Published:Updated:

கடிதங்கள்

கடிதங்கள்
கடிதங்கள்

இது காலத்தின் கட்டாயம்!

‘ஏன் இத்தனை குழப்பங் கள்?’ தலையங்கம் அருமை. உறுதிமிக்க முடிவுகளை எடுக்கவேண்டிய தருணத்தில் ஏன் இந்தக் குழப்பம்? மக்களின் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு.

- ௧.ரவீந்திரன்

ஆனந்த விகடன் இதழை வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் நாம் ஒரு நாளாவது ஆனந்த விகடனின் இதழில் இடம்பெற மாட்டோமா என்று ஏங்கிய முகவர்களையும் நேர்காணல் செய்த விகடனுக்கு சிரம்தாழ்த்தி நன்றிகள்!

- பெ.பாலசுப்ரமணி, திண்டுக்கல்

ஆண் செவிலியர்கள் கட்டுரை நெகிழ்ச்சி. நானும் ஓர் ஆண் செவிலியர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். அதேபோல் கொரோனா வார்டில் பணி முடித்துவிட்டேன், பல இன்னல்களுக்கு மத்தியில் வெற்றிகரமாக...

- வெ. பெருமாள்

கடிதங்கள்

‘நாங்கல்லாம் அப்பவே அப்படி’ பேட்டியில் பால பாரதி பகுதி செம்ம. அம்மா ஒரு போராளி! இவர்கள் போன்றவர்கள் நாட்டுக்கு நிறையவேண்டும் !

- chenar

பிரியாமணி பேட்டியில் மார்டன் டிரஸ்ஸில் கையில் துப்பாக்கி ஏந்தி நிற்கிறார். ஆனால், முத்தழகு மார்டன் டிரஸ்ஸில் இருப்பதுபோலத்தான் தெரிகிறது. வாருங்கள், முத்தழகு. முத்தழகாக ரசிகர்களின் மனம் கவருங்கள்.

- சுகுமார்

‘என்னவாகும் இந்தத் துறைகள்’ கட்டுரை காலத்தின் கட்டாயம். நம்பிக்கை என்னும் மூலதனம் மூலம் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியிருக்கும் கொரோனா ஊரடங்கு மக்களுக்குப் பல புதிய ஐடியாக்கள் மூலம் கடும் உழைப்பைத் தந்து எல்லாத் துறையிலும் முன்னேற்றத்திற்கு வழிவகுக்க வேண்டும்.

- சுசீ சரவணன்

அடுத்த கட்டுரைக்கு