கைதி படத்துக்கு 44 மதிப்பெண் கொடுத்து, விகடனின் தாராள மனப்பான்மையைப் புரிய வைத்துவிட்டீர்கள்.
- மதிராஜா, சின்னபுங்கனேரி
இந்தித் திணிப்பு எதிர்ப்பு என்பது தமிழக மக்களின் ஜனநாயக உரிமை. அதை வரவேற்று பிரபாத் பட்நாயக் பேசியிருப்பதை வரவேற்கிறேன்.
- பிரபு, தேனி
அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்காத பெண்கள்தான் உண்மையில் கிங் மேக்கர்களாக இருக்கிறார்கள் என்று சொல்லும் ‘அரசியல் இல்லத்தில் நிச்சயிக்கப் படுகிறது’ கட்டுரை பக்கா.
- சரவணன் , கும்பகோணம்

பெரியார் பற்றிய ‘ஜீன்ஸ் பெரியார்’ குறுங்கதை, ‘அறிவு வளர கேள்வி கேள்’ என்பதை நினைவுறுத்துகிறது.
- ரேவதி திருவேங்கடம் vikatan.com
‘ஆழ்வார் தாத்தா’ சிறுகதை மனதை ஈரமாக்கும் அட்டகாசமான ஒரு கதை. வாழ்த்துகள்.
- வள்ளி சிதம்பரம் vikatan.com
அமீர் பேட்டி சரிதான். யாருக்கு அக்கறை, யாருக்கு விளம்பர நோக்கம் என்பதை மக்கள் முடிவுசெய்துகொள்வார்கள்.
- ஜீவா, சேலம்
ஆயுஷ்மான் குரானாவின் சினிமாப் பயணம் நம்மூர் சிவகார்த்திகேயனை நினைவுபடுத்துகிறது. என்ன, சிகா ரிஸ்க்தான் எடுக்க மறுக்கிறார்.
- தமிழ், புதுக்கோட்டை
