Published:Updated:

ரெஸ்டாரன்ட் நடத்திய இறால், தொல்லை கொடுத்த சுறா! - ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories - 20

BedTimeStories ( Photo: Pixabay )

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.

ரெஸ்டாரன்ட் நடத்திய இறால், தொல்லை கொடுத்த சுறா! - ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories - 20

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.

Published:Updated:
BedTimeStories ( Photo: Pixabay )
இந்தக் கதையை குழந்தைக்கு ஆடியோ வடிவிலும் சொல்ல நினைக்கிறீங்களா? அதற்கான Podcast லிங்க் இதோ...

ஒரு நாட்டுல ஒரு பெரிய்ய்ய்ய... கடல் இருந்துச்சாம். அந்தக் கடல்ல குட்டி மீன்கள், பெரிய மீன்கள், இறால், சுறா, நண்டு, திமிங்கலம்னு பல வகையான மீன்கள் சந்தோஷமா வாழ்ந்துட்டு வந்துச்சாம். அதுல ஒரு இறால் மீனுக்கு கடலுக்கடியில ரெஸ்டாரன்ட் ஆரம்பிக்கணும்னு ரொம்ப நாள் ஆசை. அதோட அம்மா, அப்பாகிட்ட தன்னோட ஆசையைச் சொல்லுச்சாம் இறால். அவங்களும் அதுக்கு ஓகே சொல்லிட்டாங்க. உடனே இறால், ரெஸ்டாரன்ட் ஆரம்பிக்கிறதுக்கான வேலைகளை ஆரம்பிச்சது. முதல்ல ஒரு பெரிய பவளப்பாறைகிட்ட போய், `நீங்க வயசுல ரொம்ப மூத்தவரு. இந்தக் கடலுக்குள்ள எத்தனையோ வருஷங்களா வாழ்ந்துட்டு இருக்கீங்க. கோடிக்கணக்கான உயிர்களை நீங்க பார்த்திருப்பீங்க. உங்களால எனக்கு ஓர் உதவி செய்ய முடியுமான்னு பவ்யமா கேட்டுச்சு இறால். அதுக்கு பவளப்பாறை `சொல்லு குழந்தை' அப்படின்னு அன்பா கேட்டுச்சு.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay

எனக்கு ஒரு ரெஸ்டாரன்ட் ஆரம்பிக்கணும்னு ரொம்ப நாளா ஆசை. என் அம்மா அப்பாவும் அதுக்கு ஓகே சொல்லிட்டாங்க. ஆனா, என்னோட ஆசை நீங்க மனசு வெச்சா மட்டும்தான் நடக்கும்னு சொல்லுச்சு இறால். சரி, அதுக்கு நான் என்ன பண்ணணும். அதைச் சொல்லு' அப்படின்னு கேட்டுச்சு பவளப்பாறை. அதுக்கு இறால், `நீங்க ரொம்ப பெரிய பவளப்பாறை. உங்களைக் குடைஞ்சு நான் என்னோட ரெஸ்ட்டாரன்ட்டை கட்டிக்கிட்டுமா'ன்னு கொஞ்சம் பயம், நிறைய ஆசையோட கேட்டுச்சு. இதைக் கேட்டவுடனே பாறை ஹா ஹா ஹான்னு சிரிக்க ஆரம்பிச்சது. பிறகு, `சின்ன பிள்ளைங்களோட நியாயமான ஆசைகளை நிறைவேத்துறது பெரியவங்களோட கடமை. உன்னோடது நியாயமான ஆசை. அதனால, தாராளமா நீ என்னைக் குடைஞ்சு உன்னோட ரெஸ்ட்டாரன்ட்டைக் கட்டிக்கலாம்'னு பர்மிஷன் கொடுத்துச்சு.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மறுநாளே தன்னோட நண்டு நண்பர்களைக் கூட்டிட்டு வந்து, அதுங்களோட கால்களால பாறையைச் செதுக்கி செதுக்கி தன்னோட கனவு ரெஸ்ட்டாரன்ட்டை கட்ட ஆரம்பிச்சது இறால். சில நாள்கள்ல ரெட் அண்ட் வொயிட் கலர்ல ஓர் அழகான ரெஸ்டாரன்ட் கடலுக்கடியில உருவாச்சு. அடுத்து ரெஸ்டாரன்ட் வெளிச்சமா இருக்கணும் இல்லையா? அதுக்காக மினுக் மினுக்னு ஒளி வீசுற ஜெல்லி ஃபிஷ்கள்ல கிட்டபோய், `நீங்க தினமும் என்னோட ரெஸ்டாரன்ட்டுக்கு வந்து வெளிச்சம் தர முடியுமா'ன்னு ஹெல்ப் கேட்டுச்சு இறால். ஜெல்லி ஃபிஷ்களும் `உனக்கில்லாத உதவியா நண்பா. நாங்க எல்லாம் கட்டாயம் வர்றோம்' அப்படின்னு பிராமிஸ் பண்ணுச்சுங்க.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay

மறுநாள் ரெஸ்டாரன்ட் ஓப்பனிங். கடலுக்கடியில வாழுற எல்லா வகை மீன்களுக்கும் இன்விடேஷன் கொடுத்து திறப்பு விழாவுக்கு வெல்கம் பண்ணுச்சு இறால். சுறா, திமிங்கலம் மாதிரி பெரிய மீன்களைக்கூட இன்வைட் பண்ணுச்சுன்னா பார்த்துக்கோங்க. ஆனா, ஈல் ஃபிஷ்ஷை மட்டும் இறால் இன்வைட் பண்ணலை. ஏன்னா, அது மேல இருந்து வர்ற கரன்ட்டைப் பார்த்து மத்த மீன்கள் பயப்படுமேன்னு இறாலுக்குத் தயக்கம். அதனாலதான், ஈல் ஃபிஷ்ஷை மட்டும் கூப்பிடலை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரெஸ்டாரன்ட்டை வயதான ஆமையை வெச்சு திறக்க வெச்சது இறால். எல்லா மீன்களும் உள்ள நுழைஞ்சு அதுங்களுக்குப் பிடிச்ச உணவை பஃபே ஸ்டைல்ல எடுத்து சாப்பிட ஆரம்பிச்சதுங்க. திடீர்னு ரெஸ்டாரன்ட்டை யாரோ வேகமா இடிக்கிற மாதிரி இருந்துச்சு. எல்லா மீன்களும் ஓடிப்போய் வெளியே பார்த்தா, சுறா ஒண்ணு ரெஸ்டாரன்ட்டை தன் மூக்கால இடிச்சிக்கிட்டு இருந்துச்சு. இறால் பயந்துபோய், `சுறா நண்பா ஏன் என் ரெஸ்டாரன்ட்டை இப்படி இடிக்கிறே'ன்னு கேட்டுச்சு. அதுக்கு சுறா, `நீ என்னைத்தானே ரெஸ்டாரன்ட்டுக்குள்ள முதல்ல அனுமதிச்சிருக்கணும். என்னைவிட சின்ன மீன்களை எப்படி முதல்ல உள்ளே அனுப்புவே'ன்னு சண்டை போட ஆரம்பிச்சது. இறால் ஸாரி கேட்டும் சுறா மனசு இரங்கவே இல்ல. அந்த நேரம் திடீர்னு சுறா ஓன்னு கத்துச்சு. இறால் கண்ணைத் துடைச்சிட்டு என்ன நடக்குதுன்னு பார்த்துச்சு. அங்க ஈல் ஃபிஷ் தன்னோட வாலால சுறாவை தொட்டுக்கிட்டு இருந்துச்சு. அதனாலதான் சுறா அப்படி கத்துச்சு.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay

`ஏய் சுறா, நம்ப நண்பன் இறால் கடலுக்கடியில ஒரு ரெஸ்டாரன்ட் ஆரம்பிச்சிருக்கான்னா நாம அத்தனை பேரும் அவனுக்கு சப்போர்ட்தான் செய்யணும். உன்ன மாதிரி இப்படி தொந்தரவு செய்யக் கூடாது. புரிஞ்சுதா' அப்படின்னு சத்தமா அதட்டுச்சு. சுறாவும் தன்னோட தப்பைப் புரிஞ்சுகிட்டு இறால்கிட்ட ஸாரி கேட்டுச்சு. இறால் ஈல் ஃபிஷ்கிட்ட ஸாரி கேட்டதோட, தன்னோட ரெஸ்டாரன்ட்க்குள்ளேயும் அழைச்சிட்டுப் போச்சு.

- நாளை சந்திப்போம்

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism