Election bannerElection banner
Published:Updated:

காளான்களுக்கு ரியா செய்த சத்தியம்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories - 39

Mushroom
Mushroom ( Image by Engin Akyurt from Pixabay )

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.

இந்தக் கதையை குழந்தைக்கு ஆடியோ வடிவிலும் சொல்ல நினைக்கிறீங்களா? அதற்கான Podcast லிங்க் இதோ...

ஓர் ஊர்ல ரியாங்கிற குட்டிப் பொண்ணு அவ ஃபேமிலியோட வாழ்ந்துட்டு வந்தா. ரியா சரியாவே சாப்பிட மாட்டாங்கிறதால ரொம்ப ஒல்லியா, பலவீனமா இருந்தா. அவங்க அம்மாவும் அப்பாவும் விதவிதமா சமைச்சுக் கொடுத்தாலும் ரியா சாப்பிட மாட்டா. என்ன செஞ்சா ரியா நல்லா சாப்பிடுவானு யோசிச்ச அவளோட அம்மாவும் அப்பாவும் வீட்டுக்குப் பின்னாடி ஒரு தோட்டம் போடலாம்னு முடிவெடுத்தாங்க. வீட்டுத் தோட்டத்துல ரியா கையாலயே வளர்த்த காய்கறிகள்னா, ஒருவேளை அவ ஆசையா சாப்பிடுவாளோன்னு நினைச்சாங்க அவங்க.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay
காட்டுக்குள்ள நடந்த சுதந்திர தினவிழா... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories - 38

பிளான் செஞ்சபடியே தோட்டம் போடுறதுக்கான விதைகளை வாங்க ரியாவையும் கூட்டிக்கிட்டு கடைக்குப் போனாங்க ரியாவோட அம்மாவும் அப்பாவும். கத்திரிக்காய் விதை, அவரைக்காய் விதை, கீரை விதைகள்னு தோட்டம் போடுறதுக்கான நிறைய விதைகளை அவங்க வாங்கிட்டிருக்கும்போது, அங்கிருந்த சில காளான் விதைகள் ரியாவையே பார்த்துட்டிருந்துச்சுங்க. அதுங்களுக்கு குட்டிப் பொண்ணு ரியாவை ரொம்ப பிடிச்சிட்டதால, தாங்களும் ரியா வீட்டுக்குப் போகணும்னு ஆசைப்பட்டுச்சுங்க. அதனால, ரியா அதுங்களோட பக்கமா வர்றப்போ எல்லாம் `ஷ் ஷ்'னு சத்தம் கொடுத்து அவளோட கவனத்தைத் தங்களோட பக்கம் ஈர்க்க ட்ரை பண்ணுச்சுங்க. ஆனா, ரியாவுக்கு காளான் விதைகள் கூப்பிட்டது காதுல விழல. வேற என்ன பண்றதுன்னு யோசிச்ச காளான் விதைகள் ரியாவோட அம்மாவை `ஆன்ட்டி ஆன்ட்டி'ன்னு கூப்பிட்டுச்சுங்க. அவங்க யாரு கூப்பிடுறதுன்னு சுத்தும் முத்தும் பார்க்க `கீழே தரையில பாருங்க ஆன்ட்டி'ன்னு குரல் கொடுத்துச்சுங்க காளான் விதைகள். ரியாவோட அம்மா தரையைப் பார்த்தாங்க. அங்கே சில காளான் விதைகள் அதுங்களோட குட்டி வாய் நிறைய சிரிப்போட நின்னுக்கிட்டிருந்துச்சுங்க.

`என்னை எதுக்கு கூப்பிட்டீங்க'ன்னு கேட்டாங்க ரியாவோட அம்மா. `ஆன்ட்டி நீங்க ரியா பாப்பா சாப்பிடுறதுக்காகத் தோட்டம் போடப் போறீங்க இல்லியா. எங்களையும் வாங்கிட்டுப் போய் வெயில்படாத ஓரிடத்துல போட்டுடுங்க. நாங்களும் வளர்ந்து ரியா பாப்பாவை சாப்பிட வைப்போம்னு சொல்லுச்சுங்க. ரியா அம்மாவுக்கும் இது நல்ல யோசனையா தோணுச்சு. உடனே சரின்னு சொல்லிட்டு, கடைக்காரர்கிட்ட பணத்தைக் கொடுத்து காளான் விதைகளை வாங்கினாங்க.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay
சூப்பர் ஐடியா கொடுத்த குட்டித்தவளை... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories - 37

வீட்டுக்குப் போனதும் ரியாவோட அப்பா, `இது கீரை விதை', 'இது அவரை விதை'ன்னு ஒவ்வொரு விதையா எடுத்துக்காட்டி அவ மனசுல காய்கறிகள் மேல ஆசை வரவழைக்கிறதுக்கு ட்ரை பண்ணிட்டிருந்தாரு. ஆனா, அந்தப் பையில காளான் விதைகள் மட்டும் மிஸ்ஸிங். ரியாவோட அம்மா `அச்சோ எங்கே போச்சு அந்த பேசுற காளான் விதைகள்'னு கடைக்கு கொண்டுபோன பையைத் தலைக்குப்புற கொட்டினாங்க. ம்ஹூம்... காளான் விதை பாக்கெட் மட்டும் காணவே இல்ல. `சரி, அதுதான் பேசுற விதையாச்சே. வர்ற வழியில எங்கியாவது பையைவிட்ட வெளியே குதிச்சிருக்கும்'னு அவங்களே முடிவு பண்ணிக்கிட்டாங்க. ஆனா, அந்த காளான் விதைகள் வெளியே எங்கேயும் குதிக்கல. கடைக்குக் கொண்டுபோன பையை வீட்டுக்குள்ள கொண்டு வந்தவுடனே அதுல இருந்து குதிச்சு ரியாவோட பெட்ரூமுக்குள்ள ஓடிப்போய் ஒளிஞ்சுக்கிச்சுங்க.

அன்னிக்கு நைட் எல்லாரும் சாப்பிட்டுட்டு தூங்கப் போயிட்டாங்க. ஆனா, ரியா மட்டும் தூக்கம் வராம புரண்டு புரண்டு படுத்துட்டு இருந்தா. அப்போ `ரியா'ன்னு படுக்கைக்கு கீழ இருந்து ஒரு குரல் கேட்டுச்சு. என்ன சத்தம்னு ரியா கட்டிலுக்கு அடியில பார்க்க, அங்க நிறைய காளான் விதைகள் ஒரு வாழைப் பழத்தைத் தூக்க முடியாம தூக்கிட்டு நின்னுக்கிட்டிருந்துச்சுங்க. `யார் நீங்க, என் ரூமுக்குள்ள நீங்க எப்படி வந்தீங்க, எதுக்கு வாழைப்பழத்தோட என் கட்டிலுக்கு அடியில நிக்கிறீங்க'ன்னு சரமாரியா கேள்வி கேட்டா ரியா. `ஒவ்வொரு கேள்வியா கேளு ரியா'ன்னு கூலா அவளை சமாதானப்படுத்தின காளான் விதைகள்,அதுங்க ரியா அம்மாகிட்ட பேசினதுல ஆரம்பிச்சு ரியா பெட்ரூம்ல வந்து ஒளிஞ்சுக்கிட்டது வரைக்கும் எல்லாத்தையும் சொல்லுச்சுங்க. `எல்லாம் சரி எதுக்கு இந்த வாழைப்பழம்'னு ரியா கேட்க, `நீ சரியா சாப்பிடாததால தூக்கம் வராம கஷ்டப்படுறே. உனக்காக வாழைப்பழம் கொண்டு வந்திருக்கோம்'னு பதில் சொல்லுச்சுங்க காளான் விதைகள்.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay

ரியாவுக்கு பேசுகிற காளான் விதைகளை ரொம்ப பிடிச்சுப்போச்சு. அதனால, அதுங்களோட கைகள்ல இருந்த வாழைப்பழத்தை வாங்கி சாப்பிட ஆரம்பிச்சா. அதுக்கு அடுத்த நாள் ரியாவோட அம்மாவும் அப்பாவும் அவங்க வாங்கிட்டு வந்த விதைகளை தோட்டத்துல விதைச்சாங்க. காளான் விதைகள் கேட்டுக்கிட்டபடி, காளான் விதைகளை நிழலான ஓரிடத்துல விதைச்சா ரியா. கொஞ்ச காலமானதும் செடிகள் எல்லாம் நல்ல வளர்ந்து பூ பூத்துக் காய்க்க ஆரம்பிச்சிதுங்க. கூடவே காளான் விதைகளும் முளைச்சு அழகான காளான்கள் வளர ஆரம்பிச்சது. அந்தக் காளான்களும் நல்லா பேசுங்க. அதனால, ஸ்கூல் விட்டு வீட்டுக்கு வந்தவுடனே, தோட்டத்துக்குப் போய் காளான்கள்கிட்ட பேச ஆரம்பிச்சிடுவா ரியா. இதையே சாக்கா வெச்சு `நல்லா சாப்பிட்டாதான் நல்லா படிக்கலாம், நல்லா தூங்கலாம்'னு ரியாவுக்கு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சதுங்க காளான்கள். காளான்கள் கூட பேசிப்பேசி தன் வீட்டுத் தோட்டத்துல இருந்த மத்த காய்கறிகளோட சத்துகள் பத்தியும் தெரிஞ்சுகிட்டா ரியா.

ஒரு நாள் ஸ்கூல் விட்டு வீட்டுக்கு வந்த ரியா, அம்மா கொடுத்த சாண்ட்விச்சை ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டா. அந்த சாண்ட்விச் ரொம்ப டேஸ்ட்டா இருந்ததால அம்மாகிட்ட அது என்ன சாண்ட்விச்சுன்னு கேட்டா. அவங்க அம்மா என்ன பதில் சொன்னாங்க தெரியுமா? காளான் சாண்ட்விச். `ஓ மை காட் என்னோட ஃபிரெண்டையா நான் சாப்பிட்டேன். அப்படின்னா இனிமே என் காளான் ஃபிரெண்டை நான் பார்க்க முடியாதா'ன்னு அழுதுட்டே தோட்டத்துக்குப் போனா ரியா. அங்க காளான்கள் வளர்ந்திருந்த இடம் காலியா இருந்துச்சு. ரியா ரொம்ப சோகமாயிட்டா.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay
ஜெல்லி மீன் கொடுத்த ஃபிரெண்ட் ரெக்வெஸ்ட்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories - 35

காளான்கள் இல்லன்னாலும் தினமும் தோட்டத்துக்குபோற பழக்கத்தை மட்டும் விடலை ரியா. ஒருவாரம் கழிச்சு தோட்டத்துல புதுசா சில காளான்கள் மொட்டு விட்டிருக்கிறதைப் பார்த்த ரியா, `நீ மறுபடியும் வந்துட்டியா ஃபிரெண்ட்'னு சந்தோஷமா கத்திக்கிட்டே காளான்கள்கிட்ட போனா. `யெஸ் நாங்க வந்துட்டோம். உங்கம்மா எங்களைப் பறிக்கப் பறிக்க நாங்க வளர்ந்துட்டே இருப்போம். நீ அடிக்கடி விதைபோட்டா மட்டும் போதும். ஆனா, நீ எங்களை சாப்பிடுறதா பிராமிஸ் பண்ணா மட்டும்தான் நாங்க வளர்வோம்'னு சொல்லுச்சுங்க காளான்கள். ரியாவும் அதுக்கு சந்தோஷமா யெஸ்னு சொன்னா.

- நாளை சந்திக்கலாம்.

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு