Election bannerElection banner
Published:Updated:

மயில் தத்தெடுத்த புறா குஞ்சுகளும் ஆபத்தும்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்?! #BedTimeStories - 7

BedTimeStories
BedTimeStories ( Photo: Pixabay )

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினந்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.

ஓர் அழகான கிராமம். அதோட நாலா பக்கமும் பச்சைப்பசேல்னு வயல்வெளிகள், வயல்வெளிகளுக்கு நடுவே நிறைய மயில்கள்னு பார்க்கிறதுக்கு அவ்ளோ ரம்மியமா இருந்துச்சு அந்த கிராமம். அங்க நீளமான அழகான தோகையோட ஆண் மயிலொண்ணு வாழ்ந்துட்டு வந்துச்சு. அது எல்லா ஜீவராசிகள் மேலேயும் ரொம்ப ரொம்ப அன்பா இருக்கும்.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay

ஒரு நாள் வயல்வெளிகளுக்கு நடுவுல தன்னோட உணவைத் தேடிக்கிட்டிருந்த அந்த ஆண் மயிலோட கண்ணுல ரெண்டு முட்டைகள் பட்டுச்சு. ஆதரவில்லாம கிடந்த அந்த முட்டைகளை யாராவது சொந்தம் கொண்டாடிட்டு வருவாங்கன்னு வெயிட் பண்ணுச்சு அந்த மயில். ஆனா, சூரியன் மறைஞ்சு நிலா வர்ற வரைக்கும் அந்த முட்டைகளைத் தேடி யாருமே வரலையாம். முட்டையை அப்படியே விட்டுட்டுப் போனா, யாராவது தெரியாம அந்த முட்டைகளைச் சேதப்படுத்திடுவாங்களோன்னு மயிலுக்கு பயம். அதனால அந்த முட்டைகளை தான் வசிச்சுட்டு இருந்த மரக்கிளைக்குக் கொண்டு போய் பத்திரமா வெச்சுக்குச்சு.

ஒருநாள் ஆச்சு. ரெண்டு நாள் ஆச்சு. அப்படியே பல நாள் ஆயிடுச்சு. அந்த முட்டைகளைத் தேடி எந்தப் பறவைகளும் வரல. வேற வழியில்லாம அந்த முட்டைகளை அந்த மயிலே வெச்சுக்கிட்டு இருந்துச்சு. ஒரு நாள் அந்த முட்டைகள்ல இருந்து, அழகான ரெண்டு புறாக்குஞ்சுகள் வந்துச்சு. அந்தக் குஞ்சுகளை தன்னோட குழந்தைகளாவே நினைச்சு பாசமா வளர்க்க ஆரம்பிச்சது அந்த ஆண் மயில்.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay

புறாக்குஞ்சுகள் வளர வளர அதுங்ககிட்ட நீ பெஸ்ட்டா, நான் பெஸ்ட்டாங்கிற போட்டி மனப்பான்மையும் வளர்ந்துச்சு. அதனால, அதுங்க ரெண்டும் எப்போ பார்த்தாலும் சண்டை போட்டுக்கிட்டே இருக்கும். அதுங்களை சமாதானப்படுத்தி, இப்படியெல்லாம் சண்டை போடக்கூடாதுன்னு அப்பா மயில் அட்வைஸ் பண்ணிட்டே இருக்கும். ஆனா, அந்தப் புறாக்குஞ்சுங்க அப்பா மயிலோட பேச்சைக் கேட்கவே கேட்கலை.

ஒரு நாள் மயில் தன்னோட புறாக்குஞ்சுகளுக்காக இரைதேடி வயல்வெளிகளுக்கு நடுவுல நடந்துக்கிட்டு இருந்துச்சு. இந்த கேப்ல ரெண்டு புறாக்குஞ்சுகளும் வழக்கம்போல சண்டை போட ஆரம்பிச்சிடுச்சு. சண்டை சுவாரஸ்யத்துல ரெண்டும் மரத்துல இருந்து கீழே விழுந்திடுச்சு. அந்த நேரம் அந்தப் பக்கமா வந்த பாம்பு ஒண்ணு புறாக்குஞ்சுகளைப் பிடிக்க வேகமா ஊர்ந்து வர ஆரம்பிச்சது. பாம்பு வர்ற சர சர சத்தத்தைக் கேட்ட புறாக்குஞ்சுங்க ரெண்டும் அப்பா அப்பான்னு கத்த ஆரம்பிக்க, சத்தம் கேட்டு ஓடி வந்துச்சு மயில்.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay

என்னவோ ஏதோன்னு ஓடி வந்த மயில் கண்ணுல பாம்பு பட்டுச்சு. உடனே பாம்பு தலையில ஒரே கொத்து. பாம்பு தலையும் காணோம் வாலும் காணோம்னு ஓடியே போயிடுச்சு. புறாக்குஞ்சு ரெண்டும் ஓடி வந்து அப்பா மயிலோட தோகைக்குள்ள ஒளிஞ்சுக்கிச்சுங்களாம். தங்களோட சண்டையால பாம்புகிட்ட மாட்ட இருந்தோம்கிற உண்மை புரிஞ்சுட்டதாலே அந்த புறாக்குஞ்சுகள் அதுக்கப்புறம் ரொம்ப ஒற்றுமையா இருந்துச்சுங்க. பிள்ளைகளோட மாற்றத்தைப் பார்த்து அப்பா மயில் ரொம்ப ரொம்ப ஹேப்பியாயிடுச்சு.

- நாளை சந்திக்கலாம்!

காட்டு நரியும் கிராமத்து கழுதையும் - ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்?! #BedTimeStories - 5
தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினந்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு