பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

கடிதங்கள்

கடிதங்கள்
News
கடிதங்கள்

யதார்த்தம்....சுவாரஸ்யம்!

`சசிகலா: தேன்கூட்டில் எறிந்த கல்!’ கட்டுரை படித்தேன். சசிகலா வந்தால் மட்டுமே அ.தி.மு.க சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெறும் என்று தோன்றுகிறது.

ஸ்ரீ, Vikatan.com

`நினைவுகளில் நிலைத்திருப்பான் நிஜநாயகன்’ என்று சாகச இளைஞன் ஏகேஷ் பற்றி நீங்கள் எழுதியிருந்தது நூற்றுக்கு நூறு சரி.

ஆதி, தேவகோட்டை.

துரைமுருகன் பேட்டி உண்மையான, யதார்த்தமான, மனம் திறந்த பேட்டி.

வேலன், Vikatan.com

`மூளுமா மூன்றாம் உலகப்போர்?’ கட்டுரையில் இந்தியாவுக்கான ஆபத்துகள் பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள். தன்னிறைவு இல்லாத ஒரு தேசமாகத்தான் இந்தியா இறுதிவரை இருக்கப்போகிறதோ?

BBB, Vikatan.com

 யதார்த்தம்....சுவாரஸ்யம்!
யதார்த்தம்....சுவாரஸ்யம்!

புதிய தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டிருக்கும் பிபின் ராவத்துக்கு வாழ்த்துகள். இனியாவது அரசியல் இல்லாமல், கவனமாகப் பேச வேண்டும்.

தாஸ், Vikatan.com

ஜல்லிக்கட்டைப் போலவே ஆப்பிரிக்காவில் நடக்கும் சாவிகா விளையாட்டைப் பற்றி உதயச்சந்திரன் தொடரில் படித்தேன். சுவாரஸ்யமான தகவல்.

லோகநாதன், மதுரை.

துணையாய் நின்ற சமூகத்தால், துயர் கடந்த மருத்துவர் கிருஷ்ணவேணி மேன்மேலும் உயர வாழ்த்துகள்.

தேவநேசன், Vikatan.com