
செம நக்கல் ப்ரோ
வீட்டில் இருந்து அலுவலக வேலை செய்பவர்கள் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய கட்டுரை `நம் வீடு, நலம் நாடு’.
- ramasubramania Raja
`திட்டமிடுங்கள், தீர்மானியுங்கள்’ கட்டுரை நல்ல ஆலோசனை. இன்றைய இ.எம்.ஐ கலாசாரத்தில் இது மிகவும் தேவையான ஒன்று. அதிகமாக சம்பாதிப்பவர்கள்கூட சேமிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்வதில்லை. ஆடம்பரப் பொருள்களான விலையுயர்ந்த செல்போன், எல்.இ.டி டி.வி, கார்கள் போன்றவற்றை இ.எம்.ஐ மூலமாக வாங்கிவிட்டுச் சிரமப்படுகிறார்கள்.
- karthik
இயக்குநர் வசந்தபாலன் பரிந்துரைத்திருக்கும் படங்களைப் பார்க்கவே ஓராண்டு வேண்டும் போல.
Sachin

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் பேட்டி ஆச்சர்யமளிக்கிறது. நான் அதிகம் மதிக்கும் இயக்குநர், சீனாவை இன்னமும் ஒரு கம்யூனிச நாடு என நம்புவது விநோதம். அவர்கள் தற்போது கடைப்பிடிப்பது `சர்வாதிகாரம் கலந்த முதலாளித்துவம்.’
- Sundari
இந்த வார லூசுப்பையன் எல்லாமே செம நக்கல் ப்ரோ.
- Cricket