Published:Updated:

கடிதங்கள் - செம பாஸ்!

அரசு அலுவலர்கள் பற்றிய ‘மாபெரும் சபைதனில்’ கட்டுரை அருமை.

Letters
Letters

ழலில் முதலிடம் வகித்தாலும், தமிழ்நாடு, நிர்வாகம் மற்றும் ஜி.டி.பியில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது எப்படி என்று நான் மூளையைப் போட்டுக் குழப்பிக்கொண்டிருந்தேன். தெளிவான விளக்கம் தந்துவிட்டீர்கள்!

- ராஜேஸ்வரன் பரமேஸ்வரன்

‘இளையராஜாவின் பார்வையாளர் நேரம்’ குறுங்கதையில் ராஜாவின் 80’ஸ் பாடல்களைப் பார்த்த எல்லோருக்கும் இருக்கும் மனக்குறையைப் போக்கிவிட்டீர்கள். அதிலும் அந்த பிரெயில் எழுத்துகள்... சான்சே இல்ல!

பிரமோத் , சேலம்

`றியடி' விஜயகுமாரின் டைட்டில்கார்டு முதல் சினிமா என்னும் கனவின் தயாரிப்புச் செலவைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.

ராஜா, தூத்துக்குடி

Kamal Haasan
Kamal Haasan

வானதி சீனிவாசனின் பதில்கள் ஒவ்வொன்றும் நெத்தியடி. சின்ன அக்காள் தலைப்பு செம பாஸ்!

ராஜா சொக்கலிங்கம், vikatan.com

திரைமொழியின் உச்சத்தைத் தொட்டிருக்கிறது மலையாள மொழிப்படமான ‘ஜல்லிக்கட்டு’. வாழ்த்துகள் லிஜோ ஜோஸ் பொலிச்சேரி.

சாதிக் ரஹிமன்சா VIkatan.com

சாயிபாபா தொடரில் ஏவி.எம்.சரவணன் சொல்லியிருப்பது எவ்வளவு ஆத்மார்த்தமானவை. பாபாவைக் கும்பிட்டால் நிம்மதி வருகிறது. நிம்மதி வந்துவிட்டாலே சந்தோஷம் வந்துவிடும் தானே!

வடிவேலு, தேனி

வேட்டி கட்டினால் மட்டும் ஓட்டு விழுமா எனக் கமல் கேட்பது சரிதான். ஆனால், என்ன செய்தால் ஓட்டு விழும் என்பதைக் கமல் எப்போது தெரிந்துகொள்ளப்போகிறார்?

பிரகாஷ், தேனி