஒண்ணு வந்துச்சு. அங்க எலிக்குஞ்சு ஒண்ணு பறவைகளைப் பிடிக்கிறதுக்கு வெச்சிருந்த வலையில மாட்டிக்கிட்டு இருந்துச்சு. எலியோட வாய் வலைக்குள்ள நல்லா மாட்டிட்டு இருந்ததால, எலியால அந்த வலையைக் கடிச்சு துப்ப முடியாம தவிச்சிட்டு இருந்துச்சு.

அந்த நேரம் பார்த்து அணில் பிள்ளை அந்தப் பக்கமா வர, எலி அழுதுகிட்டே உதவி கேட்டுச்சு. மனசு இரங்கிப்போன அணில் உடனே தன்னோட பல்லால வலையை கட் பண்ணி, எலியைக் காப்பாத்துச்சு. சந்தோஷமான எலி, தன்னோட வலையில சேகரிச்சு வைச்சிருந்த தானியங்கள்ல பாதியை அணில் பிள்ளைக்கு கொடுத்துச்சு.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay

தானியங்களை எடுத்துட்டு நடக்க ஆரம்பிச்சது அணில் பிள்ளை. போற வழியில ஒரு கூண்டுக்குள்ள கிளியொண்ணு அழுதுகிட்டு இருந்ததைப் பார்த்துச்சு. அந்தக் கூண்டு பக்கத்துல யாரும் இல்லாததால, கிளிகிட்ட போய் `ஏன் கிளியக்கா அழறே’ன்னு கேட்டுச்சு அணில் பிள்ளை. அதுக்கு கிளி `என்னை வேடன் ஒருத்தன் பிடிச்சு இந்தக் கூண்டுல அடைச்சு வெச்சுட்டான். உன்னால என்னைக் காப்பாத்த முடியுமா’ன்னு பாவமா கேட்டுச்சு. டிரை பண்றேன்னு சொன்ன அணில், அக்கம் பக்கம் தேடி ஒரு பெரிய கல்லை எடுத்துட்டு வந்து கூண்டோட பூட்டு மேல ஒரே போடு போட்டுச்சு. பூட்டு டமால்னு ஓப்பனாயிடுச்சு. கிளி கூண்டை விட்டு வேகமா வெளியே வந்துடுச்சு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`அழகான அணில் பிள்ளையே, நீ என்னைக் காப்பாத்தினதுக்கு பிரதி உபகாரமா நான் வெச்சிட்டிருக்கிற பழங்கள்ல பாதியை உனக்குத் தர்றேன்னு சொல்லுச்சு கிளி. சொன்ன மாதிரியே பழங்களைக் கொடுக்கவும் செஞ்சுச்சு. எலி கொடுத்த தானியங்களையும் கிளி கொடுத்த பழங்களையும் சுமக்க முடியாம சுமந்துக்கிட்டு, அணில் பிள்ளை அதோட பாட்டி வீட்டை நோக்கி நடக்க ஆரம்பிச்சது. போற வழியில ஒரு முந்திரி மரம் வாடிப்போய் இருந்துச்சு. அந்த மரம், அணில் பிள்ளையைப் பார்த்ததும் `அணிலே அணிலே என்னோட வேர்ல நீ தண்ணி ஊத்தினா, நான் உனக்கு என் மரத்துல இருக்கிற எல்லா முந்திரிக்கொட்டைகளையும் தர்றேன்னு சொல்லுச்சு.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay
குளிக்காத குட்டி யானை... அம்மா தந்த சர்ப்ரைஸ்! - ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories - 18

முந்திரி மரம் கேட்ட மாதிரியே அணில் பிள்ளையும் அதோட வேர்ல தண்ணி ஊத்துச்சு. ஜில்லுனு தண்ணி பட்டதும் தலையை வேகமா ஆட்டுச்சு முந்திரி மரம். அவ்வளவுதான், அதுகிட்ட இருந்த அத்தனை முந்திரிக்கொட்டைகளும் பொலபொலன்னு தரையில விழுந்துச்சு. அத்தனையையும் அள்ளிக்கிட்டு அணில் பிள்ளை தன்னோட பாட்டி வீட்டுக்குப் போச்சு. அணில் பிள்ளையையும் அது சுமந்துக்கிட்டு வந்த பொருள்களையும் பார்த்த பாட்டி அணில் ரொம்ப ஹேப்பியாகிடுச்சு. தனக்குக் கிடைச்ச உணவுப் பொருள்கள்ல பாதியைப் பாட்டிக்குக் கொடுத்துட்டு, மீதியை எடுத்துட்டு தன்னோட கிராமத்துக்குப் போச்சு அணில் பிள்ளை. நடந்த விஷயங்களையெல்லாம் தெரிஞ்சுக்கிட்ட அம்மா அணில் தன் பிள்ளையை நினைச்சு ரொம்ப பெருமைப்பட்டுச்சு.

- நாளை சந்திப்போம்

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு