இலக்கியத்துறை சார்ந்த விருதுகள் பற்றிய கட்டுரை அருமை. டாப் 10 மனிதர்கள் விருதுகளும் அட்டகாசம். எல்லாவற்றுக்குமானது விகடன் மட்டும்தான்.
மீ.யூசுஜாகிர், வந்தவாசி.
`கோடீஸ்வரி’ கௌசல்யா கார்த்திகாவுக்கும் அவரின் கணவருக்கும் வாழ்த்துகள்... பேட்டியை வெளியிட்ட விகடனுக்கு நன்றி!
Sugar, Vikatan.com

`காலம்’ அறிந்து வெளியிடப்பட்டிருக்கும் அற்புதமான தகவல். செல்வம் அவர்களுக்கும் ‘விகட’னுக்கும் நன்றி!
சர்வசித்தன் Vikatan.com
`புதைத்த இடத்தில் உயிர்த்திருக்கிறோம்’ கட்டுரை கண்ணீர் வரவழைக்கிறது. கருணையுடன் புதுச்சேரி அரசு இவருக்கு உதவ வேண்டும்.
வேலன் VIkatan.com
“அவமானங்கள் தாங்கி வளர்ந்தேன்; தாண்டி வளர்வேன்!” கட்டுரை அருமை. பல அவமானங்களைத் தாண்டித்தான் பலர் முன்னே வந்திருக்கிறார்கள். பாத்தியம்மாள் சாதித்துக் காட்ட வேண்டும். அவருக்கு என் வாழ்த்துகள்.
Kowsy, Vikatan.com
பெரியாரின் வழிகாட்டுதலால்தான் தமிழகத்தில் பலதரப்பு மக்களும் சமூகத்தில் பலனடைந்து இருக்கிறார்கள் என்பதை இந்தியாவே அறிந்துள்ள நிலையில், “வாழ வைத்த தமிழ் மக்களே” எனச் சொல்லும் ரஜினிகாந்த் யாரோ இயக்கும் எந்திரன் ஆகிவிட வேண்டாம்.
C. கார்த்திகேயன், சாத்தூர்.
ஆஸ்கர் பட்டியல் எல்லாம் சரி. யூதர்கள் இரண்டாம் உலகப் போரை மிகைப்படுத்தி தங்களுக்கு அனுதாபத்தைத் தேடிக்கொள் கிறார்களோ?!
Aar, Vikatan.com