
கார்ட்டூன் சொன்ன உண்மை!
`அந்தக் குழந்தையே இவங்க தான்ல’ வர்ற பிரபலங்களின் குழந்தைத்தனமான முகங்கள் அசத்தலாக இருந்தன. என்போன்ற வயதான வாசகர்களுக்காக இளைய தலைமுறையின் பெயர்களைக் கீழே குறிப்பிட்டிருந்தால் இன்னும் வசதியாக இருந்திருக்கும்.
- பெ. பச்சையப்பன், கம்பம்.
ஹத்ராஸ் கார்ட்டூன் சபாஷ் . ஒரு கார்ட்டூன் வழியாகவே ஒரு உண்மையை சுலபமாகப் போட்டு உடைத்துவிட்டீர்கள்.
- சுகுமார் Vikatan.com
‘அணையாது எரியும் அநீதி’ கட்டுரை அருமை. ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்று பாகுபாடு பார்க்காமல் நெஞ்சை நிமிர்த்தி தவறுகளைச் சுட்டிக்காட்டும் விகடன் பணி சிறக்க வாழ்த்துகள்.
- ராஜவேல் Vikatan.com

திருநங்கைகள் பற்றிய கட்டுரை நெகிழ்ச்சி. திருநங்கைகளின் வாழ்கை மிகவும் கஷ்டமானது. வார்த்தைகளில் வடிக்க இயலாது, நீதிபதியே இப்படிக் கேள்வி கேட்டால் அந்தத் திருநங்கை என்னதான் செய்வார்?
- சண்முகசுந்தரம் Vikatan.com
எல்லா வாரமும் அஞ்சிறைத்தும்பி கதைக்காகக் காத்திட்டிருப்பேன். ஒரு குறும்படம் போல நிறைய ட்விஸ்ட்களோடு இருக்கும் அழகான எழுத்துநடை. தும்பி பறக்கட்டும்...பறந்துகொண்டே இருக்கட்டும்!
- கார்த்திகேயன் ஆறுமுகம் Vikatan.com