Published:Updated:

குளிக்காத குட்டி யானை... அம்மா தந்த சர்ப்ரைஸ்! - ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories - 18

Elephant
Elephant ( Image by UnifiArt from Pixabay )

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.

இந்தக் கதையை குழந்தைக்கு ஆடியோ வடிவிலும் சொல்ல நினைக்கிறீங்களா? அதற்கான Podcast லிங்க் இதோ...

ஒரு காட்ல பெரிய யானைக் குடும்பம் ஒண்ணு வாழ்ந்துட்டு வந்துச்சு. அந்தக் குடும்பத்துல குளிக்கிறதே பிடிக்காத குட்டி யானை ஒண்ணும் இருந்துச்சு. அம்மா யானை குளிக்கச் சொல்லிக் கூப்பிட்டா ஓடிப் போய் மரங்களுக்குப் பின்னால ஒளிஞ்சிக்கும். அம்மா யானை விரட்டிட்டு வந்தா ஓட்டமா ஓடிப் போயிடும். `ப்ளீஸ் குளிடா செல்லம்னு அம்மா யானை கெஞ்சினா, முகத்தை அப்பாவியா வெச்சுக்கிட்டு `நாளைக்குக் குளிக்கிறேம்மா’ன்னு சொல்லும். அம்மா யானையும் அதை நம்பிடும். மறுநாள் `இன்னிக்கு குளிக்கிறேன்னு சொன்னியே செல்லம். வா’ன்னு கூப்பிட்டா `நான் நாளைக்குத்தானே குளிக்கிறேன்னு சொன்னேன் மம்மி. நீங்க இன்னிக்கு கூப்பிடுறீங்க’ன்னு ஏமாத்திடும். அம்மா யானைக்கு குட்டி யானை மேல கோபப்படுறதா, இல்ல அதோட சுட்டி சேட்டைகளை ரசிக்கிறதான்னே புரியலை.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay

இப்படியே பல நாள் குளிக்காமலே டிமிக்கிக் கொடுத்திட்டு இருந்துச்சு குட்டி யானை. இதைக் குளிக்க வெக்கிறதுக்கு ஏதாவது ஐடியா சொல்லுங்கன்னு தன் குடும்பத்துல இருந்த மத்த யானைகள்கிட்ட கேட்டுச்சு அம்மா யானை. அந்த யானைகளும் சில ஐடியாஸ் கொடுத்துச்சுங்க அம்மா யானைக்கு. அதையெல்லாம் ஒவ்வொண்ணா ஃபாலோ பண்ண ஆரம்பிச்சது அம்மா யானை.

ஒருநாள் தன் மேல மண்ணள்ளி போட்டுக்கிற சாக்குல குட்டி யானை மேலயும் மண்ணள்ளிப் போட்டுடும். அப்படியாவது குட்டி யானை குளிக்க சம்மதிக்கும்கிற எண்ணத்துல. ஆனா, குட்டி யானை அம்மா யானை தும்பிக்கையால மண்ணை அள்ள ஆரம்பிக்கிறப்போவே எஸ்கேப்புன்னு கத்திக்கிட்டு ஓடிப் போயிடும். சில நேரங்கள்ல அம்மா யானை சத்தமில்லாம குட்டி யானைக்குப் பின்னாடி போய் அது மேல மண்ணைப் போட்டுடும். இதுக்கெல்லாம் பயப்படற ஆளா நம்ம குட்டி யானை? தன்னோட குட்டித் தும்பிக்கையால மண்ணை நல்லா தட்டி விட்டுட்டு கூலா இருக்கும். `மேல எல்லாம் மண்ணாயிருக்கு. வாடா செல்லம் ஆத்துக்குக் குளிக்கப் போகலாம்னு அம்மா யானை கூப்பிட்டா, `உடம்பு மேல மண்ணு இருந்தா ஜில்லுன்னு இருக்கு மம்மின்னு சொல்லி சமாளிச்சிடும்.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay
அன்பான மான்களும் அம்மா சிங்கமும்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்?! #BedTimeStories - 14

இன்னொரு நாள், `உன் மேல கெட்ட ஸ்மெல் வருது குட்டி. இன்னிக்காவது குளியேன்’ அப்படின்னுச்சு அம்மா யானை. `கெட்ட ஸ்மெல் வந்தாதான் கொசு என்னைக் கடிக்காது மம்மி. அப்புறம் எனக்கு மலேரியா காய்ச்சல், டெங்கு காய்ச்சல் எல்லாம் வராது. நீங்களும் என்னைப்பத்தி கவலைப்படாம நிம்மதியா இருக்கலாம்னு சொல்லிட்டு சிரிச்சுது குட்டி யானை. அம்மா யானை பேன்னு முழிச்சது.

அடுத்து, நீ குளிக்க மாட்டேன்கிறே... அதனால உன்மேல நிறைய கிருமிகள் இருக்கும். அதெல்லாம் உன் உடம்பைவிட்டுப் போகணும்னா நீ குளிச்சிதான் ஆகணும்னு அம்மா யானை லைட்டா பயங்காட்டுச்சு குட்டி யானைக்கு. இதுக்கெல்லாம் பயப்படுறா ஆளா நம்ம குட்டி யானை? `டோன்ட் வொர்ரி மம்மி. நான் தினமும் சன் பாத் எடுத்துக்கிறேன். என் மேல கிருமிகள் எல்லாம் செத்தே போயிடும்னு சொல்லிட்டு ஈன்னு பல்லைக் காட்டுச்சு குட்டி யானை. அம்மா யானைக்கு குட்டி யானையோட சேட்டையைப் பார்த்து சிரிப்பு வந்துடுச்சு. அம்மா சிரிச்சவுடனே `ஆஹா... இன்னிக்கும் அம்மாவை ஏமாத்திட்டோம்னு குட்டி யானை ஜாலியாகிடுச்சு.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay
`முயல் ஆமை ரேஸ்... இந்த முறை என்னாச்சு தெரியுமா?' - ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories 17

இப்படியே பல நாள் குளிக்காமலே இருந்துச்சாம் குட்டி யானை. வெயில் காலம் போய் மழைக்காலம் வந்துடுச்சு. அப்பப்போ சின்ன சின்னதா தூறல் போட ஆரம்பிச்சது வானம். அந்த நேரத்துல எல்லாம் அம்மாவோட வயித்துக்கடியில ஒளிஞ்சுக்கிச்சு குட்டி யானை. அப்போதான் அம்மா யானைக்கு ஓர் ஐடியா வந்துச்சு. ஒருநாள் தூறல்ல நனையாம இருக்க அம்மா யானைக்கு அடியில குட்டி யானை நின்னுக்கிட்டு இருந்துச்சு. அப்போ அம்மா யானை என்ன பண்ணுச்சு தெரியுமா? நைசா குட்டியை விட்டு நகர்ந்திடுச்சு. குட்டி யானை மேல தூறல் பட ஆரம்பிச்சது. ஜில்லுனு தூறல் பட்டவுடனே குளுகுளுன்னு ஹேப்பியா இருந்துச்சு. அப்படியே மழையில நனைஞ்சுக்கிட்டே அம்மாவைப் பார்த்து `மம்மி இதுதான் குளிக்கிறதா. இது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு'ன்னு சொல்லுச்சு. அம்மா யானை அப்பாடா இனிமே நம்ம பிள்ளையும் மத்த யானைக்குட்டிகள் மாதிரி குளிக்கும்னு நிம்மதி பெருமூச்சு விட்டுச்சாம்.

- நாளை சந்திக்கலாம்

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.
அடுத்த கட்டுரைக்கு