Published:Updated:

குட்மார்னிங் கேட்ட அப்பாவி சிங்கம்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்?! #BedTimeStories - 23

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.

இந்தக் கதையை குழந்தைக்கு ஆடியோ வடிவிலும் சொல்ல நினைக்கிறீங்களா? அதற்கான Podcast லிங்க் இதோ...

ஒரு காட்ல சிங்கம், புலி, கரடி, மான், மயில், காண்டாமிருகம், நரி, பாம்புன்னு அத்தனையும் ஒண்ணோட ஒண்ணு சண்டை போட்டுக்காம அமைதியா வாழ்ந்துட்டு வந்துச்சுங்களாம். இந்தக் காட்டோட சிங்கம் லைட்டா அப்பாவி. யார் என்ன சொன்னாலும் அதை டொய் டொய்னு தலையாட்டிட்டுக் கேட்டுக்கும். ஒருநாள் அந்தக் காட்டுக்கு பக்கத்து காட்ல இருந்து சிங்கமொண்ணு வந்துச்சு. அது இந்தக் காட்ல இருக்கிற சிங்க ராஜாகிட்ட, `என்ன உன் காட்ல இன்ட்ரஸ்ட்டிங்கா எதுவுமே நடக்கல. எனக்கு ரொம்ப போரடிக்கிது'ன்னு குறைபட்டுக்கிச்சு. அதுக்கு இந்தக் காட்ல இருக்கிற சிங்கம் `நாங்கல்லாம் சந்தோஷமாதானே இருக்கோம். அது போதாதா'ன்னு கேட்டுச்சு. உடனே பக்கத்து காட்டு சிங்கம் `கொஞ்சம் கலகலப்பு இருந்தா இன்னும் சந்தோஷமா இருப்பீங்க'ன்னு சொல்லுச்சு.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay

`சரி கலகலப்பா இருக்கிறதுக்கு நாங்க என்ன பண்ணணும்னு நீயே சொல்லேன்'னு கேட்டுச்சு அப்பாவி சிங்கம். அதுக்கு பக்கத்து காட்டு சிங்கம் `உனக்குதான் ரொம்ப நாளா அமைச்சரே இல்லன்னு வருத்தப்பட்டியே. காட்டு மிருகங்கள்ல இருந்து எனக்கான ஓர் அமைச்சரைத் தேர்ந்தெடுக்கப் போறேன்னு அறிவிச்சுப் பாரு. காடே ச்சும்மா கலகலப்பா ஆயிடும்னு சொல்லுச்சு. எனக்கான அமைச்சரை எப்படித் தேர்ந்தெடுக் கிறதுன்னு தெரியலையேன்னு கேட்டுச்சு அப்பாவி சிங்கம். அதுக்கு பக்கத்து காட்டு சிங்கம், `உன்னை இந்தக் காட்ல இருக்கிற அத்தனை விலங்குகளும் பறவைகளும் வணங்குற மாதிரி யார் ஐடியா கொடுக்கிறாங்களோ அவங்களை உன்னோட அமைச்சரா தேர்ந்தெடுத்துடு'ன்னு சொல்லிச்சு. இதுக்கு அந்த அப்பாவி சிங்கமும் சரி சரின்னு ஒத்துக்கிச்சு.

மறுநாள் பொழுது விடிஞ்சதும் அப்பாவி சிங்கம், காட்ல இருக்கிற அத்தனை ஜீவராசிகளையும் கூப்பிட்டு `உங்கள்ல ஒருத்தரை இந்தக் காட்டுக்கு அமைச்சராக்கப் போறேன். அதுக்கு நீங்க செய்ய வேண்டியதெல்லாம் என்னை எல்லாரும் வணங்குற மாதிரி ஓர் ஐடியா கொடுக்கணும்' அப்படின்னு சொல்லுச்சு. இதைக் கேட்டவுடனே கூட்டத்துல இருந்த கழுதைப்புலி ஒண்ணு `என்கிட்ட ஓர் ஐடியா இருக்கு மன்னா'ன்னு கை உயர்த்திட்டே எழுந்து நின்னுச்சு. சிங்கம் உடனே `சொல்லு என் உடன்பிறப்பே'ன்னு உற்சாகமா கேட்டுச்சு.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay
பாட்டி வீட்டுக்குப் போன அணில் பிள்ளை... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்?! #BedTimeStories - 21

`உங்களை தினமும் ஓர் இடத்துல நிக்க வெச்சு இந்தக் காட்ல இருக்கிற எல்லாரையும் குட்மார்னிங் சொல்ல வைக்கலாம் மன்னா'ன்னு தன்னோட ஐடியாவை சொல்லுச்சு கழுதைப்புலி. `ஆஹா, முதல் ஐடியாவே சூப்பரா இருக்கு. ஓகே, நான் நாளைக்கு காலையில இருந்து தினமும் வெட்ட வெளியில நிக்கிறேன். அப்போதான் நீங்க எல்லாரும் எனக்கு குட்மார்னிங் சொல்றதுக்கு வசதியா இருக்கும்'னு சொல்லிட்டு அப்பாவி சிங்கம் அதோட குகைக்குப் போயிடுச்சு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மறுநாள் காலையில தான் சொன்னபடி வெட்ட வெளியில வந்து நின்னுச்சு அப்பாவி சிங்கம். அது நினைச்ச மாதிரி எல்லா விலங்குகளும் ஒரே நேரத்துல வந்து சிங்கத்துக்கு குட்மார்னிங் சொல்லலை. அதுங்களுக்கு எப்போ தோணுச்சோ அப்ப வந்து ஒவ்வொண்ணா குட்மார்னிங் சொல்லிட்டுப் போச்சுங்க. காட்ல இருக்கிற அத்தனை விலங்குகள் வர்ற வரைக்கும் சிங்கம் ஒரே இடத்துல நிக்கணுமில்லையா? பாவம் அதுக்கு கால் வலிக்க ஆரம்பிச்சிடுச்சு. வெட்டவெளியில நின்னுக்கிட்டிருக்கிறதால தலைக்கு மேல வெயில் வேற கொளுத்த ஆரம்பிச்சிடுச்சு. கீழே தரையும் சுட ஆரம்பிச்சதால ரெண்டு காலையும் தரையில வைக்க முடியாம `தா தை தக்க தை'ன்னு டான்ஸ் ஆடுற நிலைமையில நின்னுக்கிட்டிருந்துச்சு சிங்கம். கூடவே பசி வேற அதோட வயித்தை `நறுக் நறுக்'குன்னு கிள்ள ஆரம்பிச்சிடுச்சு. அப்பாவி சிங்கம் மெல்ல மெல்ல ஆங்ரி சிங்கமா மாற ஆரம்பிச்சது.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay
நிலாவுல வடை சுடுற பாட்டியும் குரங்குக் குட்டிகளும்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories

இதுக்கெல்லாம் காரணமான பக்கத்து காட்டு சிங்கமும் கழுதைப்புலியும் வயிறு முட்ட சாப்பிட்டுட்டு ஒரு மரத்தடியில கொர் கொர்னு குறட்டைவிட்டு நிம்மதியா தூங்கிட்டு இருந்துச்சுங்க. சிங்கத்துக்கு கோவம்னா அப்படியொரு கோவம். எதையும் வெளிக்காட்டிக்க முடியாம கண்ணுல தண்ணி வெச்சுட்டு நின்னுக்கிட்டே இருந்துச்சு. அந்த நேரம் பார்த்து சிங்க ராஜாவுக்கு குட்மார்னிங் சொல்ல வந்த காக்கா ஒண்ணு சிங்க ராஜா தலை மேல ஆய் போயிடுச்சு. நொந்துபோன சிங்க ராஜா `உங்க குட்மார்னிங்கும் வேணாம், ஒண்ணும் வேணாம். ஆளை விடுங்கடா சாமி'ன்னு சொல்லிட்டு அதோட குகைக்கு ஓடியே போயிடுச்சு. அன்னியில இருந்து சிங்க ராஜா மத்தவங்க சொல் பேச்சைக் கேட்காம தானே யோசிச்சு நல்ல சிங்க ராஜான்னு மத்த விலங்குகள்கிட்ட பேர் வாங்குச்சாம்.

- நாளை சந்திக்கலாம்.

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு