கொடைக்கானல் பற்றிய கட்டுரை அருமை. பல இனிமையான தகவல்களைக் கட்டுரையாளர் கொடுத்துள்ளார்.
- விஸ்வநாதன்
ஒப்பிட முடியாது; கூடாதும்தான். இருந்தாலும் பாலா-விக்ரம் போல பொதுவெளியில் பேசாமலே இருந்திருக்கலாம் மிஷ்கின் - விஷால். கிட்டப்போனால் முட்டப்பகை.
- சிவகுமார்

நந்தா பேட்டி படித்தேன். இவர் சிரிச்சு நடித்ததைப் பார்த்ததே இல்லை!
- பார்வதி
மூக்குத்தி அம்மன் எல்லாம் சரி. தியேட்டரில் சாமி வந்து ஆட ஆட்களை ஏற்பாடு செய்துகொள்ளவும்.
- ஏ.ஆர்.ஆர்
பாலைவனத்துக் கப்பல் ஒட்டகம் பற்றிய கவிதை பாலைவனத்து நீரைப்போல் மனதைக் குளிர்வித்தது.
- ௧.ரவீந்திரன்.
நவபாஷாண லிங்கம் மற்றும் அதன் கூடவே இருக்கும் ஏடுகளும் உண்மையானதா..? கதைக்காகச் சேர்க்கப்பட்டதா..? உண்மையெனில், தற்போது எங்கு உள்ளது..? ‘இறையுதிர்காடு’ விறுவிறு.
- பால்முருகன்
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism