கட்டுரைகள்
பேட்டிகள்
Published:Updated:

கடிதங்கள்

கடிதங்கள்
News
கடிதங்கள்

எங்கு சென்றாலும் சிறப்பு!

உண்மையான ‘சுயச் சார்பு இந்தியா!’ தலையங்கம் அருமை. நாட்டின் பெரும் பான்மையினராக இருக்கும் அடித்தட்டிலிருக்கிற வியாபாரிகள், விவசாயிகள், சிறு குறு தொழில்செய்வோர் இவர்களுக்கு ஆறுதலான செய்திகளை ஒருபோதும் இந்த மத்திய அரசு சொல்லாது என்று தெரிந்த பின்னும் எதிர்பார்த்து ஏமாறுவது நமது தவறே!

- சரவணக்குமார் சின்னசாமி

அடுத்த மாநிலங்களில் அசத்தும் தமிழர்கள் கட்டுரை நெகிழ்ச்சி. நம் தமிழர்கள் எங்கு சென்றாலும் சிறப்பாகச் செயல்படுகின்றனர்.பெருமையாக உள்ளது.

- வெங்கடேஷ் ரெட்டி

‘இது ஒரு லாக்டெளன் காலம்’ - செம்ம கட்டுரை. வீட்டுக்கு வீடு நடக்கறதை வீடியோ பிடிச்சமாதிரி விவரிச்சு அசத்திட்டீங்க. பிரமாதம்!

- செந்தில்

கடிதங்கள்

‘சாதியை, கடவுளை, மதத்தை, கட்சிகளைக் காப்பாற்றப் போராடியவர்கள் யாரையும் அவை எதுவும் காக்கவில்லை. சுயமுன்னேற்றத்துக்கு அறிவு வளர்ச்சி ஒன்றே வழிகோலும் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டிய காலமிது’- மிகவும் எளிமையாக அனைவரது மனங்களிலும் தைக்குமாப்போல் கூறிய இவ்வார்த்தைகளில் தொனிக்கும் உண்மை, உலகம் உள்ளவரை பொன்வண்ணன் அவர்களைப் பற்றியும் பேசச் சொல்லும். அவரது ஓவிய நூலை எதிர்பார்க்கிறேன்.

- சர்வசித்தன்

ஒரு நிழல் இவ்வளவு வெப்பமாக இருக்கக்கூடும் என்று கற்பனை செய்து பார்த்ததில்லை. அஞ்சிறைத்தும்பியில் வெளிவந்த ‘வழி தவறி வந்த நிழல்’ குறுங்கதை!

- விஜய் பாலு