சினிமா
Published:Updated:

கடிதங்கள்

கடிதங்கள்
News
கடிதங்கள்

பூ இல்லை புஷ்பம்!

70 வயதிலும் தர்பார் நடத்தும் சூப்பர் ஸ்டாரைப் பற்றிய ஏ.ஆர். முருகதாஸின் கட்டுரை செம!

- அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

`மறதி’ சிறுகதையின் மூலம் பாழ்பட்டுப்போன விடுதலையை மனதை உறுத்தும்வகையில் சொல்லியிருக்கிறார் வாஸந்தி.

- rvkarnan, vikatan.com

`பாக்கெட் பால், பன்றியின் பாலாக இருக்கலாம்’ என்னும் இல.கணேசனின் பேட்டி சிரிப்பு ரகம். இது பூ இல்லை புஷ்பம் என்ற ரேஞ்சில் இருக்கின்றன பெரும்பாலான பதில்கள்.

- அஜித்லால், vikatan.com

பூ இல்லை புஷ்பம்!
பூ இல்லை புஷ்பம்!

‘இழப்பிலும் உயிர்த்தது மானுடம்!’ கட்டுரை கனக்கிறது. இத்தகைய சுவர்கள் தகர்த்தெறியப்பட வேண்டும்.

- பெருமாள், கோவை

`முட்டைக்கோஸ் துப்பாக்கி’ குறுங்கதை, உணவு அரசியலில் நிகழும் வன்முறையைத் தோலுரிக்கிறது.

- லட்சுமணன், மேட்டுப்பாளையம்

‘வாசகர் மேடை’ பகுதியில் வந்த ‘கலைஞர்’ கமலின் ஓவியம் அட்டகாசம்.

- ஆதி, மதுரை

பெண்ணியச் செயற்பாட்டாளர் ஓவியாவின் ‘வேட்டை மனநிலையின் வேர்கள்’ கட்டுரை, உணர்ச்சிவசப்படாமல் ஆணாதிக்க மனநிலையின் அடிப்படைகளை அலசுகிறது.

- பூங்குழலி, சேலம்.