இளசுகளின் கிரஷ் யார்? எல்லாம் சரி. இன்னுமா சிம்புவை லிஸ்ட்டில் வைத்திருக்கிறீர்கள், விட்டால் விகடன் தாத்தாவையும் இணைத்துக் கொள்வீர்கள் போல.
உமா, வந்தவாசி
`சீறு’ விமர்சனம் படிக்கையில், ஜீவாவுக்குக் கதைத் தேர்வு மிக முக்கியம் எனத் தோன்றுகிறது.
Chalam, Vikatan.com
சசிகலா விடுதலை, ரஜினியின் கட்சி உதயம் போன்றவையெல்லாம் பத்திரிகைகளுக்குத்தான் பெரிய அரசியல் மாற்றம் ஏற்படுத்தும் எனத் தோன்றுகிறது. நிஜத்தில் இவையெல்லாம் அரசியல் காமெடிகள்தான்.
Ajithlal, Vikatan.com
செல்லூர் ராஜு பேட்டி அருமை. செல்லூர் ராஜுவா இப்படி ஆழ்ந்த கருத்துக்களோடு..?!
அரிமா இராஜாராம், Vikatan.com

நாராயணசாமி பற்றிய `கைத்தலம் பற்றினோம்’ கட்டுரை நம்பிக்கையையும் விடாமுயற்சியையும் நம்முள் விதைக்கிறது.
valliammai, Vikatan.com
`இயற்கையில் எல்லாம் இருக்கு’ கட்டுரை சிறப்பு. நாம் இயற்கையானதைச் சாப்பிடுவதைப்போல விவசாயமும் இயற்கை யானதாக இருக்க வேண்டும்.
Shree, Vikatan.com