
படிக்கும் போதே கண்கலங்கிவிட்டது!
மாநிலத்தின் நலன்களைப் புறக்கணித்து, எல்லாவற்றுக்கும் மத்திய அரசைச் சார்ந்திருக்கும் வேலையைச் செய்கிறது பா.ஜ.க அரசு. ‘நீர் உரிமை நீர்த்துப்போகக்கூடாது!’ தலையங்கம் அருமை.
- தாஸ்
‘கொரோனாவுக்குப் பிறகும் கொண் டாடப்பட வேண்டியவர்கள்’ கட்டுரை நெகிழ்ச்சி. சமூகத்துக்காக சேவை செய்யும் தூய்மைப்பணியாளர்களை இந்தச் சமுதாயம்தான் மதித்து கவனித்துக்கொள்ள வேண்டும். இந்த வேலையை மனிதர்களுக்குப் பதில் ரோபோக்கள் செய்யும் காலம் வர வேண்டும்.
- மணிகண்டன்
செவிலியர்கள் ஒவ்வொருவரின் அனுபவங்களையும் படிக்கும்போதே கண்கலங்கி விட்டது. எல்லாவற்றிற்கும் மேல் மனிதநேயம் மகத்தான சேவையாற்ற வைக்கிறது. இவர்கள் எல்லோருக்கும் இறைவனின் பரிபூரண அருள் கிடைக்கட்டும். வாழ்த்துகள்!
- புவனா செல்வராஜ்
விசிறித் தாத்தா நடராஜன் அவர்களது சேவை ஆண்டுதோறும் தொடர மதுரையை ஆளும் மீனாட்சி அம்மனை வேண்டுகிறேன்.
- ஸ்ரீ

பிரிட்டனின் டாம் மூர் தாத்தா உண்மையான சமூக ஆர்வலர், வாழ்த்துவோம்!
- சிவசண்முகம் வாசு
தற்போதைய சூழலுக்கு மிகவும் தேவையான ஒரு தொடர் `மனதினிலே தோன்றும் மயக்கங்கள்.’ ருத்ரனுடன் இணைந்து மக்களைச் சமநிலைப் படுத்தவிருக்கும் இத்தொடரை ஆரம்பித்த ஆனந்த விகடனுக்கு நன்றி!
- நிரஞ்சன்