Published:Updated:

கடிதங்கள்

கடிதங்கள்
News
கடிதங்கள்

டைமிங் சென்ஸ்!

சொல்வனம் பகுதியில் ‘முகவரியின் கதை’ கவிதை அருமையாக இருந்தது. மற்றவையும் நச்.

- மீ.யூசுப் ஜாகிர் வந்தவாசி

‘வைரமுத்து 40’ என்பதை உங்களின் ஆஸ்தான கவிஞரே `இனியவை நாற்பது’ என்று கூறிய பிறகு நாங்கள் வேறு என்ன சொல்ல!

- வெ.லட்சுமி நாராயணன் வடலூர்

தேர்தலில் நடக்கும் `கொடுக்கல் வாங்கல்’களை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது `தாலி மேல சத்தியம்’ கதை!

- டி.அம்புஜவள்ளி Vikatan.com

என்னவொரு டைமிங் சென்ஸு... அப்படிப் போடு அரிவாளை என்பது கணக்காக இருக்கிறது அஞ்சிறைத்தும்பியில் வந்திருக்கும் `அன்புள்ள ரஜினிகணேஷ்’ கதை.

- Vijay Balu VIkatan.com

டைமிங் சென்ஸ்!
டைமிங் சென்ஸ்!

ஜாஸ்மின் கட்டுரை அருமை. நம் சமூகத்தின் மோசமான தளைகளை உடைத்தெறிந்த ஜாஸ்மினைப் போன்றவர்களை முன்மாதிரியாக எடுத்துகொள்ள வேண்டும்.

- neon Logic Vikatan.com

இறையுதிர் காடு வாரம் வாரம் க்ளைமேக்ஸ் போல் இருக்கிறது. எப்போது முடியும் என்கிற ஆவலை ஏற்படுத்துகிறது.

- கார்த்திகேயன் பழனி.