
செம மாஸ்!
சென்னை சங்கீத சீசன் ஆரம்பித்ததும் ‘சரிகமபதநி டைரி’க்குத்தான் என்னைப்போன்ற இசை அன்பர்கள் காத்துக்கிடக் கிறார்கள். கேலி கிண்டல் களுடன் இந்த வாரமும் அருமையோ அருமை!
- ரங்கநாயகி, சென்னை
மகாராஷ்டிரா அரசியலையொட்டிய தலையங்கத்தில் ‘தோற்றுப் போனவர்கள் மக்களும் ஜனநாயகமும்தான்’ என்று சொன்னது இக்கால அரசியல் கட்சி களுக்கான சவுக்கடி.
K. மாதேஸ்வரன், தர்மபுரி

‘மாஸ் ஹீரோ’ சிவகார்த்திகேயனின் பேட்டியும் ‘செம மாஸ்!’
இலக்சித், சென்னை
கே.டி (எ) கருப்புதுரை விமர்சனம் அருமை. ஆறிப்போயுள்ள சினிமா ரசனைக்கு அனல்மூட்ட வந்த நெருப்புத்திரை!
கருணாகரன், போரூர்
தமிழ்த்தாயின் தலைமகன் எல்லீசன் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும். ‘மாபெரும் சபைதனில்’ தொடரில் எல்லீசன் பற்றிய அறிமுகம் வழக்கம்போல அருமை.
ராஜேஸ்வரன் Vikatan.com
அர்ச்சனா அவர்களின் பேட்டி உணர்வு பூர்வமாக இருந்தது. அவர் ஒரு நல்ல நடிகை என்பதற்கு அவருடைய படங்களும் இந்தப் பேட்டியும் சான்றாக இருக்கும்.
SVS மணியன், கோவை
ராஜாசந்திரசேகரின் ‘சிவப்பு நிற ஃபிரிட்ஜ்’ கவிதை நிதர்சனத்தின் வெளிப்பாடு.
கோபுகண்ணன், விழுப்புரம்