Published:Updated:

மரங்கள் இப்ப ஹேப்பி அண்ணாச்சி... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories - 45

BedTimeStories
News
BedTimeStories ( Photo: Pixabay )

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.

மரங்கள் இப்ப ஹேப்பி அண்ணாச்சி... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories - 45

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.

Published:Updated:
BedTimeStories
News
BedTimeStories ( Photo: Pixabay )

இந்தக் கதையைக் குழந்தைக்கு ஆடியோ வடிவிலும் சொல்ல நினைக்கிறீங்களா? அதற்கான Podcast லிங்க் இதோ...

முன்னொரு காலத்துல, வானுலகத்துல ரொம்ப நாட்டி பாய் ஒருத்தன் வாழ்ந்துட்டு வந்தான். அவனால வானத்துலேயும் வாழ முடியும். பூமியிலேயும் வாழ முடியும். இந்தத் திறமையை வெச்சுட்டு அவன் என்னல்லாம் சேட்டை செஞ்சான் தெரியுமா? நைட்ல தூங்கிட்டிருக்கிற சூரியனை `எந்திரி சூரி, எந்திரி சூரி'ன்னு கத்தி எழுப்புவான். சூரியன் தூக்க கலக்கத்தோட திருதிருன்னு முழிச்சா, `என்ன முழிக்கிறே. எனக்குத் தூக்கமே வரல. நான் வாக்கிங் போகப்போறேன். நீயும் என் கூட வந்து நட'ன்னு அடம் பிடிப்பான். பகல்ல தூங்கிட்டிருக்க நிலாவோட முகத்துல தண்ணியை தெளிச்சு பூமியில இருக்கிற பீச்சுக்கு கூட்டிட்டு வருவான். பாவம் நிலா தூங்கிட்டே நிக்கும். அதோட மடிமேல சாய்ஞ்சு உட்கார்ந்துட்டு கடல்ல மீன் பிடிப்பான் அந்த நாட்டி பாய். சூரியனையும் நிலாவையும் இவன் படுத்துற பாட்டைப் பார்த்துட்டு, நட்சத்திரங்களெல்லாம் இவனைப் பார்த்தாலே ஓடி ஒளிஞ்சிக்குங்க.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay

இந்த நாட்டி பாய் எவ்ளோ சேட்டை செஞ்சாலும், ரொம்ப சின்னப் பிள்ளைங்கிறதால சூரியனோ, சந்திரனோ, ஏன் நட்சத்திரங்களோகூட அவனைக் கோவிச்சுக்கவே செய்யாதுங்க. அதனால, தன்னோட சேட்டைகளை ரொம்ப ஹேப்பியா தொடர்ந்து செஞ்சுகிட்டிருந்தான் அந்த நாட்டி பாய். இந்த நேரத்துலதான் அதுவரைக்கும் கடல் மட்டுமே இருந்த பூமியில மரம், செடி, கொடி, மலை இப்படி எல்லாம் உருவாக ஆரம்பிச்சது. ஆனா, அந்த நேரத்துல பூமியில மரம், செடி, கொடிதான் இருந்துச்சே ஒழிய, அவற்றுல பூக்களே இல்ல. அதனால, பூமி அழகாவே இல்ல. பூக்கள் இல்லாததால பூச்சியினங்கள் எல்லாம் `நாங்க பூமிக்குப் போக மாட்டோம்பா. அங்க எங்களுக்கு சாப்பிட தேனே இருக்காது'ன்னு சொல்லிட்டு மண்ணுக்கு அடியிலேயே இருந்துக்குச்சுங்க. பறவைகளோ, `பூச்சிகள் இல்லாத பூமியில நாங்க எப்படி உயிர் வாழுறது'ன்னு கேட்டுட்டு வானவில் மேல வரிசையா உட்கார்ந்துக்கிச்சுங்க.

இதையெல்லாம் பார்த்த பூமிக்கு என்ன செய்றதுன்னே தெரியலை. உடனே வானத்துல இருக்கிற சூரியன்கிட்டேயும் நிலாகிட்டேயும், மரங்கள் பூக்கிறதுக்கு என்ன செய்யலாம்'னு டிஸ்கஸ் செய்ய ஆரம்பிச்சது. அதுக்கு நிலா, நான் வேணா வானத்துல இருக்கிற தண்ணியை பூமியில இருக்கிற மரம், செடி, கொடி மேல ஊத்தட்டா'ன்னு கேட்டுச்சு. பூமியும் `ம்'னு அதுக்கு தலையாட்டுச்சு. உடனே வானத்துல இருந்து பூமியில தண்ணீர் தூறலா விழ ஆரம்பிச்சது. ம்ஹூம்... பூக்கள் என்ன, மரங்கள்ல ஒரு மொட்டுகூட விடலை. பூமி நொந்து போச்சு. இதைப் பார்த்த சூரியன் `நான் வேணா மரங்கள் மேல சுள்ளுன்னு வெயிலை அடிக்கவா'ன்னு கேட்டுச்சு. அதைச் செய், செய்யாதேன்னு பூமி சொல்றதுக்கு முன்னாடியே சூரியன் சுள்ளுன்னு பூமி மேல வெயிலை அடிக்க ஆரம்பிச்சது. அவ்வளவுதான் பூமி சூடு தாங்காம துடிச்சுப் போச்சு. மரங்களோ வாடிப் போயிடுச்சு.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay

பூமிக்கு ரொம்ப கோபம் வந்துடுச்சு. `நானே அதுங்க பூ பூக்கலையேனு வருத்தத்துல இருக்கேன். நீ என்னடான்னா, மரங்களையும் வாட வெச்சு எனக்கும் சூடு வெக்கிறே. நீ கொஞ்ச நேரம் சும்மா இரு'ன்னு சூரியனைப் பார்த்து திட்டிடுச்சு. நடந்ததையெல்லாம் பார்த்துக்கிட்டிருந்த நட்சத்திரங்கள், என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு சொல்லட்டுமா'ன்னு கேட்டுச்சுங்க. சொல்லு அப்படிங்கிற மாதிரி பார்த்துச்சு பூமி. `நீங்க நேரா மரம், செடி, கொடிகிட்டே போய் `நீங்கள்லாம் ஏன் பூக்க மாட்டேங்கிறீங்க'ன்னு கேட்டுப் பாருங்களேன்'னு சொல்லுச்சுங்க நட்சத்திரங்கள். பூமிகிட்ட திட்டு வாங்கி சோர்ந்து போயிருந்த சூரியன் `அட, இது நல்ல ஐடியாவா இருக்கே'ன்னு சொல்லுச்சு. பூமிக்கும் அப்படித்தான் தோணுச்சு.

உடனே தன்கிட்ட இருக்கிற மரம், செடி, கொடிங்களைக் கூப்பிட்டு `நீங்க எல்லாம் ஏன் பூக்க மாட்டேங்கிறீங்க'ன்னு கேட்டுச்சு பூமி. `பூக்கணும்னு எங்களுக்குத் தோணலையே'ன்னு பதில் சொல்லுச்சுங்க அதுங்க. `உங்களுக்கு பூக்கணும்னு தோணனும்னா நான் என்ன பண்ணணும்'னு கேட்டுச்சு பூமி. `நாங்க சந்தோஷமா இருந்தா பூக்க ஆரம்பிச்சிடுவோம். ஆனா, எப்படி சந்தோஷமாகுறதுன்னுதான் தெரியலை'ன்னு சொல்லுச்சுங்க மரங்கள். மறுபடியும் பூமி வானத்துக்குப் போய் நடந்ததெல்லாம் சொல்லுச்சு. எல்லாத்தையும் கேட்டுட்டிருந்த நிலா, `இங்க வானத்துல நாட்டி பாய் ஒருத்தன் இருக்கான். அவன் எங்களுக்கு எவ்வளவு கஷ்டம் கொடுத்தாலும், அவனைப் பார்க்கும்போதே நாங்க எல்லாரும் சந்தோஷமாயிடுவோம். அவனை வேணும்னா பூமிக்குக் கூட்டிட்டுப் போறீங்களா'ன்னு கேட்டுச்சு. சூரியனும் நட்சத்திரங்களும் `வாவ் சூப்பர் ஐடியா'ன்னு ஒரே குரல்ல சொல்லுச்சுங்க.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay

அந்த நாட்டி பாயைக் கூட்டிக்கிட்டு மரம், செடி, கொடிகள்கிட்ட வந்துச்சு பூமி. நாட்டி பாய் மரத்து மேல ஏறி சறுக்கு மரம் விளையாடி, செடிகளை வளைச்சு, கொடிகளை இழுத்துன்னு வழக்கம்போல தன்னோட சேட்டைகளைச் செய்ய ஆரம்பிச்சான். அவ்வளவுதான் எல்லா மரம், செடி, கொடிகளும் சிரிக்க ஆரம்பிச்சிடுச்சுங்க. அப்புறம் மொட்டு விட்டு பூக்க ஆரம்பிச்சிதுங்க. இதைப்பார்த்த பூச்சிகள் மண்ணுக்கு அடியில இருந்து மேல வந்துதுங்க. பறவைகளும் வானவில் மேல இருந்து பூமிக்கு பறந்து வர ஆரம்பிச்சிதுங்க. அன்னியில இருந்து பூமியில நிறைய நாட்டி பாய்ஸ், நாட்டி கேர்ள்ஸ் எல்லாம் உருவாக ஆரம்பிச்சாங்க. அவங்களோட சேட்டைகளை ரசிக்கிறதுக்காகத்தான் எல்லா மரம், செடி, கொடிகளும் பூக்குதுங்க.

- நாளை சந்திக்கலாம்.

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.