சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

கடிதங்கள்

கடிதங்கள்
News
கடிதங்கள்

தலையங்கத்துக்கு சபாஷ்!

‘மாசு’ங்கிற ரெண்டே எழுத்துல 2000 அர்த்தம் வர்றாப்ல ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வகை வகையாய் குறள்தந்தவரின் கார்ட்டூனைப் போட்டு கண்ணீர் விட வெச்சுட்டீங்களே!

- ஆர். விநாயகராமன்,திசையன்விளை.

‘நம் வரலாற்றைப் பாதுகாக்கவேண்டும் என்ற விழிப்புணர்வு இல்லை’ என ஆதங்கத்திலும் ‘இனியாவது விழித்துக்கொண்டு வரலாற்றைப் பாதுகாக்க வேண்டும்’ என அக்கறையிலும் எழுதப்பட்ட தலையங்கத்துக்கு ஒரு சபாஷ்!

- என்.பாலகிருஷ்ணன், மதுரை

கடிதங்கள்

‘நீங்க சிரிச்சா தீபாவளி’ பகுதியில் விகடனில் ஜோக்ஸ் எழுதும் அனைவரையும் பார்த்தேன். அவர்களுடனான உரையாடல் அருமை. இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்திய விகடனுக்கு நன்றிகள்!

- யூசுப் ஜாகிர், வந்தவாசி.

‘இன்னா நாற்பது’ தொடரில் மருத்துவர் சிவராமன் பேசிய ஒவ்வொரு விஷயமும் இன்றைய தேதிக்கு மிகவும் அவசியம். தொடர் சீக்கிரம் முடிந்தது போன்ற எண்ணம் ஏற்படுகிறது.

- சந்திரமோகன், ஈரோடு.

வம்பர் 13, 2019 ஆனந்த விகடன் இதழில், `மாபெரும் சபைதனில்' தொடர் சபைக்குறிப்புப் பகுதியில், லண்டன் மானுடவியல் பேராசிரியர் ஃபுல்லர் எழுதிய ‘Servants of the Goddess’ நூலுக்குப் பதிலாக, அதே பெயரில் வெளிவந்த இன்னொரு புத்தகத்தின் அட்டைப்படம் இடம்பெற்றுவிட்டது. தவற்றுக்கு வருந்துகிறோம். பேராசிரியர் ஃபுல்லர் எழுதிய ‘Servants of the Goddess’ நூல் தமிழில் `தேவியின் திருப்பணியாளர்கள்' என்ற பெயரில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடிதங்கள்