Published:Updated:

ஒரு குளத்துல ரெண்டு மீன்; ரெண்டு குணம்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்?! #BedTimeStories - 25

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்தக் கதையை குழந்தைக்கு ஆடியோ வடிவிலும் சொல்ல நினைக்கிறீங்களா? அதற்கான Podcast லிங்க் இதோ...

ஒரு குளத்துல ரெண்டு மீன்கள் வாழ்ந்துட்டு வந்துச்சுங்க. ஒரு மீனோட பேரு பாசிட்டிவ். இன்னொரு மீனோட பேரு நெகட்டிவ். பாசிட்டிவ் மீன் எந்த விஷயமா இருந்தாலும் அதோட நல்ல பக்கத்தை மட்டுமே பார்க்கும். நெகட்டிவ் மீனோ நல்லவங்ககிட்ட கூட ஏதாவது கெட்ட விஷயம் இருக்குதான்னு தேடும். தவிர, பாசிட்டிவ் மீனையும் `நீ எல்லாரையும் நம்பிட்டே இரு. ஒருநாள் உன்னை யாராவது தூக்கிட்டுப் போயிடப் போறாங்க பாரு’ன்னு அடிக்கடி திட்டவேற செய்யும். பாசிட்டிவ் மீனோ `எல்லார்கிட்டேயும் ஏதாவது நல்ல குணம் இருக்கும். அது என்னைக் காப்பாத்தும்’னு சிரிச்சுக்கிட்டே சொல்லும்.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay

நாள்கள் நகர ஆரம்பிச்சது. மழைக்காலமும் வந்துச்சு. சோன்னு மழை பெய்ஞ்சதால குளத்துல தண்ணி நிறைஞ்சு ஓடுச்சு. பாசிட்டிவ் மீனும் நெகட்டிவ் மீனும் தண்ணிக்கு மேல துள்ளிக் குதிச்சு விளையாடிட்டு இருந்துச்சுங்க. ரொம்ப நேரம் விளையாடினதால ரெண்டு மீனும் சோர்ந்து போய் ஒரு தாமரைப்பூவுக்குள்ள படுத்து ரெஸ்ட் எடுத்துட்டு இருந்துச்சுங்க. அப்போ எங்கியோ இருந்து மெல்லிசா ஓர் அழுகை சத்தம் கேட்டுச்சு. உடனே ரெண்டு மீனும் யார் அழறதுன்னு தேட ஆரம்பிச்சிதுங்க. அப்போ, குளக்கரைக்கு பக்கத்துல தேள் நின்னுக்கிட்டு அழறதைப் பார்த்துச்சுங்க ரெண்டு மீன்களும். உடனே பாசிட்டிவ் மீன் `பாவம் அந்தத் தேளுக்கு என்ன பிரச்னையோ... வா பக்கத்துல போய் விசாரிப்போம்’னு சொல்லுச்சு. அதுக்கு நெகட்டிவ் மீன், `அய்யோ நான் மாட்டேன்பா. அந்தத் தேளோட வாலைப் பாரு. எவ்ளோ பெரிய கொடுக்கு. அது நிறைய விஷம் இருக்கும். நாம கிட்ட போனா அதால ஒரு போடு போட்டுச்சுன்னா செத்தே போயிடுவோம். நான் வர மாட்டேன்பா. நீ வேணும்னா போயிக்கோ’ன்னு சொல்லிட்டு, தண்ணிக்குள்ள ஓடிப்போய் ஒளிஞ்சுக்கிச்சு.

பாசிட்டிவ் மீன் அழுதுகிட்டிருந்த தேள்கிட்ட போச்சு. `நண்பா, ஏன் அழுதுகிட்டிருக்க. நான் ஏதாவது உதவி செய்யணுமா’ அப்படின்னு கேட்டுச்சு. அதுக்கு தேள், `மீன் தோழியே, என்னோட குடும்பத்தினர் எல்லாம் குளத்துக்கு அக்கரையில் இருக்காங்க. மழை பேஞ்சு வெள்ளம் வந்ததுல நான் மட்டும் தண்ணியில அடிச்சிட்டு வந்து இக்கரைக்கு வந்துட்டேன். என்னை யாராவது அக்கரைக்குக் கொண்டு போய்விட்டா பெரிய உதவியா இருக்கும். உன்னால எனக்கு உதவி செய்ய முடியுமா’ன்னு கேட்டுச்சு. பாசிட்டிவ் மீன் உடனே, `தாராளமா செய்யுறேன் நண்பா. நீ வந்து என் முதுகு மேல ஏறிக்கோ’ன்னு சொல்லுச்சு. பாசிட்டிவ் மீனும் தேளும் பேசிக்கிட்டிருந்ததைத் தண்ணிக்குள்ள மறைஞ்சி கேட்டுக்கிட்டிருந்த நெகட்டிவ் மீன், `பாசிட்டிவ், வேணாம். அவன் உன் முதுகுல தன் கொடுக்கால கொட்டிடுவான்’னு கத்துச்சு.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay
குட்மார்னிங் கேட்ட அப்பாவி சிங்கம்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்?! #BedTimeStories - 23

இதைக் கேட்ட தேள் பதறிப்போய் `மை டியர் ஃபிரெண்ட், எனக்கு ஆபத்து ஏற்படுத்துவறங்ககிட்ட இருந்து என்னைக் காப்பாத்திக்கத்தான் கொடுக்கை யூஸ் பண்ணுவேன். உதவி பண்றவங்களை நான் கொட்ட மாட்டேன்’னு பாவமா சொல்லுச்சு. நெகட்டிவ் மீன் `நீ என்ன சொன்னாலும் நான் உன்னை நம்ப மாட்டேன்’னு சொல்லிட்டு மறுபடியும் தண்ணிக்குள்ள போயிடுச்சு. பாசிட்டிவ் மீன் மட்டும், `என் முதுகு மேல ஏறிக்கோ நண்பா’ன்னு மறுபடியும் தேளைக் கூப்பிட்டுச்சு. தேள் உடனே பாசிட்டிவோட முதுல ஏறிக்கிச்சு. தேள் தண்ணியில மூழ்கிடாம பத்திரமா அக்கரையில கொண்டு போய் சேர்த்துச்சு பாசிட்டிவ் மீன். தொலைஞ்சு போன தேளை மறுபடியும் பார்த்த தேள் குடும்பம், அதுக்குக் காரணமான பாசிட்டிவ் மீனை கையெடுத்துக் கும்பிட்டுச்சுங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சில நாள்கள் போச்சு. குளக்கரைக்கு மேல பறந்துட்டு இருந்த பருந்தோட கண்ணுல தாமரைப்பூவுல படுத்துக்கிட்டிருந்த நெகட்டிவ் மீன் பட்டுடுச்சு. உடனே ஜிவ்வுன்னு கீழ வந்து, நெகட்டிவைத் தூக்கிட்டுப் பறந்துடுச்சு. நெகட்டிவ் மீன் கண்ணீர் விட்டுக் கதறுச்சு. அதையெல்லாம் அந்தப் பருந்து கண்டுக்கவே இல்ல. ஒரு தென்னமரத்துல உட்கார்ந்துக்கிட்டு நெகட்டிவ் மீனை சாப்பிடறதுக்காகத் தென்ன ஓலை மேல வெச்சுது. அந்த நேரம் அந்தத் தென்னை மரத்துல பாசிட்டிவ் மீனால காப்பாத்தப்பட்ட தேளும் இருந்துச்சு.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay
நிலாவுல வடை சுடுற பாட்டியும் குரங்குக் குட்டிகளும்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories

ஆபத்தை நொடியில புரிஞ்சுகிட்ட தேள், பருந்துக்கு எதிர போய் நின்னு, `என் தோழியோட ஃபிரெண்ட் இந்த மீன். இதை நீ சாப்பிடணும்னு நினைச்சா நான் உன்னை என் கொடுக்கால கொட்டிடுவேன்’னு மிரட்டுச்சு. பருந்து பயந்து போச்சு. `சரி சரி இந்த மீனை நான் ஒண்ணும் செய்யலை. என்னை எதுவும் செஞ்சுடாதே’ன்னு சொல்லிட்டு பறந்துபோயிடுச்சு. உடனே தேள், நெகட்டிவ் மீனை மரத்துல இருந்து விடுவிடுன்னு கீழே கொண்டு வந்து, குளத்துக்குள்ள விட்டுடுச்சு. நெகட்டிவ் மீன் தேளுக்கு நன்றி சொல்லுச்சு. அன்னியில இருந்து நெகட்டிவ் மீனும் பாசிட்டிவ் மீன் போலவே எல்லாரையும் நல்லவங்களா நினைக்க ஆரம்பிச்சது.

- நாளை சந்திக்கலாம்.

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு