Published:Updated:

கடிதங்கள்

 கடிதங்கள்
பிரீமியம் ஸ்டோரி
கடிதங்கள்

மோட்டார் விகடன்

கடிதங்கள்

மோட்டார் விகடன்

Published:Updated:
 கடிதங்கள்
பிரீமியம் ஸ்டோரி
கடிதங்கள்

‘டாக்டர் ஆகணும்; இன்ஜீனியர் ஆகணும்; நடிகர் ஆகணும்’ எனும் குழந்தைகளைக் கேள்விப்பட்டிருக்கேன். வேலட் பார்க்கிங் டிரைவர் ஆக விரும்பும் சிறுவன் ஆரூஷின் ஸ்டேட்மென்ட், வியப்பாக இருந்தது. கார்களின் மீது அத்தனை காதலா தம்பி?

- கே.நவீன், திருப்பூர்.

 கடிதங்கள்

ட்ரைபர் ஃபர்ஸ்ட் லுக் படித்தேன். ‘4 மீட்டருக்குள் 7 சீட்டரா?’ இதற்காகவே ரெனோவுக்கு ஒரு பெரிய லைக்! ஆனால், டீசல் கொண்டு வராததற்கு ரெனோவுக்கு டிஸ்லைக்!

- மதன்.சி.வி, திருவான்மியூர்.

ஸ்யூவி ஸ்பெஷல், இந்த இதழ் செம வெயிட்டு! வென்யூ, எக்ஸ்யூவி300, ட்ரைபர், செல்டோஸ், ஹெக்டர் என்று எத்தனை எஸ்யூவிக்கள்!

- பரணேஷ், காஞ்சிபுரம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஜிக்ஸர் 155 Fi இன்ஜின், எடையும் விலையும் கூடிடுச்சு! ஆனால், பவர் குறைஞ்சிடுச்சே! அதேபோல், கிக்கர் இல்லாதது பெரிய மைனஸ்.

- ஜனா கி.மூர்த்தி, மயிலாடுதுறை.

மூணார் பக்கத்தில் வட்டவடாவா? வெரைட்டியான இடங்களை எப்படி ஐயா கண்டுபிடிக்கிறீர்? ஸ்ட்ரொபெர்ரி தோட்டம், பெரியகுடை அருவி என்று பார்த்ததுமே போகத் தூண்டுகிறது வட்டவடா!

- கோவிந்தராஜ், வேலூர்.

னோவா காரின் ரீ-சைக்கிள் சிஸ்டம் இன்ஃபோகிராஃபி அருமை. கண்ணாடி, நைலான், கார்ப்பெட் இதெல்லாமே குப்பையில்தானா? இதனால் மற்ற நிறுவனங்களுக்கு லாபம்தான்!

- யோகேஷ்வரன், திருச்செந்தூர்.

ன் காருக்கும் நான் பவர்ஃபுல் ஹெட்லைட் மாற்றியிருக்கிறேனே! தீப்பிடிக்கும் வாய்ப்பு இருக்குமா? விமல்நாத் கட்டுரை படித்ததும் கொஞ்சம் ஜெர்க் அடித்துவிட்டது. எனினும் கவனமாகவே இருக்கிறேன். இனி யாருக்கும் வெளிமார்க்கெட் ஹெட்லைட் பரிந்துரை செய்ய மாட்டேன்.

- கோகிலா கண்ணன், பாலக்காடு.

ரேஞ்ச்ரோவர் போன்றதொரு ஜயன்ட், எல்லாச் சாலைகளுக்குமே ஒரு லெஜெண்ட்தான். சஸ்பென்ஷனை ஏற்றி இறக்கி, ஆஃப்ரோடுக்குக்கூட க்ரூஸ் கன்ட்ரோல் இருப்பதெல்லாம்... சான்ஸே இல்லை.

- சரவணன், திருச்சி.

கியா செல்ட்டோஸ், ஒரு தாய் வயிற்றுப் பிள்ளையான க்ரெட்டாவுக்கே போட்டியாக வருகிறதா? சர்வீஸ் சென்டர்களிலும் கலக்குகிறதே கியா? 265 டச் பாயின்ட்ஸா? டெஸ்ட் ரிப்போர்ட்டுக்காகக் காத்திருக்கிறோம்.

- தீபக் யாதவ், பாண்டிச்சேரி.