Published:Updated:

கடிதங்கள்

தனிக்கட்சி!
News
தனிக்கட்சி!

தனிக்கட்சி!

ஒரு நல்ல மந்திரியாய் அரசின் செயல்பாட்டுக்குக் குட்டு வைத்திருக்கிறது தலையங்கம்.

- Murgadoss Sundarraj

அட்டைப்படத்தில் ஆளும் கட்சியின் தவற்றையும் கார்ட்டூன் படத்தில் எதிர்க்கட்சியின் தவற்றையும் சுட்டிக்காட்டி, தவறுகளைக் கண்டறிந்து சொல்வதில் தான் ஒரு தனிக்கட்சி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது விகடன்.

- பெ.பாலசுப்ரமணி திண்டுக்கல்

தமிழர்களின் நம்பர் 1 பத்திரிகை ஆனந்த விகடனுக்கு வாழ்த்துகள். தொடர்ந்து நம்பர் 1 பத்திரிகையாக தமிழர்களின் நெஞ்சங்களில் என்றும் நிலைத்திட என் விருப்பமும் வாழ்த்துகளும்.

- bharathy mohan

‘இனிமேல் இதுதான் இயல்பு வாழ்க்கை’ கட்டுரை சிறப்பு. இந்த நேரத்தில் இதுபோல சில பல செய்திகளையும் சிந்தனைகளையும் நாம் அனைவரும் கேட்க, நம் மனதிற்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும்.

- susee saravanan

தனிக்கட்சி!
தனிக்கட்சி!

குழந்தைகளைப் பெற்றோர்கள் கவனிக்கத் தவறுவதுதான் இந்த பாய்ஸ் லாக்கர் ரூம் போன்ற பிரச்னைகளின் ஆரம்பப்புள்ளி.

- தாஸ்

வீடியோ மீட்டிங் வெறித்தனங்கள் செம. பல வரிகள் அவரவர்களுக்குப் பொருந்தும். நன்றாக ரசிக்கும்படியாக இருந்தது.

- Sak

வாரம் ஒருமுறை வியாழக்கிழமை எப்ப வரும் என்று காத்திருந்து இறையுதிர்காடு படித்த பின் தான் அடுத்த வேலை. என்னமாய் எழுதுகிறார் இந்திரா சொளதரராஜன். போகர் காலத்தையும் கண்முன்னே காட்டுகிறார். இன்று நடக்கும் விஷயங்களையும் காட்டுகிறார்.

- Kannan R