சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

கடிதங்கள்

கடிதங்கள்
News
கடிதங்கள்

ஜோர்... ஸ்கோர்!

‘தேசிய அளவில் தேய்கிறதா பா.ஜ.க’ கட்டுரையில் வரும் ‘மோடி அலை அவருக்கு மட்டும் வேலை செய்கிறது, பிறருக்கு அல்ல’ என்பதை பா.ஜ.க புரிந்துகொள்ளுதல் நலம்.

- மணி, புதுக்கோட்டை

‘எப்படியிருந்த சரண், இப்படி ஆகிட்டாரே’ என எண்ண வைக்கிறது மார்க்கெட் ராஜா MBBS விமர்சனம்.

- இஸ்மாயில், திண்டுக்கல்

இந்தியா என்னும் தேசம் இன்னும் சில காலமாவது தன் பன்முகத்தன்மையைக் காப்பாற்ற அம்பேத்கரின் ‘நீலச்சுடரை’ ஏந்த வேண்டியது அவசியம்.

- ராஜா, தேனி

சமூகவலைதளங்களின் அரசியல் அட்மின் கட்டுரை ஜோர்.

- ப்ரியா, பரமக்குடி

கேடி படத்தின் டீம் பேட்டி சிறப்பு. அந்தச் சுட்டி அட்டகாசமாக ஸ்கோர் செய்கிறான்.

- சிவன், மலைக்கோட்டை

கடிதங்கள்

அப்பாவித் தொழிலாளர்களின் பாதுகாப்பற்ற நிலையை ‘அடுத்த கதை’ சிறுகதையில் படித்து அதிர்வில் உறைந்துபோனேன். வேலை அமர்த்தும் இந்த மாபியாக்களின் வலிமையையும், பின்னணியையும் சொல்லாமலே உணர்த்திவிட்டார் ஆதவன் தீட்சண்யா. வாழ்த்துகள்!

- RV Karnan, vikatan.com

டெக்னாலஜி பற்றிய வெப் சீரிஸ் கதைகள் பயத்தை விதைக்கின்றன.

- நெல்லை குரலோன், தென்காசி