யப்பா... வாசகர்கள் எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க? ஒரு கேள்விக்கு இவ்வளவு பதில்களான்னு திண்டாட வைக்குது வாராவாரம் வாசகர் மேடை.
- மீ. யூசுப் ஜாகிர், வந்தவாசி
ஏதோ ஒரு தருணத்தில், ஏதோ ஒரு யோகத்தில் தமிழக முதல்வராக அறிவிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி, “ஆட்சி செய்தாரா இல்லையா?” என்ற சாமானியனின் சந்தேகத்தை ஆனந்த விகடன் கவர் ஸ்டோரி உரக்கச் சொல்லியது.
- சி.கார்த்திகேயன், சாத்தூர்

“அன்பெனும் மீட்புக்கயிறு!” கட்டுரை நெகிழ்ச்சி. இந்த உலகம் பணம், நிறம், உருவத்திற்கு மதிப்பு கொடுப்பதை நினைத்துப் பார்த்தால் எவ்வளவு கேவலமான மனிதர்களுடன் நமது உலகம் படைக்கப்பட்டுள்ளது என்றே எண்ணத் தோன்றுகிறது.
- ஸ்ரீ, Vikatan.com
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSபீட்டர் அல்போன்ஸ் பேட்டியில் அவ்வளவு யதார்த்தம். இனிமேலும் பலரை இகழ்ந்து பேசி சிலரது வாக்குகளுக்காகச் செய்யப்படும் அரசியல் எடுபடாது.
- திருநாவுக்கரசு தக்ஷிணாமூர்த்தி, Vikatan.com
சமூகநீதியின் தலையில் நீதிமன்றச் சுத்தியல்! கட்டுரை சபாஷ். சாதிப்பிரிவினை உள்ள நாட்டில், உரிமைகளை ஒதுக்கீட்டின் மூலமே தரமுடியும்.
Ganesh Ram, Vikatan.com
கன்னிமாடம் போன்ற சமூகத்துக்குத் தேவையான படங்களுக்கு, ஆனந்த விகடன் வழக்கம்போல் அதிக மதிப்பெண் தந்திருப்பது மகிழ்ச்சி.
பாலன், சைதாப்பேட்டை.