இந்தக் கதையை குழந்தைக்கு ஆடியோ வடிவிலும் சொல்ல நினைக்கிறீங்களா? அதற்கான Podcast லிங்க் இதோ...
ஒரு காட்ல மூணு மாடுகள் ரொம்ப நல்ல ஃபிரெண்ட்ஸா இருந்துச்சிங்களாம். மூணுமே ஜங்க் ஃபுட்டெல்லாம் சாப்பிடாம சத்தான உணவுகளா சாப்பிட்டு நல்லா ஸ்ட்ராங்கா இருந்துச்சுங்களாம். இந்த மாடுகளை எப்படியாவது சாப்பிடணும்னு புலி ஒண்ணு ரொம்ப நாளா முயற்சி செஞ்சுக்கிட்டு இருந்துச்சு. ஆனா, மூணு மாடுகளும் எப்பவும் ஒண்ணா இருக்கிறதாலேயும், மூணும் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கிறதாலேயும் அதுங்களை வேட்டையாடுறதுக்கு புலிக்கு பயமா இருந்துச்சு. இப்படியே கொஞ்ச நாள் போச்சு. மாடுகளை வேடிக்கை பார்க்கிறது, திரும்பிப் போறதுன்னு இருந்த புலி, மாடுகளை சாப்பிட வேற ஏதாவது பிளான் செய்யணும்னு யோசிச்சது.

ஒருநாள் மூணு மாடுகளும் புல்லு, இலை, தழைன்னு ருசி ருசியா மேய்ஞ்சுக்கிட்டு இருந்தப்போ, திடீர்னு சோ'ன்னு மழை பெய்ய ஆரம்பிச்சது. உடனே மூணு மாடுகளும் மழையில நனையாம இருக்க ஆளுக்கொரு மரத்தடிக்கு ஓடிப்போய் நின்னுக்கிச்சுங்களாம். மாடுகளை வழக்கம்போல நோட்டம் பார்த்துக்கிட்டிருந்த புலிக்கு `இதுதான்டா சரியான நேரம்'னு மனசுக்கு பட்டுச்சு. உடனே நைசா ஒரு மாட்டுக்கிட்ட பதுங்கிப் பதுங்கிப் போச்சு புலி. ஆனா, புலியோட வாசனையைக் கண்டுபிடிச்சிட்ட மாடு தலையை வேகமா ஆட்டிக்கிட்டு அதோட கொம்பால முட்ட வந்துச்சு. மாட்டோட ஷார்ப்பான கொம்பைப் பார்த்து பயந்துபோன புலி உடனே ஒரு தந்திரம் பண்ணுச்சு.
`உன்கிட்ட ரொம்ப நாளா ஒரு விஷயம் சொல்லணும்னு ஆசை. உன் ஃபிரெண்ட்ஸைவிட நீதான் ரொம்ப அழகா இருக்கிறே. இதை சொல்லி உன்னைப் பாராட்டுறதுக்குதான் வந்தேன். இது தெரியாம நீ என்னை முட்ட வர்றியே'ன்னு அப்பாவி மாதிரி பேசிச்சு புலி. இதைக் கேட்ட மாடு `ரொம்ப தேங்க்ஸ்' அப்படின்னு சொல்லுச்சு. உடனே புலி, `உன்னோட அழகுக்கு அழகு சேர்க்க நான் ஒரு க்ரீம் வெச்சிருக்கேன். அதை வாங்கிக்கிறியா'ன்னு கேட்டுச்சு. மாடும் சரி கொடுன்னு சொல்லுச்சு. அதுக்கு புலி, `அந்த க்ரீம் என் குகையில இருக்கு. நீ அங்க வந்தா தருவேன்'னு சொல்லுச்சு. மாடு அதுக்கு நாளைக்கு வரேன்னு சொல்லுச்சு.

உடனே புலி இரண்டாவது மாடுகிட்ட போச்சு. அந்த மாடும் முட்ட வர, `அய்யோ உன்னைப் பாராட்ட வந்திருக்கேன். நீ என்னடான்னா என்னை முட்ட வர்றியேன்னு சொல்லுச்சு புலி. கூடவே கண்ணீரே வராத கண்ணைத் துடைச்சிக்கிட்டு அழற மாதிரி அப்பாவி வேஷம் போட்டுச்சு. அதுக்கு மாடு, `சரி சரி என்ன பாராட்டணும்னு வந்தியோ அதைச் சொல்லிட்டு உடனே இடத்தைக் காலி பண்ணு. எனக்கு உன் மேல நம்பிக்கையில்ல'ன்னு சொல்லுச்சு. அதுக்கு புலி, `உன் நண்பர்களைவிட நீதான் ஸ்லிம்மா இருக்கே. நீ இன்னும் ஸ்லிம்மா அழகா இருக்க என்கிட்ட ஓர் ஐடியா இருக்கு. அதைச் சொல்லத்தான் வந்தே'ன்னு சொல்லுச்சு. மாடும், சரி சொல்லுன்னு சொல்லுச்சு. ஆனா, அந்த மோசமான புலி `நீ என் குகைக்கு ஒருநாள் கெஸ்ட்டா வந்தாதான் அந்த ஐடியாவை சொல்லுவேன்னு சொல்லுச்சு. மாடும் அதுக்கு சம்மதம் சொல்ல, நீ நாளை கழிச்சு மறுநாள் என் குகைக்கு வா'ன்னு சொல்லுச்சு புலி. மாடும் அதுக்கு சம்மதம் சொல்லுச்சு.
அடுத்து மூணாவது மாடுகிட்ட போச்சு புலி. அதுவும் முட்ட வர, `அட உன்னோட கொம்பு ரொம்ப அழகா இருக்குன்னு சொல்ல வந்தேன்ப்பா. இது தெரியாம என்னை முட்ட வர்றியே'ன்னு பயந்த மாதிரி நடிச்சது புலி. அதுக்கு மாடு அப்படியா, ரொம்ப நன்றி புலியாரே அப்படின்னு சொல்லுச்சு. உடனே புலி, `உன்னோட கொம்பை இன்னும் அழகாக்க என்கிட்ட ஒரு மருந்து இருக்கு. அதை என் குகையில வெச்சிருக்கேன். வேணுமா' அப்படின்னு கேட்டுச்சு. மாடும் உடனே சரின்னு சொல்லுச்சு. `அப்படின்னா நீ என் குகைக்கு ரெண்டு நாள் கழிச்சு வா'ன்னு சொல்லுச்சு புலி. மாடும் சரின்னு சொல்லிடுச்சு.

ஹைய்யா... மூணு மாடுகளையும் ஏமாத்திட்டோம். தனித்தனியா வர்ற மாடுகளைத் தினமொண்ணா அடிச்சி சாப்பிடலாம்னு நினைச்சிக்கிட்டே தன்னோட குகைக்குப் போச்சு புலி. ஆனா, மூணு மாடுகளும் தங்களோட இருப்பிடத்துக்குப் போனவுடனே, புலி வந்து பேசினதை ஒண்ணுக்குக்கொண்ணு சொல்லிக்கிச்சுங்க. அதனால, மாடுகளுக்குப் புலியோட பிளான் புரிஞ்சுபோயிடுச்சு. நாம யாரும் புலியோட குகைக்குப் போகக்கூடாதுன்னு மூணும் முடிவும் பண்ணிக்கிச்சுங்க. இதெல்லாம் தெரியாத புலி, மாடுங்க வரும், சாப்பிடலாம்னு நினைச்சு ஏமாந்து போச்சாம்.
- நாளை சந்திப்போம்
தினமும் உங்கள் வீட்டுச் சுட்டிகளுக்கு கதை சொல்ல நீங்கள் தயாரா? உங்களுக்காகவே தினம்தோறும் இரவு 7 மணிக்கு விகடன்.காமில் வெளியாகின்றன #BedTimeStories.