பிரீமியம் ஸ்டோரி

`புதிய வாசல்...’ விகடனின் தலையங்கமும் வழிகாட்டும் விளக்குதான்.

- வேலன்

ஒரு திரைக்கதை ஆசிரியராக நோலனின் மேஜிக் வித்தையை, சுருக்கமாக அழகாகப் பதிவு செய்திருக்கிறது ‘நோலன் என்னும் ஏமாற்றும் கலைஞன்’ கட்டுரை.

- அஜித்லால்

‘நீ என்பது நிறமல்ல!’ என்னும் சுகிர்தராணியின் கட்டுரையை வெளியிட்ட ஆனந்த விகடனுக்கு நன்றி. சமூகம் அதன் பார்வையை மாற்றிக்கொள்ள வேண்டிய தருணம் இது.

- கணேசன்

கடிதங்கள்

‘அதிபருக்கு எதிராய் அமெரிக்க அணுகுண்டுகள்’ கட்டுரை நவம்பரில் வரும் தேர்தலை நமக்கு நினைவுறுத்துகிறது. ட்ரம்ப் மூலம் ஆதாயம் அடைந்தவர்கள், தற்போது அவரைத் தாக்கி ஆதாயம் அடைகிறார்கள்.

- தாஸ்

தமிழ்ப்பிணம் குறுங்கதை அருமை. உண்மையிலேயே ஒரு தனித்துவமான தமிழ்ப்புலனாய்வு தமிழர்களுக்கு மட்டுமே சொந்தமானது. ரத்தத்திலே கலந்தது!

- கார்த்திகேயன் ஆறுமுகம்

‘துளிர்ப்பு’ அருமையான சிறுகதை. தற்போது நடைபெற்றுவரும் சூழலில் கதைப் படைப்பு அருமை.

- கிஷோர்கிரண்குமார்

‘லாக்டௌனில் பவர்ஃபுல் ஹீரோக்கள் வீட்டுக்குள்’ கருத்தும் கார்ட்டூனும் அட்டகாசம்.

- பெ.பாலசுப்ரமணி திண்டுக்கல்

‘இறையுதிர்காடு’ மிகமிக அருமையான தொடர். முடிந்துவிட்டதே என வருத்தமாக உள்ளது.

- தாமரைச் செல்வி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு