Published:Updated:

`க்யூட்'டான பன்றிக்குட்டிகளும் அழிந்த கர்வமும்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்?! #BedTimeStories

BedTimeStories
BedTimeStories ( Photo: Pixabay )

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினந்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.

ஒரு ஊர்ல விவசாயி ஒருத்தர் வாழ்ந்துட்டு வந்தார். அவர் மூணு பன்றிக் குட்டிகளை ரொம்ப பாசமா வளர்த்திட்டு வந்தார். ஒரு பன்றிக்குட்டி கறுப்பு நிறத்துல ரொம்ப அழகா இருக்கும். இன்னொண்ணு சிவந்த நிறத்துல பளிச்சுன்னு இருக்கும். மூணாவது பன்றிக்குட்டி சிவந்த நிறத்துல ஆங்கங்கே கறுப்புப்புள்ளி வெச்சு செம க்யூட்டா இருக்கும். மூணும் ரொம்ப ஃபிரெண்ட்லியா சந்தோஷமா இருந்துச்சுங்க. பன்றிக்குட்டிகளை வளர்த்த விவசாயி சின்னதா பூந்தோட்டம் வெச்சிருந்தார். அந்தப் பூந்தோட்டத்துக்கு தினமும் தண்ணி ஊத்தறது, தேவையில்லாத களைகளைப் பிடுங்கிறதெல்லாம் பன்றிக்குட்டிகளோட வேலை. மூணு பன்றிக்குட்டிகளோட உழைப்பையும் ஒற்றுமையையும் பார்த்து விவசாயிக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம்.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay

ஒருநாள் அந்த விவசாயி சந்தைக்கு மாடு வாங்கப் புறப்பட்டாரு. மூணு பன்றிக்குட்டிகளும் நாங்களும் உங்ககூட சந்தைக்கு வந்தே ஆவோம்னு அடம்பிடிச்சுதுங்க. வேற வழியில்லாம விவசாயியும் பன்றிக்குட்டிங்களையும் சந்தைக்குக் கூட்டிட்டுப் போனாரு. அங்கதான் ஆரம்பிச்சது அந்தப் பிரச்னை.

சந்தையில இருந்தவங்கள்ல நிறைய பேர் சிவந்த நிறத்து பன்றிக்குட்டியை ரொம்ப அழகா இருக்குன்னு பாராட்ட, அதுக்கு பெருமையில தலை, கால் புரியல. அன்னியில இருந்து மத்த ரெண்டு பன்றிக்குட்டியைகளையும் கேலி, கிண்டல்னு செய்ய ஆரம்பிச்சது. கறுப்பு நிற பன்றிக்குட்டி செம ஸ்மார்ட். சிவந்த நிற பன்றிக்குட்டி முட்டாள்தனமா நடந்துக்கிட்டிருக்குன்னு புரிஞ்சுட்டு அது அமைதியா இருந்துச்சு. கூடவே தன்னோட இன்னொரு நண்பனான கறுப்புப்புள்ளி வெச்ச பன்றிக்குட்டியையும் `அவன் செய்யறதையெல்லாம் மனசுல வெச்சுக்காத'ன்னு சமாதானப்படுத்திட்டும் வந்துச்சு.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay
பயந்த மான் குட்டியும் `முஸ்தஃபா' நாய்க்குட்டியும்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories 8

சிவந்த நிற பன்றிக்குட்டி தன்னோட அழகுக்கு அழகு சேர்க்கணும்னு முடிவு பண்ணுச்சு. அதனால, தினமும் நாலஞ்சு தடவை குளிச்சு தண்ணியை வீணாக்கிறது, சூரிய ஒளி மேல படாம இருக்கிறது, அக்கம் பக்கம் வீடுகள்ல நுழைஞ்சு லிப்ஸ்டிக்கை திருடிக்கிட்டு வந்து உடம்புபூரா பூசிக்கிறதுன்னு தான் நினைச்சதையெல்லாம் செய்ய ஆரம்பிச்சது. தவிர, முன்ன மாதிரி மத்த ரெண்டு பன்றிக்குட்டிகளோட சேர்ந்து பூந்தோட்டத்தைப் பராமரிக்கிறதையும் விட்டுடுச்சு. இதையெல்லாம் பன்றிக்குட்டிகளை வளர்த்துட்டு வந்த விவசாயியும் கவனிச்சுட்டு வந்தார். ஆனா, ரொம்ப சின்ன பன்றிக்குட்டிதானே. மாறிடும்கிற நம்பிக்கையில அது செய்யுற தப்பையெல்லாம் கண்டும் காணாம இருந்தாரு விவசாயி.

ஒருநாள் சிவந்த நிற பன்றிக்குட்டிக்கு அதோட தோலுல அரிக்கிற மாதிரி ஒரு ஃபீலிங். லேசா சொரிய ஆரம்பிச்சது. கொஞ்ச நேரத்துல சொரிஞ்ச இடங்கள்ல இருந்து ரத்தம் கசிய ஆரம்பிச்சது. ரத்தம் வந்த இடமெல்லாம் திகுதிகுன்னு எரிய ஆரம்பிச்சது. எரிச்சல் தாங்க முடியாத பன்றிக்குட்டி மண்ணுல விழுந்து புரள ஆரம்பிச்சது. இன்னும் எரிச்சல் அதிகமாக, ஓன்னு அழ ஆரம்பிச்சது சிவந்த நிற பன்றிக்குட்டி. அதோட அழுகை சத்தத்தைக் கேட்ட மத்த ரெண்டு பன்றிக்குட்டிகளும் தோட்டத்துக்குள்ள இருந்து ஓடி வந்ததுங்க. உடம்பெல்லாம் புண்ணா மண்ணுல விழுந்து கிடந்த தங்களோட ஃபிரெண்டை பார்த்த அதுங்களுக்கு கண்ணீர் வந்துடுச்சு. கறுப்புப்புள்ளி வெச்ச பன்றிக்குட்டி தன் நண்பனைத் தூக்கி தன் மடி மேல வெச்சுக்கிச்சு. கறுப்பு நிற பன்றிக்குட்டி ஓடிப் போய் பக்கெட் நிறைய தண்ணி கொண்டு வந்து தன் ஃபிரெண்ட் மேல ஊத்தி அது உடம்பு மேல இருந்த மண்ணையெல்லாம் சுத்தமா கழுவி விட்டுச்சு. அப்புறம் தோட்டத்துக்குள்ள போய் கை நிறைய ரோஜாப்பூக்களைப் பறிச்சுட்டு வந்து அதோட சாறை தன் நண்பனோட உடம்புபூரா தடவி விட்டுச்சு. சிவந்த நிற பன்றிக்குட்டியோட எரிச்சல் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சது.

BedTimeStories
BedTimeStories
Photo: Pixabay
முதலையின் அட்டகாசத்தை அடக்கிய முள்ளம்பன்றி... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories -10

எல்லாத்தையும் பார்த்துக்கிட்டிருந்த விவசாயி தன்னோட பன்றிக்குட்டிகள்கிட்ட வந்தார். செல்லங்களா, நம்ம தோட்டத்துல இருக்கிற பூக்களைப் பார்த்தீங்களா? ஒவ்வொண்ணும் ஒவ்வொரு நிறத்துல இருக்கு. ஆனா, எல்லாமே அழகா இருக்கு. ஒரு பூவைவிட இன்னொரு பூ அழகா இருக்குன்னோ அல்லது அழகா இல்லைன்னோ உங்களால சொல்ல முடியுமா? அந்தப் பூக்கள் மாதிரிதான் நீங்களும். மூணு பேரும் ஒவ்வொரு நிறம். ஆனா, மூணு பேருமே ரொம்ப அழகான குழந்தைங்கள்னு சொன்னதும் சிவந்த நிற பன்றிக்குட்டி தன் தப்பை உணர்ந்து தன் ஃபிரெண்ட்ஸ்கிட்ட மன்னிப்பு கேட்டுச்சாம். அதுக்கப்புறம் அந்த மூணு பன்றிக்குட்டிகளும் இணைபிரியாம ஒற்றுமையா இருந்துச்சாம்.

- நாளை சந்திக்கலாம் 

தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினந்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.
அடுத்த கட்டுரைக்கு