Published:Updated:

கடிதங்கள்

கடிதங்கள்
கடிதங்கள்

மீண்டும் வந்தோம்!

மூன்றுவார விடுமுறைக்குப் பிறகு மீண்டும் அச்சில் வந்துள்ள ஆனந்த விகடனுக்கு வாழ்த்துகள்.

- க ரவீந்திரன்

சிலநாள்கள் பிரிந்திருந்த தோழனைச் சந்திக்கும் உற்சாகத்துடன் காத்திருக்கிறோம்.

- ஜானகி ராஜு

40 வருடங்களாக ஆனந்த விகடன் வாங்குகிறேன். கடந்த மூன்று வாரங்களாக வாங்கவில்லை. வருத்தமாக இருந்தது. அந்த வருத்தம் ஆனந்த விகடன் இதழை வாங்கியவுடன்தான் தீர்ந்தது.

- ஜீவலதா

என்னதான் இணையத்தில் படித்தாலும் புத்தகமாய் கைகளில் ஏந்திப் படிக்கிற சுகமே சுகம்.

- சரவணகுமார் சின்னசாமி

மீண்டும் வந்தோம்!
மீண்டும் வந்தோம்!

ஆனந்த விகடன் புதிய கோணத்தில் வருவதை நினைக்கையில் இன்று புதிதாகப் பிறந்தோம் எனத் தோன்றுகிறது.

- இளங்கோ ம கம்பம்

லேடி ஆயுஷ்மான் என்று அழைக்கப்படுவதில் டாப்ஸியின் வருத்தம் புரிகிறது. நடித்தோமா, சம்பாதித்தோமா, வெளிநாட்டு மாப்பிள்ளையைக் கட்டிக்கொண்டு செட்டில் ஆனோமா என்றிருக்கும் நடிகைகளுக்கு மத்தியில் டாப்ஸி நிச்சயம் வேறொரு முன்னோடிதான்.

- அஜித்லால்

ஜெயமோகன் என்னும் நல்லதொரு மருத்துவரை நாம் இழந்துவிட்டோம். அவர் ஆன்மா சாந்தி அடையட்டும்.

- காந்திமதி

அடுத்த கட்டுரைக்கு