சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

கடிதங்கள்

கடிதங்கள்
News
கடிதங்கள்

தனுஷ் + சுந்தர்.சி

டிடி பேட்டி அருமை. காலம் எல்லாவற்றையும் மாற்றும்.

- சுதா, Vikatan.com

தப்பட் விமர்சன மெல்லாம் இருக்கட்டும். அறைந்தால் விவாகரத்து சாத்தியமா என்ன?

- விஜி, திருச்சி

படம் வேற லெவல் என்று சொன்னது `கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’-க்குப் பொருந்தும்.

- குருமூர்த்தி, Vikatan.com

திரௌபதி படத்துக்கான மார்க் செம. விகடன் சரித்திரத்தில் தரமான, நேர்மையான, தைரியமான விமர்சனம். நாற்பது வருட விகடன் வாசகன் என்பதில் பெருமைகொள்கிறேன்.

- மணிமாறன், Vikatan.com

`காதல் வந்திடுச்சி’ கதாநாயகிகள் கட்டுரை சிரிப்பு வரவழைக்கிறது. ஒரு தனுஷ் படத்தையும், ஒரு சுந்தர் சி படத்தையும் சேர்த்துப் பார்த்த ஃபீலிங்...

- லோகநாதன், Vikatan.com

`தொடர்பு எல்லைக்கு வெளியே!’ கட்டுரையின் மூலம் தொலைத்தொடர்புத் துறை செய்த அத்துமீறல்கள் வெட்ட வெளிச்சமாகின்றன.

- சரவணன், திண்டிவனம்

இன்றைய நாட்டின் சூழலுக்கு இந்த வார ‘அஞ்சிறைத்தும்பி’ கதைக்களம் சிறப்பான தேர்வு.

- ராமன், பொள்ளாச்சி.